Latest Updates
-
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
வாரம் 3 நாள் இரவு இத சாப்பிடுங்க.. உங்க உடம்புல ஏற்படும் அற்புதத்தைப் பாருங்க... ஆச்சரியப்படுவீங்க..
ஆரோக்கியமான இரைப்பை குடல் அமைப்பு நல்ல ஆரோக்கியத்துடன், எடை இழப்பிற்கும் கணிசமாக உதவும். ஆனால் செரிமான மண்டலம் சம்பந்தமான பிரச்சனைகளை முட்டைக்கோஸ் சாலட் இயற்கையாக சரிசெய்யும்.
நம் அனைவருக்குமே ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் பற்றி தெரியும். ஆகவே பலரும் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தான் வருகிறோம். ஆனால் சில சமயங்களில், நம்மால் நினைத்தவாறு உடல் எடையைக் குறைக்க முடிவதில்லை.

எவ்வளவு தான் ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்தாலும், உடற்பயிற்சியை செய்தாலும், உடலில் இருக்கும் அதிகப்படியான எடையைக் குறைக்க முடியாமல் போகிறது. இதற்கு முக்கிய காரணமாக செரிமான மண்டலம் இருக்கலாம்.

செரிமான பிரச்சனைகள்
செரிமான பிரச்சனைகளாக மெதுவான குடலியக்கம், அஜீரண கோளாறு, மலச்சிக்கல் போன்றவை ஒருவரது உடல் பருமனுக்கு முக்கிய காரணங்களாகும், ஏனெனில் இந்த பிரச்சனைகளால் உடலில் கொழுப்புக்கள் மற்றும் டாக்ஸின்களின் தேக்கம் அனுமதிக்கப்படுகிறது.

குடலியக்கம்
குடலியக்கமானது உணவு உட்கொண்ட பின் ஒன்று அல்லது இரண்டு மணிநேரத்திற்கு பிறகு அல்லது ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஏற்பட வேண்டும். மெதுவான குடலியக்கங்களுக்கு காரணம் சில மருந்துகள், உடலில் போதுமான நீர் இல்லாமை, நார்ச்சத்து குறைபாடு மற்றும் குடலில் நல்ல தாவர குறைபாடு ஆகியவை இருக்கலாம்.

மலச்சிக்கல்
கூடுதலாக, உடலால் குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற சிரமப்படும் போது மலச்சிக்கல் என்னும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் உடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய கழிவுகள் எளிதில் வெளியேறாமல், மிகவும் இறுக்கமடைந்து, வெளியேற்ற முடியாமல் மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும். இப்படியொரு குறைபாடு ஏற்படுவதற்கு நார்ச்சத்து குறைபாடு, சில மருந்துகள், எரிச்சலூட்டும் குடலியக்கம், அளவுக்கு அதிகமான மலமிளக்கிகளைப் பயன்படுத்துவது, மலம் கழிப்பது தவிர்ப்பது, உடல் வறட்சி மற்றும் குடல் பிரச்சனைகள் போன்றவற்றின் விளைவாக இருக்கலாம்.

அஜீரண கோளாறு
கடைசியாக, டிஸ்பெப்சியா என்று அழைக்கப்படும் அஜீரண கோளாறு. இது உணவை ஜீரணிப்பதில் உள்ள சிரமங்களால் வயிற்றில் வலி மற்றும் அசௌகரியத்தை அனுபவிக்கும் போது ஏற்படும் ஒரு நிலை. சில மருந்துகளின் பக்கவிளைவுகள், அதிக அமில சுரப்பு நோய், பெப்டிக் அல்சர், கணையம் அல்லது பித்த நாளத்தில் அசாதாரணங்கள் மற்றும் பிறவற்றின் பக்கவிளைவுகளால் ஏற்படலாம்.

ஆரோக்கியமான இரைப்பை குடல் அமைப்பு
ஆரோக்கியமான இரைப்பை குடல் அமைப்பு நல்ல ஆரோக்கியத்துடன், எடை இழப்பிற்கும் கணிசமாக உதவும். இந்த காரணத்திற்காகவே, தமிழ் போல்ட் ஸ்கை, செரிமான மண்டலம் சம்பந்தமான பிரச்சனைகளை இயற்கையாக சரிசெய்ய உதவும் ஒரு அற்புதமான வைத்தியமான வைட்டமின் சாலட்டிற்கான செய்முறையை உங்களுக்காக கொடுத்துள்ளது.
இந்த சாலட் குடலில் உள்ள மலக் கொழுப்பை சுத்தம் செய்யும், உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும், போதுமான அளவு நார்ச்சத்து வழங்கும் மற்றும் உடலில் உள்ள pH அளவை சமன் செய்யும். இந்த சாலட்டை தொடர்ச்சியாக 3 நாட்கள் இரவு உணவின் போது உட்கொண்டால், அதனால் பெறும் நன்மைகளைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

தேவையான பொருட்கள்:
* முட்டைக்கோஸ்
* பீட்ரூட்
* கேரட்
* எலுமிச்சை சாறு
* வெஜிடேபிள் ஆயில்
* சீசனிங் (விருப்பத்திற்கேற்ப)

செய்முறை:
இந்த சாலட்டின் செய்முறை மிகவும் எளிமையானது. இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் ஒரு பௌலில் 3 பங்கு துருவிய முட்டைக்கோஸ், 1 பங்கு பீட்ரூட் மற்றும் 1 பங்கு கேரட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு, அதில் விருப்பமான சீசனிங்கைத் தூவிக் கொள்ளவும். அடுத்து, அந்த கலவையை நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியில் அதில் எலுமிச்சை சாறு மற்றும் வெஜிடேபிள் ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இந்த சாலட்டினால் உடலுக்குத் தேவையான அளவு கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள், அதோடு இதர சத்துக்களான நார்ச்சத்து மற்றும் பெக்டின் போன்றவையும் கிடைக்கும். முக்கியமாக இது விரும்பி உட்கொள்ளும் வகையில் சுவையுடனும் இருக்கும்.



Click it and Unblock the Notifications