For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரபலங்களின் இட்லி டயட்...! ஒரே மாதத்தில் குண்டான உடலை ஒல்லியாக்க இட்லி ஒன்றே போதுமே..!

தென்னிந்திய உணவுகளில் மிகவும் பெருமைமிக்க ஆரோக்கியமான உணவு இட்லிதான். சிறிய வட்ட வடிவ, மிகவும் மென்மையான உணவு பொருட்களின் ராஜாவே இதுதான். இட்லி இன்றோ அல்லது நேற்றோ வந்த உணவு கிடையாது. பல நூறு வருடமாக

|

"சப்பாத்தி குருமா... எங்க ஊரு இட்லி போல வருமா..?!" இப்படி பாடல் வரியே இட்லிக்கு சாதகமா இருப்பது, இட்லியின் பெருமையை பறைசாற்றுவதற்கே. தென்னிந்திய உணவுகளில் மிகவும் பெருமைமிக்க ஆரோக்கியமான உணவு இட்லிதான். சிறிய வட்ட வடிவ, மிகவும் மென்மையான உணவு பொருட்களின் ராஜாவே இதுதான். இட்லி இன்றோ அல்லது நேற்றோ வந்த உணவு கிடையாது.

Idli Benefits Health

பல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இருக்கிறது. அத்துடன் பல பிரபலங்களும் இட்லி டயட்டால் உடல் எடை குறைந்துள்ளதாக கூறியுள்ளனர். இத்தகைய பெருமைக்குரிய இட்லியில் அப்படி என்னதான் இருக்கிறதுனு... பல நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவு ரொம்ப பிரமிக்கத்தக்கது. இந்த சின்ன இட்லிக்குள்ள என்னதான் ரகசியம் இருக்கிறதுனு தெரிஞ்சிக்கணுமா..? இந்த பதிவை முழுமையாக படித்து தெரிஞ்சிக்கோங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இட்லியின் வரலாறு

இட்லியின் வரலாறு

இட்லிகூட வரலாறு இருக்கானு யோசிக்கிறீர்களா...!? ஆமாங்க, இட்லிக்குனு ஒரு பழமையான குறிப்பே இருக்குது. சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு இட்லி. இதன் பண்டையகால பெயர் "இட்டரிக" என்பதாகும். அந்த காலத்து நூல்களில் இட்லி செய்யும் செய்முறை வேறு, இப்பொது நாம் செய்யும் இட்லியின் செய்முறை வேறு. இந்த நவீன முறை இட்லி 1250 ஆம் ஆண்டுக்கு பின் எழுதப்பட்ட நூல்களில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேஸியாவை ஆண்ட இந்து சமய அரசர்களின் நூல்களில் குறிப்பிடபட்டுள்ள செய்முறை தான் இப்போது பின்பற்றுவதாக, உணவு நிபுணர்கள் கூறுகின்றனர்.

இட்லியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

இட்லியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

உடலின் ஆரோக்கியம் ஊட்டச்சத்துக்களை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு உணவுகளை சாப்பிடுகிறார் என்பது கணக்கில் சேர்க்கப்படாது. மாறாக எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்டார் என்பதே முக்கியமானது. ஒரே ஒரு இட்லியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எவ்வளவு என்பதை இப்போது பார்ப்போம்.

1. கலோரிகள் - 65

2. வைட்டமின் எ, பி

3. கார்போஹைடிரேட்

4. புரத சத்து

5. இரும்பு சத்து

6. பொட்டாசியம்

7. அமினோ அமிலங்கள்

8. நார்சத்து

உடல் எடையை குறைக்குமா..?

உடல் எடையை குறைக்குமா..?

இப்போது பலரின் கேள்விக்கும் விடை தெரிந்துவிடும். இட்லி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா..? இது உண்மைதாங்க. தினமும் காலையில் அல்லது மாலையில் இட்லிகளை சாப்பிட்டால் ஓரே மாதத்தில் 4 கிலோ வரை எடையை குறைக்க முடியும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக தினமும் 3 வேலைகளும் இட்லியை சாப்பிட கூடாது. மற்ற உணவுகளை காட்டிலும் இதில் கொழுப்பு சத்துக்கள் மிகவும் குறைவாக உள்ளது. அத்துடன் சீரான அளவே கலோரிகள் உள்ளது. எனவே இது உங்கள் உடல் எடை கூடவதை தடுக்கும். அத்துடன் மிக கச்சிதமான உடல் அமைப்பை தரும்.

ஏன் உடலுக்கு நல்லது..?

ஏன் உடலுக்கு நல்லது..?

பொதுவாக வேக வைத்த உணவுகளை சாப்பிட்டால் உடலுக்கு அதிக கொழுப்புகள் சேராது. ஒரு இட்லியில் சுமார் 65 கலோரிகளே இருக்கும். எனவே இது 15 gm அளவே கரைக்க கூடிய கொழுப்புகளை உடலுக்கு கொடுக்கும். அதனால் இட்லியை இதயம் நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் பெரிதும் உணவில் சேர்த்து கொள்ளலாம். இட்லியை சாம்பாருடன் சேர்த்து சாப்பிடுவது அதிக நலனை தரும். இட்லியும் சாம்பாருமே நல்ல பொருத்தமான உணவு ஜோடிகளாக இன்றளவும் அதிக பேரால் கருதப்படுகின்றது.

இட்லியின் வகைகள்

இட்லியின் வகைகள்

இட்லியிலும் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு விதமான ஊட்டச்சத்துகளும் நிறைத்திருக்கும்.

#அரிசி-உளுந்து இட்லி (65 கலோரிகள்)

#கோதுமை இட்லி (62 கலோரிகள்)

#ராகி இட்லி (125 கலோரிகள்)

#ஓட்ஸ் இட்லி (26 கலோரிகள்)

இந்த வகைகளில் உங்கள் உடலுக்கு எது மிகவும் ஆரோக்கியத்தை தரும் என்பதை பொருத்து உண்ணவும்.

பயன்கள் 1,2,3

பயன்கள் 1,2,3

1. அரிசியால் இது தயாரிக்க படுவதால் கார்போஹைட்ரெட் கொண்டதாக இருக்கும். இதனை உடலில் சேரவிடாமல் செய்ய சிறிது சிட்ரஸ் சாறுகள் கொண்ட பழங்களை இதனுடன் சேர்ப்பது மேலும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

2. மிகவும் கம்மியான அளவே சோடியம் இருப்பதால், இது இதய நோய்களை பெரிதும் வராமல் தடுக்கும். கரைய கூடிய கொழுப்புகளே இதில் உள்ளது. எனவே இதயத்திற்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

3. இட்லியில் உளுந்து சேர்ப்பதால், அதில் உள்ள புரத சத்துக்கள் உங்களின் உடல் எடை குறைவதோடு உயரமாகவும் வளர செய்யும்.

பயன்கள் 4,5,6

பயன்கள் 4,5,6

4. மிக சுலபமாக செரிமானம் ஆகக்கூடிய உணவுகளில் இட்லி முதன்மையான இடத்தில் உள்ளது. எனவே இது மலசிக்கலை கண்டிப்பாக ஏற்படுத்தாது. கோதுமை மாவில் செய்கின்ற இட்லி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மையை தரும்.

5. இட்லியை சாப்பிடுவதால் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். மந்தமாக இருக்கும் உங்கள் மூளையை தூண்டி அதிக நேரம் வேலை செய்ய மிகவும் உதவும்.

6. இரும்பு சத்து இட்லியில் உள்ளதால் ரத்த ஓட்டத்தை செம்மைப்படுத்தும்.

இத்தகைய பயனுள்ள இட்லியை சாப்பிட்டு நீண்ட நாட்கள் நோயின்றி வாழ்வீர்களாக...! இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களையும் ஆரோக்கியமான வாழ்வை வாழ செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Idly aids Weight Loss & Health Benefits

Idly is the most popular Indian homemade food which is mostly consumed in breakfast. The batter of Idly contains white rice that is cooked, black lentils and salt. The steaming process makes the Idly nutritious and part of a healthy Indian food.
Desktop Bottom Promotion