For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செரிமானமே ஆக மாட்டேங்குதா.. விரல்களாலே முத்திரைகள் செய்து தீர்வு காணலாம்

By Haribalachandar Baskar
|

இன்றைய காலக் கட்டத்தில் காலை உணவை உண்பவர்களின் விகிதாச்சாரம் என்பது நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே இருக்கிறது. அதே மாதிரி நேரத்துக்கு உண்கிறோமா என்றால் அதுவும் கிடையாது. எதாவது உணவுக்கட்டுப்பாட்டுகளை கையாள்கிறோம் என்றால் அதுவும் கிடையாது. தினந்தோறும் அடுத்தக்கட்டத்திற்கு நகர்கிறோம் என்று சொல்லிக் கொண்டு உடலைப் பத்தி, உணவுமுறைகளைப் பத்தி எந்தக் கவலையும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

நாடோடி மன்னன்:

பிறந்தது ஒரு இடம், படித்தது ஒரு இடம், வளர்ந்தது ஒரு இடம், கல்யாணமாகி செட்டில் ஆனது ஒரு இடம் இப்படி ஒரு வாழ்க்கையில் பல பரிமாணங்களை பார்க்கிறேன் என்று உலகம் சுற்றும் வாலிபனாக தன்னை உலகிற்கு காட்ட வேண்டுமானால் சரியாக இருக்கும். ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சீதோஷ்ண நிலையைக் கொண்டிருக்கும் அந்த சீதோஸ்ன்ண நிலைக்கு ஏற்றவாறு தான் உணவுகள் கிடைக்கும். அந்த இடத்தில் நம் உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவுகளை நிச்சயம் கேட்டுப் பெற முடியாது. இதனாலும் வயிறு மிக மோசமாக பாதிக்கப்படுகிறது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1

1

குப்பைத் தொட்டியில் கொட்டப்படும் பொருட்கள் அழுகுவதைப் போன்றுதான் நமது வயிறும். நினைத்த நேரத்தில் கிடைத்ததைக் கொட்டினால் அது என்ன செய்யும் அழுகிய பொருள்களின் கூடாரமாக மாறிப்போன வயிற்றில் செரிமான பிரச்சினைகள் உருவாகத் தானே செய்யும்.

Most Read: இன்னைக்கு இந்த 2 ராசியும்தான் டாப்... உங்கள அடிச்சிக்கவே முடியாது...

மன அழுத்தம்:

மன அழுத்தம்:

இதுமட்டுமல்லாமல் மன அழுத்தம் காரணமாகவும் வயிற்றில் பிரச்சினைகள் உருவாகின்றன. இப்போதெல்லாம் குழந்தைகள் கூட மன அழுத்தத்தில் இருப்பதாக சர்வசாதரணமாக கூறுகிறார்கள். இது செரிமானப் பிரச்சினைகளோடு மட்டுமல்லாமல் முடி உதிர்தல், தலைவலி உள்ளிட்ட பல வியாதிகளுக்கும் வழிவகுக்கிறது.

யோகா:

யோகா:

இல்லதரசிகள் கூட இப்போது உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அப்படி உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பட்சத்தில் அவர்கள் செய்யும் தினசரி வேலைகளிலே அனைத்துவிதமான யோகாக்களும் அடங்கிவிடுகின்றன.

ஆனால் தற்போதைய சூழலில் அந்த இடங்களையெல்லாம் தொழில்நுட்பம் பிடிங்கிக் கொண்டதால் உடல் உழைப்பிற்கென்று தனியாக நேரம் ஒதுக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது.

அப்படி இருக்கும் சூழலில் விஞ்ஞான உலகில் பம்பரமாக சுற்றும் வாலிபர்களுக்கு எங்கே நேரமிருக்கப் போகிறது. உடற்பயிற்சி செய்யும் போது கல்லையும் செரித்த வயிறு இப்போது வாழைப்பழத்தைக் கூட செரிக்க மறுக்கிறது. மீண்டும் உடல் உழைப்பை தரக்கூடிய பழைய வாழ்க்கைக்கு நம்மால் செல்ல முடியும் தான். ஆனால் நமது மனம் அதை நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது. ஏனெனில் இன்ஸ்டெண்ட்டை விரும்புகிறோம் அல்லவா. அப்படி வயிறு பிரச்சினைகளை தீர்ப்பதற்காகத்தான் யோக முத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன.

புஷன் முத்ரா:

புஷன் முத்ரா:

செரிமான மண்டலம் என்பது உடலிலுள்ள மிக முக்கியமான மணடலங்களில் ஒன்று. உடலுக்குத் தேவையான உள்ளீடுகளை இது தான் உடலுக்குள் எடுத்துச் செல்கிறது. அந்தச் செரிமான மணடலம் எப்போதாவது கோளாறு கொடுக்கும் போது அல்லது கோளாறு கொடுக்காமல் இருப்பதற்காக நம் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்ட முத்ரா தான் புசன் முத்ரா.

என்ன செய்யும்:

புஷன் முத்ரா உடலிலுள்ள பிராண வாயு, சமண வாயு, அப்னா வாயு (அசுத்த வாயு) ஆகியவற்றை திறம்பட செயல்பட வைக்கிறது. மற்ற கை முத்திரைகளில் வலது கையில் என்ன மாதிரியான நிலையில் முத்ராக்களை செய்கிறோமோ அதே மாதிரில் நிலையில் தான் இடது கைக்கும் செய்ய வேண்டும். ஆனால் இந்த முத்ராவில் வலது கை வாயுக்களை பெறும் இடமாகவும், இடது கை வாயுக்களை வெளியேற்றும் இடமாகவும் இருக்கிறது.

Most Read: டயட் இருக்கும்போது நீங்க செய்யற ஆபத்தான 10 விஷயங்கள் என்ன தெரியுமா?

சூரிய தெய்வம்

சூரிய தெய்வம்

சூரிய தெய்வமாக கருதப்படும் புஷன் நமது பூலோக வாழ்க்கைக்குப் பின்னான வாழ்வையும் வழிநடத்துவதாக கூறுகிறார்கள். அந்தச் சூரிய பகவான் தான் வாழ்க்கையில் நடக்கக்கூடிய மாற்றங்களான திருமனம், இடம் மாறுதல், குழந்தைப் பேறு போன்ற அனைத்து விசயங்களையும் நிர்ணயிக்கிறார்.

6

6

உடலளவில் பார்க்கும் பொழுது புஷன் முத்ரா வயிறு, குடல், மற்றும் பித்தப்பையுடன் தொடர்புடையது. வயிறு நிறைய சாப்பிடும் பொழுது குமட்டல், வாய்வுத்தொல்லகள் போன்றவை ஏற்படுகின்றன. அதைச் சரிசெய்வதற்கான மருத்துவமுறையிலான சிகிச்சை இது அல்ல. மாறாக உடல்நிலையை சீராக்குவதற்கு அதிகப்படியான முயற்சிகள் தேவைப்படும் போது, அல்லது செரிமானத்தை ஊக்குவிக்க உடலின் பாகங்களைத் தூண்டும் பொழுது யோக முத்திரைகள் பெரிதும் கைக்கொடுக்கின்றன.

புஷன் முத்திராவை செய்யும் முறைகள்:

புஷன் முத்திராவை செய்யும் முறைகள்:

வலது கையில் செய்யும் முத்ரா:

புளிச்ச ஏப்பம் /எதுக்களிப்பு

கட்டை விரலின் நுனியைக் கொண்டு நடுவிரல் மற்றும் ஆள்காட்டி விரலின் நுனியை அழுத்த வேண்டும். சுண்டு விரலும் மோதிர விரலை நேராக நீட்ட வேண்டும்.ஆசனங்களை செய்யும் போது மன ஒருநிலையுடன் செய்வது தான் முழுமையான பலன்களை அளிக்கும்.

வாயு, வயிறு வீக்கம் அல்லது மலச்சிக்கல்:

வாயு, வயிறு வீக்கம் அல்லது மலச்சிக்கல்:

கட்டை விரலைக்கொண்டு சுண்டுவிரலையும் மோதிர விரலின் நுனியையும் அமுக்க வேண்டும். இதில் ஆள்காட்டி விரலையும், நடுவிரலையும் நேராக நீட்ட வேண்டும்.

Most Read: காதலியோட கடைங்கிறதால காபி நிறைய குடிச்சு சர்க்கரை நோயால் பாதித்த மனிதர்... அடக்கொடுமையே!

இடது கையில் செய்யும் முத்ரா:

இடது கையில் செய்யும் முத்ரா:

இடது கையில் செய்யும் பொழுது கைகளின் நிலைகளில் மட்டும் மாறுபடும். கட்டை விரலின் நுனியைக் கொண்டு மோதிர விரலையும், நடுவிரலினின் நுனியையும் சேர்த்து அழுத்த வேண்டும். மீதமிருக்கிற இரு விரல்களை நேராக நீட்ட வேண்டும்.

பொதுவாக கைகளால் செய்யப்படும் முத்திரைகள் 45 நிமிடங்கள் செய்யப்படுகின்றன. ஆனாலும் எவ்வளவு நேரம் செய்கிறோமோ அந்த அளவுக்கான பலன்களை அடைய முடியும். மேலும் இந்த முத்ராவை எந்த ஆசன நிலையிலும் செய்யலாம்.

சிலசமயங்களில் தொடர்ந்து செய்பவர்களுக்கு எந்தப்பலனும் கிடைக்கவில்லை என்று சொல்வார்கள். ஆனால் முத்ராவை செய்வதற்கான வழிமுறைகள் என சில இருக்கின்றன. அதோடு சுவாசத்தை சரியாக மேம்படுத்தினால் புஷன் முத்ரா நீங்கள் எதிர்பார்த்த பலன்களை நிச்சயம் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

a hand mudra for digestion Gastritis

Pushan mudra handles prana vayu, samana vayu and apana vayu to control the Digestion process. In this article we are sharing about A Hand Mudra for digestion Read on
Story first published: Friday, July 19, 2019, 17:10 [IST]