இந்த 3 எடை இழப்பு ஊசிகள் குறித்து கேள்விப்பட்டதுண்டா?

Posted By:
Subscribe to Boldsky

இன்று உடல் பருமன் என்பது பெரும் பிரச்சனையாகவே உள்ளது. இதற்கு தற்போதைய மோசமான உணவுப் பழக்கங்களும், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையும் தான் காரணங்களாக உள்ளன. இப்படி பருமனான உடலைக் குறைக்க எத்தனையோ வழிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் இயற்கை வழிகளின் மூலம் தான் உடல் எடையைக் குறைக்க விரும்புகின்றனர். ஆனால், இயற்கை வழிகளின் மூலம் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், அதற்கு சற்று பொறுமை அவசியம். ஏனெனில் இயற்கை வழிகளினால் எடையைக் குறைக்க முயலும் போது, அதன் பலன் சற்று தாமதமாகவே கிடைக்கும்.

சிலர் கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பார்கள். இருப்பினும், அவற்றால் எந்த பலனும் கிடைத்திருக்காது. இதனால் நவீன மருந்துகளின் உதவியுடன் உடல் எடையைக் குறைக்கலாம் என்று, அதைப் பின்பற்ற நினைப்பார்கள். அப்படி உடல் எடையை வேகமாக குறைக்க அதிகம் பயன்படுத்தப்படுபவைகள் தான் சப்ளிமென்ட்டுகள் மற்றும் எடை இழப்பு மாத்திரைகள்.

இதன் அடுத்த நிலையாக அறுவை சிகிச்சையின்றி, உடல் எடையைக் குறைக்க உதவும் ஓர் வழி தான் எடை இழப்பு ஊசிகள். உங்களுக்கு ஊசி என்றால் பயமா? அப்படியானால் இக்கட்டுரை நிச்சயம் உங்களுக்கானது அல்ல. இருப்பினும் நீங்கள் வேகமாக உடல் எடையைக் குறைக்க நினைத்தால், ஊசி பயத்தை விட்டொழித்து, இந்த முறையை முயற்சி செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடை இழப்பு ஊசிகள்

எடை இழப்பு ஊசிகள்

உடல் எடையைக் குறைக்க பல்வேறு வகையான எடை இழப்பு ஊசிகள் உள்ளன. ஒருவர் எடை இழப்பு ஊசிகளின் மூலம் உடல் எடையைக் குறைக்க முடிவெடுத்துவிட்டால், உங்களை நீங்களே ஒருசில கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள். உண்மையிலேயே இதுவரை எடையை குறைக்கும் அனைத்து வழிகளையும் பின்பற்றி உள்ளீர்களா? எடை இழப்பு ஊசியைப் போட்டுக் கொள்ள மனதளவில் தயாராக இருக்கிறீர்களா? அப்படியெனில் இக்கட்டுரையை முழுமையாக படியுங்கள். அப்படி படித்த பின்பும் எடை இழப்பு ஊசி போட்டுக் கொள்ள தயார் என்றால் போட்டுக் கொள்ளுங்கள்.

எடை இழப்பு ஊசிகளின் வகைகள்

எடை இழப்பு ஊசிகளின் வகைகள்

எடை இழப்பு ஊசிகளைப் போட்டுக் கொள்வதற்கு தயாரான பின், எடை இழப்பு ஊசிகளில் உள்ள வகைகள் குறித்தும், எப்படி வேலை செய்கிறது என்றும் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். இதுக்குறித்த தகவல்கள் அனைத்து கிளினிக்கிலும் கிடைக்கும். ஆனால் தவறான ஊசிகளைப் போட்டுக் கொண்டால், அதனால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே கவனமாக இருங்கள்.

எச்சரிக்கை!

எச்சரிக்கை!

எடையைக் குறைக்க போடப்படுவது ஊசி என்பதால், தவறானதாக இருந்தால், பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும். சிலருக்கு சில பொருட்கள் அலர்ஜியாக இருக்கும். ஆகவே எடையைக் குறைக்கப் போடப்படும் ஊசியில் என்ன பொருள் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். கீழே மிகவும் பிரபலமான எடை இழப்பு ஊசிகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

பி12

பி12

இந்த வகை எடை இழப்பு ஊசியானது நம் உடலில் வைட்டமின் பி12 விளைவை பயன்படுத்துகிறது. இந்த வைட்டமின் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் மற்றும் உடலில் உள்ள கொழுப்புச் செல்களை வேகமாக ஆற்றலாக மாற்றும் செயலை செய்யும். இதன் விளைவாக உடலில் உள்ள கொழுப்புத் திசுக்களின் அளவு குறையும். ஒருவர் சரியான அளவில் பி12 ஊசியைப் போட்டுக் கொண்டால், அது கொழுப்புக்களைக் கரைக்க உதவும் மற்றும் எடையையும் குறைக்கும். ஆனால் இந்த வகை ஊசியின் விளைவை பல மருத்துவர்கள் மறுக்கிறார்கள்.

லிப்போட்ரோபிக்

லிப்போட்ரோபிக்

லிப்போட்ரோபிக்ஸை கொழுப்பு எரிபொருளாகப் பயன்படுத்தும் பல லிப்போட்ரோபிக் ஊசிகள் உள்ளன. லிப்போட்ரோபிக்கில் உள்ள கொழுப்பை எரிக்கும் பண்புகளால் தான், இந்த ஊசிகள் உடல் எடையைக் குறைக்கும் ஊசிகளாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஊசியில் மெத்தியோனைன், கோலைன் மற்றும் இனோசிடோல் போன்ற முக்கிய கெமிக்கல்கள் உள்ளன. இந்த ஊசியை சரியான அளவில் போட்டு வந்தால், லிப்போட்ரோபிக் ஊசிகள் எளிதில் உடலில் உள்ள தேவையற்ற உடல் எடையைக் குறைக்க உதவும்.

வைட்டமின் பி மற்றும் லிப்போட்ரோபிக்

வைட்டமின் பி மற்றும் லிப்போட்ரோபிக்

இந்த வகை ஊசியில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி6, பி12 மற்றும் சி-யுடன், 3 லிப்போட்ரோபிக்ஸ் மற்றும் லிடோகைன் போன்றவை அடங்கியிருகும். இந்த ஊசியில் அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்கத் தேவையான அனைத்து உட்பொருட்களும் உள்ளன. அதே சமயம் முக்கியமான வைட்டமின்களும் உள்ளன. ஒருவேளை உங்களுக்கு விடோகைன் அழற்சி என்றால், இந்த வகை ஊசியைத் தவிர்த்திடுங்கள். இந்த ஊசியில் உள்ள லிடோகைனைத் தவிர வேறு எதுவும், அழற்சியை ஏற்படுத்தாது. இந்த ஊசியைப் பயன்படுத்துவதால் முன்பு கூறப்பட்ட இரண்டு வகை ஊசிகளின் பலனும் கிடைக்கும்.

குறிப்பு

குறிப்பு

எடையைக் குறைக்க எடை இழப்பு ஊசியைத் தேர்ந்தெடுத்தால், அதற்கு எந்த அளவு மருந்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். மருத்துவர்களால் மட்டுமே எந்த அளவு மருந்தை எடுக்க வேண்டும் என்பதைக் கூற முடியும். மேலும் இந்த எடை இழப்பு ஊசியை தாங்களாகவே போட்டுக் கொள்ளலாம். ஒருவேளை முடியாவிட்டால், அருகில் உள்ள மருத்துவரிடம் சென்று போட்டுக் கொள்ளலாம். ஆனால் இந்த ஊசியை தொடர்ச்சியாக போட்டுக் கொண்டால் மட்டுமே, உடலில் ஒரு நல்ல மாற்றத்தை உடனே காண முடியும்.

நினைவில் கொள்ள வேண்டியவை

நினைவில் கொள்ள வேண்டியவை

எடை இழப்பு ஊசியின் உதவியுடன் உடல் எடையைக் குறைக்க முயற்சித்தாலும், இது தற்காலிகம் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேப் போல் இந்த ஊசியைப் போட்டாலும், ஆரோக்கியமான டயட் மற்றும் பழக்கவழக்கங்களை மேற்கொள்ள வேண்டியது முக்கியம். ஒருவேளை இந்த ஊசியைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, பழைய படி கண்ட உணவுகளை உட்கொண்டு வந்தால், மீண்டும் பழைய உடல் பருமனைப் பெறக்கூடும். ஆகவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றி ஆரோக்கியமாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Types Of Weight Loss Injection

Here we gave the most popular injections for weight loss. Read on to know more...