For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவும் 5 எளிமையான ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகள்!

ஏரோபிக்ஸை விட ஏன்ஏரோபிக்ஸ் செய்வதால் வேகமான பலன்கள் கிடைத்தாலும், அவை அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஏரோபிக்ஸை எடுத்துக் கொண்டால், அவை செய்வதற்கு எளிமையானது.

|

உடல் எடை குறைப்பு வழிகளில் மிக முக்கிய இடத்தை பிடிப்பது என்றால் உடற்பயிற்சியை கூறலாம். உடற்பயிற்சி செய்வதில் கூட ஏராளமான வழிகள் உள்ளன. உடல் எடை குறைப்பிற்கென தனி உடற்பயிற்சிகள் கூடங்கள் இருந்தாலும், வீட்டிலேயே தங்களுக்கு ஏற்றவாறு, சுலபமான பயிற்சிகளை செய்வதையே அனைவரும் விரும்புவர். அன்றாட வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு, அதனோடு ஒரு அங்கமாக மாறும் வகையிலான உடற்பயிற்சிகள் அமைந்திடும் போது அனைவரும் தவறாமல் செய்திடுன்றனர். அதாவது, கஷ்டமே இல்லாமல் செய்யக் கூடிய உடல் எடை குறைப்பு உடற்பயிற்சிகளை யார் தான் விரும்ப மாட்டார்கள்?

5 Best Aerobic Exercises To Burn Belly Fat

அப்படி உடல் எடை குறைப்பு உடற்பயிற்சிகள் என்றாலே ஏரோபிக்ஸ் மற்றும் ஏன்ஏரோபிக்ஸ் இரண்டும் தான் பெரும்பாலானவர்கள் தேர்ந்தெடுப்பர். இந்த இரண்டு குறித்த விவாதமும் அதிகம் இருக்கும். ஏரோபிக்ஸை விட ஏன்ஏரோபிக்ஸ் செய்வதால் வேகமான பலன்கள் கிடைத்தாலும், அவை அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அவற்றிற்கு அன்றாட வாழ்வில் ஒரு இடமளிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதுவே, ஏரோபிக்ஸை எடுத்துக் கொண்டால், அவை செய்வதற்கு எளிமை மற்றும் வாழ்க்கை முறையோடு பழகுவதற்கும் எளிமையானது.

இப்போது உடல் எடை குறைக்க உதவுட் மிகவும் எளிமையான 5 ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகள் பற்றி தெரிந்து கொள்வோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சைக்கிளிங்

சைக்கிளிங்

சைக்கிளிங் செய்வதன் மூலம் அதிகப்படியான கலோரிகளை எரித்திட முடியும். உங்களால் சைக்கிளை எடுத்து வெளியே எங்கும் ஓட்டி செல்ல முடியவில்லை என்றாலும், ஒரே இடத்தில் நின்றபடியே கூட ஓட்டலாம். இப்படி செய்தாலும் அதே பலன் தான் கிடைக்கும். எவ்வளவு நேரம் உங்களால் முடியுமோ அவ்வளவு நேரம் இதை செய்யலாம். வேகமாக சைக்கிளிங் செய்வதால் 1000 கலோரிகளும். மிதமான வேகத்தில் சைக்கிளிங் செய்வதால் 600 கலோரிகள் வரையிலும் குறைத்திடலாம்.

படிக்கட்டு பயிற்சி

படிக்கட்டு பயிற்சி

படிக்கட்டு ஏறி இறங்குவது என்பது தினந்தோறும் அனைவரும் செய்யக்கூடிய ஒன்று என்பதால் இதனை செய்வது சுலபம் தான். தினமும் 20 நிமிடங்களுக்கு ஒரே வேகத்தில் படிக்கட்டுக்களை ஏறி இறங்க வேண்டும். இது உங்கள் தொடை எலும்புகள், தசைப்பகுதி, முழங்கால் மற்றும் காலின் ஒவ்வொரு தசைப்பகுதிக்கும் உதவிடும். அதுமட்டுமல்லாது, இது உங்கள் இதய அமைப்பின் ஆற்றலை அதிகரிக்கவும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை எரிக்கவும் உதவும்.

ஸ்கிப்பிங்

ஸ்கிப்பிங்

ஸ்கிப்பிங் கயிறு ஆடுவது என்பது உடல் எடை குறைப்பில் மிகவும் உதவக்கூடியது. அதுமட்டுமல்லாது, கைகள் மற்றும் கால்களின் ஒன்றிணைந்த செயல்பாட்டிற்கும் உதவிடக்கூடியது. மேலும், உடலின் சுறுசுறுப்பையும் கூட்டிடும். நாளொன்றிற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஸ்கிப்பிங் ஆடலாம்.

ரன்னிங்

ரன்னிங்

ஏரோபிக்ஸ் உடற்பயிற்சியில் மிகவும் சிறந்தது என்றால் அது ரன்னிங் தான். உடல் எடை குறைப்பு பயிற்சியில் ரன்னிங் மேற்கொள்வது என்பது மிகுந்த பலன் அளிக்கக்கூடியது. அதுமட்டுமல்லாது, உங்களது மனநிலையை மேம்படுத்த உதவுவதோடு, அன்றாட வாழ்க்கையில் இடம் பெறுவதிலும் சுலபமானது. நீங்கள் ஜாக்கிங் மற்றும் ஸ்பிரிண்டிங் இரண்டையுமே சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் வசதிகேற்ப எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இதனை செய்யலாம்.

நீச்சல்

நீச்சல்

பிற உடற்பயிற்சி என்பது ஏதாவது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கும் மட்டும் பலனளிக்கக் கூடியதாக இருக்கும். ஆனால், நீங்கள் நீச்சல் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் ஒட்டுமொத்த உடலுக்குமே பயிற்சி அளிப்பதாகும். மனஅழுத்தத்தை குறைக்க, பொறுமையுணர்வை மேம்படுத்த, தசையை மெருகேற்ற, உடலுக்கு வலு சேர்க்க, உடல் எடையை ஒரே சீராக வைத்துக் கொள்ள என பலவற்றிற்கு நீச்சலானது உதவுகிறது. சாதாரண நீச்சல் பயிற்சி இவ்வளவு நன்மைகளை செய்யக்கூடும் எனில் அதனை செய்வதில் தவறேதும் இல்லையே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Best Aerobic Exercises To Burn Belly Fat

Here are some best aerobic exercises to burn belly fat. Read on...
Desktop Bottom Promotion