For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரிசி உணவு சாப்பிடுவது உடல் பருமனை ஏற்படுத்துமா? ஜப்பான் ஆராய்ச்சி சொல்லும் உண்மையென்ன தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் அரிசி சாப்பிடுவது காலப்போக்கில் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு காரணம் எடை அதிகரிப்பு மற்றும் சர்க்கரை நோய் மீதிருக்கும் பயம்தான்.

|

அரிசி சாதம் சாப்பிடுவதில் கிடைக்கும் இன்பம் என்பது வார்த்தைகளால் விளக்க முடியாத ஒன்றாகும். வேகவைக்கப்பட்ட அரிசியுடன் பிடித்த குழம்பை வைத்து சாப்பிடும்போது கிடைக்கும் இன்பத்தை எதனாலும், எவராலும் கொடுக்க இயலாது. இந்தியாவின் முக்கியமான உணவாக மட்டுமின்றி அனைவரும் விரும்பும் உணவாக இருப்பது அரிசிதான்.

Can eating more rice help fight against obesity

இன்றைய காலகட்டத்தில் அரிசி சாப்பிடுவது காலப்போக்கில் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு காரணம் எடை அதிகரிப்பு மற்றும் சர்க்கரை நோய் மீதிருக்கும் பயம்தான். அரிசி அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்று பயமுறுத்தியே அதன் பயன்பாடு இப்போது குறைக்கப்பட்டு கொண்டே வருகிறது. இந்த பதிவில் உண்மையில் அரிசி சாப்பிடுவது எடை அதிகரிப்பை ஏற்படுத்துமா என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறைந்த கார்போஹைட்ரேட் டயட்

குறைந்த கார்போஹைட்ரேட் டயட்

இன்று பலருக்கும் அரிசியில் இருக்கும் ஊட்டச்சத்தின் சந்தேகம் வந்துவிட்டது. இதனால் அரிசிக்கு பதிலாக குறைந்த கார்போஹைட்ரேட் இருக்கும் குயினோ, பார்லி போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்கிறார்கள். இந்த தவறான புரிதல் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. ஆனால் உண்மையில் அரிசி சாதம் சாப்பிட விரும்புபவர்களுக்கு இருக்கும் ஒரு நல்ல செய்தி என்னவெனில் அரிசி அதிகமிருக்கும் டயட் உங்களுக்கு உடல் பருமனை குறைக்க உதவும்.

ஆராய்ச்சி

ஆராய்ச்சி

சமீபத்தில் ஜப்பானில் நடத்தப்பட்ட ஆய்வில் ஜப்பான் மற்றும் ஆசியா டயட் முறைகளின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் அதிகளவு அரிசி சாப்பிடுவர்களுக்கு உடல் பருமன் குறைவது கண்டுபிடிக்கப்பட்டது.

MOST READ: உங்கள் பிறந்த தேதியின் படி எந்த வயதில் உங்களுக்கு பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா?

ஆராய்ச்சியின் முடிவு

ஆராய்ச்சியின் முடிவு

இந்த ஆராய்ச்சியில் 136 நாடுகளை கொண்ட நபர்கள் கலந்து கொண்டார்கள். இதில் அவர்கள் சாப்பிடும் அரிசியின் அளவு மற்றும் எடுத்துக்கொள்ளும் கலோரியின் அளவு முதலியவை கணக்கிடப்பட்டது. அனைத்து நாடுகளில் இருந்தும் கலந்து கொண்டவர்களின் BMI அளவும் இதில் கணக்கிடப்பட்டது.

ஆய்வின் முடிவு

ஆய்வின் முடிவு

இந்த ஆய்வின் முடிவில் அதன் தலைமை அதிகாரி கூறுகையில் " இந்த ஆய்வில் பங்கேற்று அரிசி உணவை அதிகமாக எடுத்துகொண்டவர்களின் உடல் பருமனானது மேற்கத்திய நாடுகளில் இருந்து கலந்து கொண்டு குறைவான அளவில் அரிசியை எடுத்து கொண்டவர்களின் உடல் பருமனை விட குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது " என்று கூறினார். இதற்கு காரணமாக அவ கூறியது அதிலுள்ள குறைவான கொழுப்பும், சரியான அளவில் இருக்கும் நார்ச்சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் என்றுதான் கூறியுள்ளார். இதனால் நீங்கள் குறைவாக சாப்பிட்டாலும் நீண்டநேரம் பசியெடுக்காது என்றும் அதனால் அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

உடல் பருமன்

உடல் பருமன்

ஜப்பானில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அரிசியை முதன்மை உணவாக எடுத்துக்கொள்ளும் நாடுக்ளில் உடல் பருமன் பிரச்சினை மிகவும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. ஆசிய உணவுமுறையாக இருந்தாலும் சரி, ஜப்பானிய உணவு முறையாக இருந்தாலும் சரி அரிசி எப்பொழுதுமே உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகிறது. மேற்கத்திய நாடுகளில் உடல் பருமனை குறைக்க அதிக அரிசி சாப்பிடும்படி பரிந்துரைக்கப்படுகிறது.

MOST READ: துலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? தெரிஞ்சா அதிர்ச்சியாகிருவீங்க...!

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

அரிசி அதிகளவு உணவு நார்ச்சத்துக்களையும், முழுதானிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. இது உடல் எடையை குறைப்பதற்கும், கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உதவும். மேலும் இதனால் தோற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவுதான். அரிசி சாப்பிடுவது எடையை அதிகரிப்பை ஏற்படுத்தாது. ஆனால் அதனை சரியான அளவில் சாப்பிட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can eating more rice help fight against obesity?

Does eat too much rice leads to weight loss?
Story first published: Wednesday, May 15, 2019, 17:40 [IST]
Desktop Bottom Promotion