For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எடை குறைப்பு, கொழுப்பு குறைப்பு எது சிறந்தது?

நம்மில் பலரும் எடை குறைப்பும், கொழுப்பு குறைப்பும் ஒன்றென நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் இவை இரண்டுமே வித்தியாசமானவை, இவற்றின் விளைவுகளும் கூட வித்தியாசமானவைதான்.

|

இன்று அதிகளவு உள்ள பிரச்சினை அதேசமயம் மிகப்பெரிய வியாபாரம் இரண்டுமே எடை அதிகரிப்புதான். எடை அதிகரிப்பதை பிரச்சினையாக பார்க்கும் மக்கள் அதனை வியாபாரமாக்க துடிக்கும் கம்பெனிகள் இவைதான் நம்மை சுற்றி பெரும்பாலும் இருக்கிறது. நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் எடை குறைப்பிற்கு, கொழுப்பு குறைப்பிற்கும் உள்ள வேறுபாடுதான்.

Weight loss or Fat loss: Whats the difference?

உண்மைதான். நம்மில் பலரும் எடை குறைப்பும், கொழுப்பு குறைப்பும் ஒன்றென நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் இவை இரண்டுமே வித்தியாசமானவை, இவற்றிற்கான வழிமுறைகள் வித்தியாசமானவை ஏன் இவற்றின் விளைவுகள் கூட வித்தியாசமானவைதான். இங்கே இவற்றிக்குள்ள வித்தியாசத்தை பற்றியும், அதன் பலன்களை பற்றியும் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடை இழப்பு

எடை இழப்பு

உங்களின் உடல் எடை என்பது சதைகளின் எடை, எலும்புகளின் எடை, உடலுறுப்புகள் மற்றும் நம் உடலில் இருக்கும் மொத்த நீரின் அளவு என அனைத்தையும் சேர்த்து கணக்கிடப்படுகிறது. எடை இழப்பு என்பது இந்த மொத்த எடையில் இருந்து கொஞ்சம் எடையை இழப்பதாகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் எடை இழப்பு = தசை இழப்பு + கொலுப்பு இழப்பு + நீர் இழப்பு.

கொழுப்பு இழப்பு

கொழுப்பு இழப்பு

இந்த வார்த்தையிலேயே இதன் அர்த்தம் புரிந்திருக்கும். கொழுப்பு இழப்பு என்பது உடலில் உள்ள கொழுப்புகள் மட்டும் குறைவாதாகும். சுருக்கமாக கூற வேண்டுமென்றால் கொழுப்பு இழப்பு = உடலில் உள்ள கொழுப்புகள் மட்டும் குறைவது.

எடை இழப்பில் உள்ள பிரச்சினைகள்

எடை இழப்பில் உள்ள பிரச்சினைகள்

நீங்கள் எடையை குறைக்க விரும்பினால் நீங்கள் அதிக கொழுப்பை சுமந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். எடை குறைப்பை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான தகவல்கள் யாதெனில் உங்கள் எடையை முதலில் நம்பாதீர்கள். ஏனெனில் உங்கள் எடை தினமும் மாறக்கூடியது. உங்கள் வயிறு, குடல், நீர் இழப்பு போன்றவற்றை பொருத்து எடை மாறுபட்டு கொண்டே இருக்கும்.

பொருத்தமற்ற எடை

பொருத்தமற்ற எடை

எடை இழப்பில் நீங்கள் நம்பக்கூடாத மற்றொரு விஷயம் பொருத்தமற்ற எடை. ஒரே உயரத்தில் உள்ள இரண்டு நபரின் எடை வேறு வேறாக இருக்கும். இதற்கு காரணம் ஒருவரை விட மற்றொருவர் அதிக கொழுப்பை கொண்டிருப்பதுதான் ஆகும். குறிப்பாக உங்கள் உடலின் பிஎம்ஐ உங்கள் உடலில் உள்ள கொழுப்பை கணக்கிடாது. ஏனெனில் ஒரே அளவு பிஎம்ஐ உள்ளவர்கள் கூட வெவ்வேறு எடையில் இருக்க வாய்ப்புள்ளது.

உடல் வலிமை

உடல் வலிமை

நீங்கள் எடை குறைக்கும் போது உங்கள் உடல் வலிமை பெரும் என்று நம்புவது முட்டாள்தனம். ஏனெனில் எடை குறைப்பிற்கு உடல் வலிமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வலிமையான உடலில் கொழுப்பின் அளவு குறைவாக இருக்கும். அதாவது ஆண்களுக்கு 10 முதல் 15 சதவீதமும், பெண்களுக்கு 15 முதல் 20 சதவீதமும் இருக்கவேண்டும். உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவே உங்கள் வலிமையை குறிப்பதாகும்.

டயட்

டயட்

டயட் என்பது பெரும்பாலும் உங்கள் உடல் எடையை குறைக்க பயன்படுவதுதானே தவிர கொழுப்பை குறைக்க அல்ல. உடல் எடை என்பது உடலில் உள்ள நீரின் அளவை பொருத்து அமைவது. டயட் முடிந்த பிறகு நீங்கள் எடை குறைந்ததாக உணர காரணம் உங்கள் உடலில் உள்ள நீரின் அளவு குறைவதுதான். அதேபோல கார்போஹைட்ரேட்டும் உடல் எடையை அதிகரிக்கும். டயட்டின் நோக்கமே உங்கள் உடலில் உள்ள நீர் மற்றும் கார்போஹைட்ரேட்டை குறைப்பதுதான்.

கொழுப்பு இழப்பு

கொழுப்பு இழப்பு

கொழுப்பு இழப்பு சில சமயம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம். எவ்வாறெனில், எடை இழப்பு ஏற்படும் போது உங்களின் தசைகள் பலவீனமடைவது மீண்டும் உங்கள் எடை அதிகரிக்க காரணமாய் அமையலாம். தசைகள் பலவீனம் அடையும்போது உங்கள் வளர்ச்சிதை மாற்றம் குறையும் எனவே நீங்கள் இழந்த எடை மீண்டும் வந்துவிடும். அதற்காக நீங்கள் எடையை குறைக்க வேண்டாமென்று அர்த்தமில்லை, எடையை குறைக்கும் அதே நேரத்தில் கொழுப்பை குறைக்கவும் முயற்சி செய்யுங்கள். இது இரண்டையும் ஒரே நேரத்தில் பெற செய்ய வேண்டியது எடை குறைப்பு பயிற்சியுடன் கார்டியோ பயிற்சியையும் செய்வதுதான்.

எவ்வாறு செய்வது?

எவ்வாறு செய்வது?

தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளே இதற்கான வழியாகும். இந்த பயிற்சியில் உங்கள் தசைகள் வலுப்பெறுவதுடன் கொழுப்பும் குறையும். வெறும் டயட் என்பது உங்களை அப்பொழுது மட்டும் எடை குறைவாக காட்ட உதவும் அவ்வளவுதான், மேலும் உடலளவில் உங்களை பலவீனமடைய செய்யும். அதேசமயம் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும், 90 சதவீதம் காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து கொள்ளுங்கள். ஊட்டச்சத்து அட்டவணையை பின்பற்றுங்கள்.

கொழுப்பு இழப்பின் விளைவுகள்

கொழுப்பு இழப்பின் விளைவுகள்

கொழுப்பு இழப்பு என்பது எடை தூக்கும் பயிற்சி + கார்டியோ பயிற்சி + சத்தான உணவு + தூக்கம் ஆகியவை கலந்த கலவையாகும். இது உடல் வலிமையை அதிகரிக்கும், கொழுப்பை மட்டுமே குறைக்கும் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.

எடை இழப்பின் விளைவுகள்

எடை இழப்பின் விளைவுகள்

எடை இழப்பு என்பது கார்டியோ பயிற்சி = எடை இழப்பு. ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. உடல்வலிமையை குறைக்கிறது. தசைகளின் வலிமையை குறைக்கும் அதோடு உடலமைப்பையும் மாற்றும், வளர்ச்சிதை மாற்றத்தை குறைக்கும்.

எது சிறந்தது?

எது சிறந்தது?

மேற்கண்ட தகவல்களில் உங்களுக்கே புரிந்திருக்கும் எது சிறந்தது என்று. எடை இழப்பை காட்டிலும் கொழுப்பை குறைப்பதே உங்களை ஆரோக்கிய வாழ்வு வாழ செய்யும். உங்களின் உடல் வலிமை என்பது எப்பொழுதும் உங்கள் எடை சார்ந்தது அல்ல அதனை மறந்து விடாதீர்கள். எனவே சீரான எடையை பராமரியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weight loss or Fat loss: What's the difference?

Weight loss means, your body weight can be defined as the sum of the weight of your muscles, your bones and the amount of water your body retains. Fat loss means, as the term suggests, it’s the loss of the fat that your body carries. Now the question is which one is best?
Story first published: Thursday, August 30, 2018, 17:34 [IST]
Desktop Bottom Promotion