For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாப்பிடும் உணவின் அளவை குறைத்தால் தொப்பை குறைய வாய்ப்புள்ளதா? உண்மை என்ன தெரியுமா?

குறைவாக சாப்பிட்டால் எடையை குறைக்கலாம் என்று பலரும் நினைக்கிறார்கள் ஆனால் அது மிகவும் தவறான நம்பிக்கையாகும்.

|

தொப்பை என்பது இன்றைய ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாகும். இன்றைய காலக்கட்டத்தில் எடையை குறைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். சென்ற தலைமுறையினரை விட இந்த தலைமுறையில் அதிக நபர்கள் தொப்பையுடன் இருக்க காரணம் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம்தான்.

Can eating less shrink your tummy

எடையை குறைப்பது என்பதை காட்டிலும் தொப்பையை குறைக்க உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க வேண்டும். அடிவயிற்று சதையை குறைப்பது இன்று அனைவருக்கும் இருக்கும் பெரும் போராட்டமாகும். தொப்பை மற்றும் கொழுப்பை குறைக்க எடுத்துக்கொள்ளும் கலோரிகளின் அளவை குறைக்க வேண்டும் ஆனால் அதற்காக நாம் கடைபிடிக்கும் சில வழிமுறைகள்தான் தவறானவையாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறைவாக சாப்பிட்டால் தொப்பை குறையுமா?

குறைவாக சாப்பிட்டால் தொப்பை குறையுமா?

தொப்பையை குறைக்க நாம் பெரும்பாலும் பின்பற்றும் முதல் வழி உணவின் அளவை குறைப்பதுதான். குறைவாக சாப்பிட்டால் எடையை குறைக்கலாம் என்று பலரும் நினைக்கிறார்கள் ஆனால் அது மிகவும் தவறான நம்பிக்கையாகும். கலோரிகளை குறைக்கிறோம் என்ற பெயரில் கடுமையாக டயட் இருப்பது, மிகவும் குறைவாக சாப்பிடுவது போன்றவை நீங்கள் எதிர்பார்க்கும் பலனை தராது. மாறாக ஆற்றல் இழப்பு, இரத்த அழுத்த அதிகரிப்பு போன்ற பாதிப்புகளைத்தான் ஏற்படுத்தும்.

குறைவாக சாப்பிட்டால் என்ன நடக்கும்?

குறைவாக சாப்பிட்டால் என்ன நடக்கும்?

ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு பிறகு உங்கள் எடை எவ்வளவு அதிகரித்தாலும் உங்கள் வயிற்றின் அளவு மாறாது என்பது உண்மையாகும். அதாவது உங்கள் உடல் பருமன் அதிகமாக இருந்தாலும் உங்கள் வயிற்றின் அளவு மாறாமல் ஒல்லியான தோற்றத்தையே கொடுக்கும். இதன்மூலம் நீங்கள் சாப்பிடாமல் இருப்பதால் உங்கள் வயிறு சுருங்குவதில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள். சொல்லப்போனால் இப்படி பட்டினி கிடப்பது உங்கள் உடல் எடையை அதிகரிக்கும். உங்கள் வளர்சிதை மாற்றம் குறைவதால் எடையை குறைப்பது மிகவும் கடினமானதாக மாறிவிடும். உங்கள் உடலுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை எனில் அது எப்படி போதுமான ஆற்றலை வழங்கும்.

MOST READ: இந்த பொருளை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் உங்களின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் தெரியுமா?

பட்டினியின் விளைவுகள்

பட்டினியின் விளைவுகள்

இவ்வாறு உணவின் அளவை குறைத்து பட்டினி கிடப்பதால் பலவீனமும், சோர்வும் உண்டாகும். பசியை தூண்டும் ஹார்மோன்கள் அதிகளவு சுரப்பதால் உங்களின் உணவு தேவை அதிகரிக்கும். உங்கள் மூளை உங்களுக்கு உணவு உண்ண வேண்டும் என்ற எண்ணத்தை வழங்கும், இதனால் க்ரெலின் ஹார்மோனின் சுரப்பு அதிகரிக்கும், இதனால் உணவை தவிர்ப்பது என்பது முடியாத காரியமாக மாறிவிடும். இத்தனை போராட்டங்களுக்கு பிறகு உணவு உண்ணுவதால் தீமைகளே அதிகம் ஏற்படும். இதனால் வழக்கத்தை விட நீங்கள் அதிகமாகவே சாப்பிட நேரிடும்.

வயிற்று கொழுப்பை எப்படி குறைக்கலாம்?

வயிற்று கொழுப்பை எப்படி குறைக்கலாம்?

உங்கள் வயிற்றுப்பகுதியில் இருக்கும் கொழுப்பை குறைக்க மிகவும் சுலபமான வழி படிப்படியாக நீங்கள் சாப்பிடும் அளவின் குறைப்பதும், ஆரோக்கியமற்ற உணவுகளையும் தவிர்ப்பதும்தான். மாறாக திடீரென சாப்பிடும் உணவின் அளவை குறைப்பது எந்த பலனையும் தராது. நீங்கள் எடுத்துக்கொள்ளும் கலோரிகளின் அளவை கணக்கில் கொள்ள வேண்டும், அதேசமயம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

டயட்

டயட்

கண்மூடித்தனமாக எந்த டயட்டையும், மற்றவர்களின் அறிவுரைகளையும் பின்பற்றாதீர்கள். ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமானதாக இருக்கும். உங்கள் உடலுக்கேற்ற டயட் என்பதை ஆராய்ந்து அதனை தொடங்கலாமா, கூடாதா என்று மருத்துவரை ஆலோசித்த பிறகே டயட்டில் இறங்க வேண்டும்.

MOST READ: உங்கள் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள இந்த சாதாரண உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!

உடற்பயிற்சிகள்

உடற்பயிற்சிகள்

உங்களின் வாழ்க்கைமுறையை ஆரோக்கியமானதாக மாற்றிக்கொள்ள வேண்டும், குறிப்பாக சில அடிவயிற்று உடற்பயிற்சிகளையும், போதுமான தூக்கம் மற்றும் ஆரோக்கியமான உணவுகள் என அனைத்தையும் சரியாக பார்த்து கொள்ள வேண்டும். உங்களின் பழக்கங்களுக்கு உங்கள் உடல் பழகிக்கொள்ள போதுமான நேரம் வழங்குங்கள். சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை பெருமளவு தவிர்க்கலாம். சுடுதண்ணீரில் எலுமிச்சைசாறை கலந்து தினமும் காலையில் குடிப்பது உங்களின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can eating less shrink your tummy?

A lot of people believe that by eating less they can shrink their tummy.
Story first published: Wednesday, May 22, 2019, 13:30 [IST]
Desktop Bottom Promotion