For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமீர்கான் கட்டுமஸ்தா இருக்கிறதுக்கு காரணம் தண்ணி மட்டும்தானாம்... எப்படி குடிக்கிறார்னு நீங்களே பாரு

அமிர்கானின் கட்டுமஸ்தான உடல் அமைப்பிற்கு காரணம் என்ன? என்னும் ரகசியத்தை வெளியிடுகிறார் அமிர்கான். அதுபற்றி இங்கே பார்க்கலாம். அது பற்றிய தொகுப்பு தான் இது.

|

கதாப்பாத்திரத்திற்காக தன்னை முற்றிலும் மாற்றிக் கொள்ளும் அளவிற்கு திரையுலகில் சில முக்கிய கலைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தென்னிந்தியாவில் விக்ரம் ஒரு உதாரணம் என்றால் பாலிவுட்டில் அதற்கு சிறந்த உதாரணம் அமிர்கான். அமிர்கான் அவருடைய திரையுலக வாழ்க்கையில் முன்னணி நடிகராக பல காலமாக இருப்பவர். இதற்காக அவர் தன்னை மாற்றிக் கொண்டது ஏராளம். அவருடைய திரையுலக வரலாற்றில் "கஜினி" ஒரு முக்கிய திரைப்படம். இதில் அவருடைய உடற்கட்டில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டிருப்பார். 2008ம் ஆண்டின் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றது அவரின் உடற்கட்டு மாற்றம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் மாற்றம்

உடல் மாற்றம்

இதே போல், 2016ம் ஆண்டு "டங்கல்" படத்தில் அவருடைய மாற்றம் இன்டர்நெட்டில் வைரலானது. இந்த படத்தில் ஆரம்பத்தில் அதிக எடையுடன் இருப்பார் . பிறகு படத்தின் பிற்பகுதியில் ஒரு குறிப்பிட்ட சீனில் எடை குறைந்து காணப்படுவார். இதற்காக அவர் அதிக எடையை குறைத்தார். எடை இழப்பும், எடை அதிகரிப்பும் மட்டும் அல்ல, இந்த படத்திற்காக தசை வலிமையையும் அவர் அதிகரித்தார். இந்த மிகப் பெரிய உடலியல் மாற்றம், அவர் தொழில் பக்தியை மீண்டும் நிரூபித்தது.

முயற்சி

முயற்சி

அவருடைய முயற்சிக்கு கை மேல் பலனாக அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அன்று முதல் எடை குறைப்பு செய்ய முயற்சிப்பவர்களுக்கு ஒரு மிகப் பெரிய உதாரணமாக திகழ்கிறார் அமிர்கான். நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா? இந்த பதிவில் அமீர் கானின் வெற்றி ரகசியம் குறித்து வெளியிட்டுள்ளோம். இதனைப் படித்து தெரிந்து கொண்டு நீங்களும் முயற்சித்தால் உங்களுக்கும் வெற்றி நிச்சயம்.

தண்ணீர் காரணமா?

தண்ணீர் காரணமா?

கஜினி வெற்றிக்கு பிறகு, 2010ம் ஆண்டு, ஒரு ப்ளாக் மூலம் அமிர்கான் அவருடைய சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். எடை குறைப்பிற்கு தண்ணீர் மிகவும் அவசியம் என்று அவர் அமிர்கான் மேலும் குறிப்பிடுகையில், தன்னுடைய எடை குறைவதற்காக தினமும் அவர் நான்கு முதல் ஐந்து லிட்டர் தண்ணீர் பருகியதாக கூறுகிறார்.

MOST READ: ஒரே பிரசவத்தில் 5 குழந்தையை பெற்றெடுத்த 23 வயது பெண்... 480 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிற அதிசயம்

தண்ணீர் அந்த அளவிற்கு உதவுகிறதா?

தண்ணீர் அந்த அளவிற்கு உதவுகிறதா?

அதிகம் தண்ணீர் பருகுவதால் அதிக கலோரிகள் எரிக்கப்படுவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. அதிக தண்ணீர் பருகுவதால், சிறந்த முறையில் உடல் எடை குறைப்பு சாத்தியமாகிறது. மேலும் அதிக நீர் பருகுவதால், பசியுணர்வு குறைந்து , அதிக கலோரிகள் உட்புகுதல் குறைகிறது. ஆனால் தண்ணீர் மட்டுமே எடை குறைவதற்கு காரணம் அல்ல, அதே சமயம், எடை குறைப்பு செயல்பாட்டை தீவிரப்படுத்த இந்த தண்ணீர் உதவுகிறது.

கலோரிகளை எரிக்கும்

கலோரிகளை எரிக்கும்

தண்ணீர் பருகுவதால் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது. உங்கள் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற தண்ணீர் உதவுகிறது . இதனால் உங்கள் சரும ஆரோக்கியம் அதிகரிக்கிறது. தண்ணீருக்கு கலோரி எண்ணிக்கை கிடையாது. எனவே சர்க்கரை சேர்க்கபப்ட்ட பானங்களைப் பருவதற்கு மாற்றாக தண்ணீர் பருகுவதால் கலோரிகள் அதிகரிப்பதில்லை. உங்கள் உணவு அட்டவணையில் தண்ணீருக்கு அதிக இடம் கொடுப்பதால் உங்கள் உடல் எடை நிச்சயம் குறையத் தொடங்கும்.

எடை இழக்க மற்றும் ஒரு பெரிய உடலமைப்பை உருவாக்க மிகவும் அவசியமான மூன்று விஷயங்கள் உள்ளன என்று அமிர் கான் குறிப்பிட்டுள்ளார். அவை பின்வருமாறு..

ஆரோக்கியமான சமச்சீர் உணவு :

ஆரோக்கியமான சமச்சீர் உணவு :

உடல் எடை குறைவதற்கான அற்புத விதியை அமீர் கான் கூறுகிறார். அதாவது, ஒரு நாள் முழுவதும் ஒரு நபர் எடுத்துக் கொள்ளும் கலோரி அளவை விட அதிகமாக அவர் அந்த நாளில் கலோரிகளை எரித்தாக வேண்டும் என்பது அந்த செய்தி. கட்டுப்படுத்தப்பட்ட கலோரிகளை சரியான அளவில் எடுத்துக் கொள்வதற்கு உங்கள் உடலுக்கு ஏற்ற சரியான உணவைப் பரிந்துரைக்க ஒரு உணவியல் நிபுணர் அவசியம் என்பதையும் அவர் கூறுகிறார். புகழ் பெற்ற எல்லா வித டயட்டையும் பின்பற்றுவது சிறுபிள்ளைத்தனம் என்றும் அவர் சாடுகிறார். அவரவர் உடல் அமைப்பிற்கு ஏற்ற ஆரோக்கியமான, சமச்சீர் உணவு அட்டவனையை பின்பற்றுவதால் எடை குறைப்பு சாத்தியமாகும் என்று கூறுகிறார்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

மிகச்சரியான உணவு அட்டவணையுடன் கூடிய சில மகத்தான உடற்பயிற்சி , எடை குறைப்பிற்கான சாவியாக பார்க்கப்படுகிறது. நடைபயிற்சி, ஜாகிங், நீச்சல், அல்லது ஒரு விளையாட்டு போன்றவை சில மகத்தான உடற்பயிற்சியாகும். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் எடைக்கு யோகா ஒரு சிறந்த பயிற்சி என்றும் அமிர்கான கூறுகிறார்..

MOST READ: தினமும் வெறும் வயித்துல இதுல ஏதாவது ஒரு விதைய சாப்பிட்டுட்டு வாங்க... எந்த நோயும் அண்டாது

ஓய்வு

ஓய்வு

உடல் ஆரோக்கியத்திற்கு ஓய்வு மிகவும் முக்கியம் என்பதை பலரும் நினைவில் கொள்வதில்லை. "ஓய்வு எடுப்பதின் முக்கியத்துவம் எப்போதும் குறைத்து மதிப்பிடப்படுகிறது. நீங்க எவ்வளவு கடினமான பயிற்சிகள் செய்தாலும், ஓய்வு இல்லை என்றால் உங்கள் உடல் உங்கள் பயிற்சிக்கு ஏற்றவாறு ஒத்துழைப்பதில்லை " என்று அவர் கூறியிருக்கிறார். ஒரு நாளில் 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் மிகவும் அவசியம் என்று அடிக்கோடிட்டு காட்டுகிறார். மேலும் கஜினியில் அவருடைய மிகப்பெரிய உடலியல் மாற்றத்திற்கு இதனையே அவர் பின்பற்றியதாகவும் சுட்டிக் காட்டுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Water The Secret Behind Aamir Khan's Great Physique? Here Is What Aamir Khan Revealed

When it comes to transformation, Bollywood superstar Aamir Khan has set some major fitness goals. The star went through some great transformations throughout his career. The actor came in light with a great physique in his movie Ghajini. The transformation was remarkable and made headlines in 2008.
Story first published: Tuesday, March 19, 2019, 14:54 [IST]
Desktop Bottom Promotion