For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க...

|

Recommended Video

தொப்பையை குறைக்க இதோ சில டிப்ஸ்- வீடியோ

இன்றைய பரபரப்பான காலத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் சூழ்நிலையில் நாம் உள்ளோம். இதனால் உடலுக்கு வேண்டிய உழைப்பு கிடைக்காமல், உண்ணும் உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் அப்படியே உடலினுள் தங்கிவிடுகிறது. இதன் விளைவாக பலருக்கும் அசிங்கமாக பானைப் போன்று தொப்பை தொங்கிக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக திருமணமாவதற்கு முன்பே பல ஆண்கள் தொப்பையை பரிசாக பெற்று, வயதான தோற்றத்தைப் பெறுகின்றனர். பெண்களுக்கு தொப்பை இருந்தால், அவ்வளவு அசிங்கமாக தெரியாது. ஆனால் ஆண்களுக்கு என்றால் நன்கு தெரியும். இப்படி அசிங்கமாக இருக்கும் தொப்பையைக் கரைக்கவும், இனிமேல் தொப்பை வராமலும் இருக்க வேண்டுமென்றால், அன்றாடம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

பல ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களது தொப்பையைக் கரைத்து, தட்டையான வயிற்றைப் பெறுவதற்கு ஜிம்மில் சேர்ந்து, உடற்பயிற்சிகளை செய்து வருகின்றனர். ஆனால் வெறும் உடற்பயிற்சி மட்டும் ஒருவரது தொப்பையைக் குறைக்காது. அத்துடன் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை எடுக்க உதவும் பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களையும் சேர்க்க வேண்டும்.

அதில் தொப்பையைக் கரைத்து தட்டையான வயிற்றைப் பெற உதவும் ஓர் அற்புதமான பானம் தான் எலுமிச்சை இஞ்சி பானம். இதை ஒருவர் அன்றாடம் குடித்து வந்தால், விரைவில் தட்டையான வயிற்றைப் பெறலாம். சரி, இப்போது இஞ்சி எலுமிச்சை பானத்தின் நன்மைகளையும், அந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்றும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

இஞ்சி பசி உணர்வைக் கட்டுப்படுத்தும். எலுமிச்சை உடலில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைக்கும். ஒருவர் இந்த இரண்டு பொருளையும் கொண்டு பானம் தயாரித்து தினமும் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படும். இதன் விளைவாக உடலில் ஆங்காங்கு தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, உடல் சிக்கென்று இருக்கும்.

#2

#2

எலுமிச்சையில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும் பண்புகளும் அடங்கியுள்ளது. உங்களுக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போனால், எலுமிச்சை மற்றும் இஞ்சி கலந்த பானத்தைக் குடியுங்கள். இதனால் உடலுக்கு கிருமிகளை எதிர்த்துப் போராடும் சக்தி அதிகரித்து, அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைவைத் தடுக்கலாம்.

#3

#3

அஜீரண கோளாறால் அடிக்கடி கஷ்டப்படுவீர்களா? இஞ்சி எலுமிச்சை பானம் கொழுப்புக்களைக் கரைப்பதோடு, ஒருவரது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கி, அஜீரண கோளாறு ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் இந்த பானம் வயிற்று உப்புசத்தையும் தடுப்பதோடு, நீர் கோர்வையால் ஏற்படும் உடல் பருமனையும் குறைக்கும்.

 # 4

# 4

எலுமிச்சை இஞ்சி பானத்தை ஒருவர் தினமும் குடித்து வந்தால், அந்த பானத்தில் உள்ள மருத்துவ பண்புகள், உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இரத்தம் உறைவதைத் தடுத்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

#5

#5

எலுமிச்சை இஞ்சி பானம் கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தி, ஒட்டுமொத்த கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். ஆய்வுகளில் நீண்ட நாட்கள் இஞ்சி எலுமிச்சை பானத்தை குடித்து வந்தவர்களுக்கு கல்லீரல் நோய்கள் குணமாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், இந்த பானத்தை தினமும் குடியுங்கள்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* இஞ்சி பொடி - 1/4 டீஸ்பூன்

* தண்ணீர் - 1 1/2 கப்

* எலுமிச்சை - 1

* பட்டை தூள் - 1 சிட்டிகை

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

* ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் இஞ்சி பொடி அல்லது 1 இன்ச் இஞ்சி துண்டை தட்டிப் போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

* பின் அதை இறக்கி வடிகட்டி, வெதுவெதுப்பாகும் வரை குளிர வைக்க வேண்டும்.

* அதன் பின் எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து, அத்துடன் பட்டைத் தூளையும் சேர்த்து கலந்தால் பானம் தயார்!

* வேண்டுமானால் சுவைக்கு தேனை 1 ஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ளலாம்.

இப்போது தொப்பையைக் குறைத்து தட்டையான வயிற்றைப் பெற உதவும் இதர அற்புத பானங்களைக் காண்போம்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

எளிய வழியில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா? அப்படியானால், தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரால் தயாரிக்கப்பட்ட எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள். இந்த ஜூஸ் குடித்த 30 நிமிடங்களுக்கு வேறு எதையும் சாப்பிடக்கூடாது. இதனால் எலுமிச்சையில் உள்ள நொதிகள் உடலை சுத்தம் செய்யும் செயல்முறையில் இறங்கி, உடலியக்கத்தை சீராக வைத்துக் கொள்வதோடு, தொப்பையைக் குறைத்து சிக்கென்று இருக்க உதவும்.

இஞ்சி டீ

இஞ்சி டீ

இஞ்சி இயற்கையாகவே உடலின் வெப்பநிலையை அதிகரித்து, கொழுப்பைக் கரைக்கும் செயல்முறையை வேகப்படுத்தும். மேலும் இஞ்சி செரிமானத்திற்கு உதவும். இந்த இஞ்சியைக் கொண்டு ஒருவர் தினந்தோறும் டீ தயாரித்துக் குடித்து வந்தால், செரிமானம் சீராக நடைபெற்று, உடலின் மெட்டபாலிசம் மேம்பட்டு, கார்டிசோல் உற்பத்தி குறையும். அதிலும் ஒருவர் தினமும் குறைந்தது 2 கப் இஞ்சி டீயைக் குடித்து வந்தால், விரைவில் தொப்பை குறைவதைக் காணலாம்.

பூண்டு

பூண்டு

பூண்டில் தொப்பையைக் கரைக்கும் பண்புகள் உள்ளது. இந்த பூண்டு கொழுப்புச் செல்களை உடைத்தெறியும். அதிலும் ஒருவர் தினமும் 3 பல் பூண்டை சாப்பிட்டு, அதன் பின் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து குடிக்க, கொழுப்புக்கள் வேகமாக கரையும். இந்த செயலை ஒருவர் தினந்தோறும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து 2 வாரம் பின்பற்றினால், உங்கள் தொப்பை குறைந்து நீங்கள் ஸ்லிம்மாகி இருப்பதை நன்கு காணலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரும் ஒருவரது தொப்பையைக் குறைக்க உதவும். அதுவும் இது ஒருவரது பசியைக் கட்டுப்படுத்துவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் தடுக்கும். அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் குடிக்க வேண்டும். இதனால் தொப்பை குறைவதோடு, இரத்த சர்க்கரையின் அளவும் சீராக பராமரிக்கப்படும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலின் மெட்டபாலிசத்தை தூண்டிவிட்டு, கொழுப்புச் செல்களை அழிக்கும். அதுவும் ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, அதில் சிறிது க்ரீன் டீ இலைகள் மற்றும் சிறிது துளசி இலைகளைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிப்பது நல்லது. இந்த டீயை ஒருவர் ஒரு நாளைக்கு 3-4 கப் குடித்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

பட்டை டீ

பட்டை டீ

பட்டை உடலின் மெட்டபாலிசத்தை தூண்டிவிட்டு, கொழுப்புச் செல்களைக் கரைப்பதோடு, உடலை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும். அதற்கு தினமும் 1 டேபிள் ஸ்பூன் பட்டையை உணவில் சேர்த்து வாருங்கள். இல்லாவிட்டால், பட்டைப் பொடியை கொதிக்கும் நீரில் போட்டு ஒரு கொதி விட்டு இறக்கி, தேன் கலந்து குடியுங்கள்.

தண்ணீர்

தண்ணீர்

உங்கள் தொப்பையைக் குறைக்க வேண்டுமானால், தினமும் போதுமான அளவு நீரைக் குடிக்க வேண்டும். ஒருவர் சீரான இடைவெளியில் நீரைக் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசங்ம் மேம்படுவதோடு, உடலில் இருந்து கொழுப்புக்கள் மற்றும் டாக்ஸின்களும் நீக்கப்படும். மேலும் தண்ணீரை போதுமான அளவு குடிப்பதனால் சருமமும் பொலிவோடு ஆரோக்கியமாக மின்னும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade Lemon Ginger Flat Belly Drink

There are a lot of abs exercises that are recommended for a flat belly but lemon ginger flat belly drink can accelerate the process! Read on to know more...
Story first published: Friday, February 23, 2018, 13:47 [IST]
Desktop Bottom Promotion