For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த தவறுகளை செய்யும்வரை உங்களால் தலைகீழாக நின்னாலும் எடையைக் குறைக்க முடியாதாம் தெரியுமா?

|

ஆண்டின் தொடக்கத்தில் எடுக்கப்படும் பொதுவான தீர்மானங்களில் ஒன்று உடல் எடையைக் குறைப்பது. இருப்பினும், பெரும்பாலான உறுதிமொழிகள் முதல் சில வாரங்களிலேயே ஒன்றுமில்லாமல் போகலாம். எடை இழப்புக்கான பயனுள்ள முடிவுகளைப் பெறாததற்கு முயற்சியின்மையே முதன்மைக் காரணம் என்று தோன்றினாலும், கவனிக்கப்படாமல் போகும் பல அடிப்படை தவறுகள் உள்ளன.

கூடுதல் எடை மனித உடலை எண்ணிலடங்கா அழிவுகளுக்கு உட்படுத்துகிறது, அவற்றில் முக்கியமானவை: இதய நோய், நீரிழிவு மற்றும் சில வகையான புற்றுநோய்கள். இது ஒரு நபரின் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கிறது. நீங்கள் கூடுதல் பவுண்டுகளைச் சுமக்கும்போது, நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பதில் சிக்கல், குறைந்த ஆற்றல் மற்றும் தூங்குவதில் சிரமம் ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே உடல் எடையை குறைப்பது தவிர்க்க முடியாதது என்றாலும், நீங்கள் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கலோரிகளைக் கவனிக்ககாமல் இருப்பது

கலோரிகளைக் கவனிக்ககாமல் இருப்பது

கலோரி மற்றும் எடை இழப்பு ஆகியவை கைகோர்த்துச் சென்றாலும், பலர் கலோரி உட்கொள்ளலைப் புறக்கணித்து, கூடுதல் கொழுப்புகளை எரிக்க உடல் செயல்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு கலோரி பற்றாக்குறை, சந்தேகத்திற்கு இடமின்றி, எடை இழப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது, ஆனால் அது எவ்வளவு பற்றாக்குறையாக இருக்க வேண்டும் என்பதை அறிய வேண்டும். தரப்படுத்தப்பட்ட தரவுகளின்படி, பெண்களுக்கு ஒரு நாளைக்கு 2,000 கலோரிகளும், ஆண்களுக்கு 2,500 கலோரிகளும் தேவை. அதிக கலோரிகள் எடையை அதிகரிக்கின்றன என்பதை நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், குறைவான கலோரிகள் நபரை சலிப்படையச் செய்கின்றன. எனவே சரியான அளவு கலோரிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

குறைவான நார்ச்சத்து

குறைவான நார்ச்சத்து

இந்த அற்புதமான பொருட்கள் மிகவும் புறக்கணிக்கப்பட்டவை. ஒருவர் உடல் எடையை குறைக்க நினைத்தால், விரைவான முடிவுகளுக்கு அதிக அளவு நார்ச்சத்துகளை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு ஆராய்ச்சி ஆய்வின்படி, தினசரி கரையக்கூடிய நார்ச்சத்து உட்கொள்ளலில் 10 கிராம் அதிகரிப்பு, தொப்பை கொழுப்பைப் பெறுவதற்கான அபாயத்தை 3.7% குறைக்கிறது.

டயட் உணவுகளை கண்மூடித்தனமாக நம்புவது

டயட் உணவுகளை கண்மூடித்தனமாக நம்புவது

விரைவான முடிவுகளுக்கு, பலர் டயட் உணவுகளைத் தேர்வு செய்கிறார்கள். இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள், எடையைக் குறைக்க உதவுவதாகக் கூறினாலும், உண்மையில் மற்ற தேவையற்ற பொருட்களால் நிரப்பப்படுகின்றன. உதாரணமாக, 170 கிராம் குறைந்த கொழுப்புச் சுவை கொண்ட தயிரில் 23.5 கிராம் வரை சர்க்கரை உள்ளது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் (CDC) படி, 2,000 கலோரி உணவில், 200 கலோரிகளுக்கு மேல் சேர்க்கப்பட்ட சர்க்கரையிலிருந்து வரக்கூடாது.

இயற்கை உணவுகளை குறைவாக உட்கொள்வது

இயற்கை உணவுகளை குறைவாக உட்கொள்வது

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த, இயற்கை உணவுகள் எடை இழப்புக்கு பெரிதும் உதவுகின்றன. மற்ற முக்கியமான மக்ரோனூட்ரியன்களுடன், இயற்கை உணவுகளின் ஒரு பகுதியையும் சாப்பிட வேண்டும் அல்லது அவற்றின் இயற்கையான வடிவத்தில் உணவுகளை உண்ண வேண்டும். இதில் முக்கியமாக சாலட் அடங்கும். உணவில் இயற்கையான உணவை அதிகம் சேர்க்க, மற்ற உணவுகளை குறைத்து, உணவின் பெரும்பகுதியை சாலட்களுக்கு ஒதுக்கலாம். இது உங்களை நிரப்புவது மட்டுமின்றி, இவை பதப்படுத்தப்படாதவை மற்றும் இரசாயனங்கள் இல்லாததால் அதிக ஊட்டமளிப்பதாகவும் உள்ளது.

எதிர்பாராத இலக்குகளை அமைத்தல்

எதிர்பாராத இலக்குகளை அமைத்தல்

எடை குறைப்பதில் பலர் பைத்தியம் போல செயல்படுகிறார்கள். ஒரு கடினமான பணியை நோக்கிய இந்த வகையான நடத்தை சில நேரங்களில் முடிவுகளைத் தருகிறது, ஆனால் பெரும்பாலான நேரங்களில் அதிக உற்சாகம் விரைவாகக் குறைகிறது. அதை ஒரு குறுகிய கால இலக்காக மாற்றுவதற்கு பதிலாக, எடை இழப்பு வழக்கத்தை நீண்ட காலமாக நீட்டிக்க வேண்டும். அதிக முடிவுகளைப் பெறுவதற்கு, தினசரி வாழ்வில் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைத் தூண்ட முயற்சிக்க வேண்டும். உடல் எடையை குறைப்பது உட்பட ஒவ்வொரு வெற்றிக்கும் விடாமுயற்சியே முக்கியமாகும்.

தவறான முன்மாதிரியை எடுத்துக்கொள்வது

தவறான முன்மாதிரியை எடுத்துக்கொள்வது

நீங்கள் ஒரு பிரபலத்தையோ அல்லது ஃபிட்னஸ் பிரியாரையோ ஃபாலோ செய்து, அவர்களின் வழக்கத்தை பின்பற்ற முயற்சித்தால், இது நீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. எந்த இரண்டு நபர்களும் ஒரே மாதிரியான எடை இழப்பு உத்தியைக் கொண்டிருக்க முடியாது. எடை இழப்பு முறைகள் ஒரு நபரின் வாழ்க்கை முறையைப் பொறுத்தது. ஒரு பிரபலத்தின் வாழ்க்கை முறை, தினமும் 10-5 வரை வேலை செய்யும் ஒரு உட்கார்ந்து வேலை செய்பவரின் வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எனவே, மற்றவர்களிடமிருந்து உத்வேகம் பெற அனுமதிக்கப்படுகிறது, அவர்களின் முறையைப் பின்பற்றுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Common Mistakes to Avoid When Trying to Lose Weight in Tamil

Check out the common mistakes to avoid when trying to lose weight.
Story first published: Monday, January 17, 2022, 11:16 [IST]
Desktop Bottom Promotion