Latest Updates
-
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும்
இந்த பானங்கள குடிச்சா போதுமாம்... பானை மாதிரி பெருசா இருக்க உங்க தொப்பை காணாம போயிடுமாம்!
இஞ்சியை உட்கொள்வது உங்கள் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது செரிமானத்தைத் தூண்டுகிறது மற்றும் உங்கள் பசியை கட்டுப்படுத்துகிறது. இந்த பண்புகள் உங்கள் எடை இழப்பை ஊக்குவிக்கும்.
பெரும்பாலான மக்கள் இன்றைய முக்கிய பிரச்சனையாக இருப்பது உடல் பருமன். இது உங்களுக்கு பல்வேறு நாள்பட்ட சுகாதார நிலைகளை ஏற்படுத்தும். ஆதலால், உடல் எடையை குறைக்க நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். ஒரே இரவில் உங்கள் எடை குறைந்துவிடாது. அதற்காக நீங்கள் சில விஷயங்களை செய்ய வேண்டும். வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஆகியவை உங்கள் எடையை குறைக்க உதவும். உங்கள் எடை இழப்பை ஆதரிக்கவும், அதற்கு சில உந்துதலைக் கொடுக்கவும், இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள சுவையான மற்றும் ஆரோக்கியமான எடை இழப்பு பானங்களை நீங்கள் முயற்சிக்க வேண்டும். இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் கொழுப்பை வேகமாக எரிக்க உதவும்.

இந்த எடை குறைப்பு பானங்களை உங்கள் சமையலறையில் இருக்கும் எளிய பொருட்களை வைத்து தயாரிக்கலாம். இவற்றை உட்கொள்வது பாதுகாப்பானது. மேலும் உங்கள் எடை இழப்பை துரிதப்படுத்த இந்த பானங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை என்னென்ன பானங்கள், எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

பசியை தவிர்க்கலாம்
இந்த பானங்கள் செயற்கை சர்க்கரை அல்லது அதிக உப்பு இல்லாமல் தயாரிக்கப்படுகின்றன. அதனால்தான் அவை உங்கள் இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தவும், கொழுப்பின் அளவை மேம்படுத்தவும், உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த பானங்களை உட்கொள்வதன் மூலம் பசியின்மை, குறிப்பாக உணவுக்கு இடையில் உள்ள பசியை தவிர்க்கலாம். இதனால் உங்கள் எடையை எளிதாக நீங்கள் குறைக்கலாம்.

இஞ்சி எலுமிச்சை தண்ணீர்
இஞ்சியை உட்கொள்வது உங்கள் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது செரிமானத்தைத் தூண்டுகிறது மற்றும் உங்கள் பசியை கட்டுப்படுத்துகிறது. இந்த பண்புகள் உங்கள் எடை இழப்பை ஊக்குவிக்கும்.

செய்முறை
ஒரு அங்குல இஞ்சியை சிறிய துண்டுகளாக நறுக்கவும். 1 கப் குளிர்ந்த நீருடன் அதை ஒரு பிளெண்டரில் சேர்க்கவும். இந்த பொருட்கள் மென்மையாக மாறும் வரை கலக்கவும். ஒரு கிளாஸில் இஞ்சி தண்ணீரை ஊற்றவும். ¾ டீஸ்பூன் வறுத்த சீரகத்தூள் சேர்த்து அரை எலுமிச்சைப் பழத்தைப் பிழியவும். குடிப்பதற்கு முன் கலவையை நன்கு கலக்கவும்.

புதினா மற்றும் எலுமிச்சை கலந்த கிரீன் டீ
கிரீன் டீ உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். இது உங்கள் உடலில் திரவ தக்கவைப்பை சமாளிக்க உதவுகிறது. கிரீன் டீயில் உள்ள கேடசின் கொழுப்பு மூலக்கூறுகளை உடைக்க காரணமாகும். எனவே, இது உங்கள் எடை குறைப்புக்கு சிறந்த பானமாகும்.

செய்முறை
ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் மற்றும் 6-7 புதினா இலைகளை சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் வரை சூடாக்கவும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, 2 டீஸ்பூன் பச்சை தேயிலை இலைகளை சேர்க்கவும். சுமார் ஐந்து நிமிடங்கள் ஊறவைக்கவும். ஒரு வடிகட்டியின் உதவியுடன் இலைகளை அகற்றி ஒரு கோப்பையில் ஊற்றவும். சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து கலக்கவும். இப்போது சூடாக குடிக்கவும்.

இலவங்கப்பட்டை மற்றும் அன்னாசி பானம்
ஒரு துண்டு அன்னாசிப்பழத்தில் 42 கலோரிகள் மட்டுமே உள்ளன. அதில் 4 சதவீதம் மட்டுமே கார்போஹைட்ரேட் உள்ளது. அன்னாசிப்பழத்தில் மாங்கனீசு நிறைந்துள்ளது. இது கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. மேலும், இலவங்கப்பட்டை உங்கள் எடை இழப்பு பயணத்திற்கு மிகவும் உதவும்.

செய்முறை
அன்னாசிப்பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டி மென்மையாகும் வரை கலக்கவும். ஒரு கிளாஸில் சாற்றை ஊற்றி அதில் ஒரு எலுமிச்சையை பிழியவும். ½ தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள் மற்றும் சுவைக்கு சிறிது உப்பு சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் கலந்து புதியதாக உட்கொள்ளவும்.

டார்க் சாக்லேட் பிளாக் காபி
பிளாக் காபியில் குளோரோஜெனிக் அமிலம் உள்ளது. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. மேலும், இது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்கவும் உதவுகிறது. ஒரு கோப்பையில் 1 தேக்கரண்டி கருப்பு காபி மற்றும் சூடான நீரை சேர்க்கவும். அரை டீஸ்பூன் ஆளிவிதை சேர்த்து நன்கு கலக்கவும். அதன் மேல் துருவிய 1 டீஸ்பூன் டார்க் சாக்லேட் சேர்க்கவும்.

இலவங்கப்பட்டை தேன் கலவை
ஒரு ஆய்வில், இலவங்கப்பட்டை உடலின் வெப்ப உற்பத்தியை 20% வரை அதிகரிக்கிறது. இதனால் இது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. மேலும், இது உங்கள் பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது. இதனால் நீங்கள் அதிகம் சாப்பிடாமல் இருப்பீர்கள். இது உங்கள் எடையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். 1 கப் தண்ணீரை சூடாக்கி அதில் 2 டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் சேர்க்கவும். சிறிது நேரம் ஆறவிடவும். அது வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும், 1 டீஸ்பூன் தேன் சேர்க்கவும். சுவைக்கு எலுமிச்சை சாற்றை சிறிதளவு சேர்க்கலாம். இப்போது உங்கள் கொழுப்பை எரிக்கும் பானம் தயார்.



Click it and Unblock the Notifications











