For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜிம்மிற்கு செல்வதற்கு முன் இந்த பொருட்களை தெரியாம கூட சாப்பிட்ராதீங்க...இல்லனா பிரச்சினை உங்களுக்குதான்!

கடுமையான உடற்பயிற்சிக்கு உங்கள் உடலில் போதுமான எரிபொருளை நிரப்ப வேண்டும் என்பது அடிப்படை விதி. தீவிர உடற்பயிற்சிக்கு முன் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுதான் உங்கள் செயல்திறனை நிர்ணயிக்கிறது.

|

கடுமையான உடற்பயிற்சிக்கு உங்கள் உடலில் போதுமான எரிபொருளை நிரப்ப வேண்டும் என்பது அடிப்படை விதி. தீவிர உடற்பயிற்சிக்கு முன் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுதான் உங்கள் செயல்திறனை நிர்ணயிக்கிறது. வொர்க் அவுட்டுக்கு முன் எதையும் சாப்பிடாமல் இருப்பது உங்கள் செயல்திறனைக் குறைக்கும் அதே வேளையில், உடற்பயிற்சிக்கு முன் தவறான உணவை சாப்பிடுவதும் செயல்திறனை பாதிக்கும்.

Foods Should Avoid Before a Workout in Tamil

வொர்க்அவுட்டிற்கு நடுவில் நீங்கள் வயிறு வீங்கியதாகவோ, வாயுத் தொல்லையாகவோ அல்லது அடிக்கடி பிரேக் தேவைப்பட்டாலோ, உடற்பயிற்சி செய்வதற்கு முன் நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள் என்று சிந்திக்க வேண்டும். உடற்பயிற்சிக்கு முன் கண்டிப்பாக சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆளிவிதை

ஆளிவிதை

ஆளி விதையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது நிச்சயமாக உடலுக்கு நல்லது. ஆனால் அதிகப்படியான நார்ச்சத்து உங்கள் வயிற்றில் வாயு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும், இது உங்கள் வொர்க்அவுட்டைத் தடுக்கலாம். மக்கள் உடற்பயிற்சி செய்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு அதிக நார்ச்சத்து உணவுகளை உட்கொள்ளக்கூடாது. ஆளிவிதை தவிர, ஃபைபர் சப்ளிமெண்ட்ஸ், காய்கறி சாலடுகள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட வேகவைத்த பொருட்களைத் தவிர்க்கவும். கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டின்கள் உள்ளதைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

புரோட்டின் பார்

புரோட்டின் பார்

சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் புரோட்டீன் பார்களை கண்டு ஏமாறாதீர்கள். நிறைய புரோட்டின் பார்களில் 200 கலோரிகளுக்கு மேல் மற்றும் மிகக் குறைந்த புரதத்தைக் கொண்டிருக்கின்றன. அடிப்படையில் அவை வழக்கமான சாக்லேட் மட்டுமே. உங்கள் புரோட்டின் பாரில் 10 கிராமுக்கும் குறைவான புரதம் இருந்தால், அது உங்கள் இரத்த சர்க்கரை அளவை வேகமாகக் குறைத்து, உங்களை வேகமாக சோர்வடையச் செய்யும்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

குறைந்த கொழுப்புள்ள பால் கூட உடற்பயிற்சியின் போது உடலைத் தடுக்கலாம். புரோட்டீன் ஆற்றலின் முதன்மை ஆதாரம் மற்றும் உங்கள் தசைகளை மீட்டெடுக்க உதவுகிறது, ஆனால் அதிக புரத உணவுகள் மற்றும் பானங்களில் போதுமான கார்போஹைட்ரேட்டுகள் இல்லையென்றால், அவை உங்கள் ஆற்றலை வேகமாக வெளியேற்றும். கொழுப்புகளைப் போலவே, புரதமும் மெதுவாக இரத்தத்திற்குச் செல்கிறது, நீங்கள் ஒரு பெரிய உணவை சாப்பிட்டாலும் சோர்வாகவும் நடுங்குவதாகவும் உணர்வீர்கள்.

முட்டை

முட்டை

வேகவைத்த முட்டைகள் புரதத்தின் நல்ல மூலமாகும், ஆனால் சீரான ஆற்றலுக்கு போதுமான கார்போஹைட்ரேட்டுகள் இல்லை. மேலும், புரதம் மற்றும் முட்டைகள் செரிமானம் ஆவதற்கு முன்பு நீண்ட நேரம் வயிற்றில் இருக்கும், இது உங்கள் வொர்க்அவுட்டின் போது உங்களை கனமாக உணர வைக்கும். உடற்பயிற்சிக்கு செய்வதற்கு முன் பச்சை முட்டைகளை சாப்பிடுவது நல்லதல்ல. பச்சை முட்டையில் சால்மோனெல்லா பாக்டீரியா உள்ளது, இது வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். உங்கள் முட்டை மெனுவை ஒரு கப் சாதாரண கிரேக்க தயிர் அல்லது பழ சாலட் கலந்த சீஸ் கொண்டு மாற்றுவது சிறந்தது.

கார்பனேற்றப்பட்ட பானங்கள்

கார்பனேற்றப்பட்ட பானங்கள்

உடற்பயிற்சியின் போது வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் குமட்டலுக்கு வழிவகுக்கும் என்பதால், கார்பனேற்றப்பட்ட பானங்களை குறைப்பது ஒரு நல்ல யோசனை. கார்பனேற்றப்பட்ட பானங்களில் சர்க்கரை நிறைந்திருப்பதால், அவை சர்க்கரை செயலிழப்பிற்கு வழிவகுக்கும். அதற்குப் பதிலாக ஒரு கிளாஸ் தண்ணீரை தேர்வு செய்யவும்.உடற்பயிற்சி செய்வதற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன் இரண்டு அல்லது மூன்று கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.

காரமான உணவுகள்

காரமான உணவுகள்

ஜிம்மிற்கு செல்வதற்கு முன் உங்களுக்கு காரமான உணவைத் தவிர்ப்பது நல்லது. காரமான உணவுப் பொருட்கள் நெஞ்செரிச்சல் மற்றும் பொதுவான அசௌகரியத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், தசைப்பிடிப்புக்கும் வழிவகுக்கும். இவை அனைத்தும் இறுதியில் உங்கள் வொர்க்அவுட்டை மெதுவாக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods Should Avoid Before a Workout in Tamil

Here is the list of foods that you should avoid eating before working out at all costs. Read on.
Desktop Bottom Promotion