சொரியாசிஸ் நோயாளிகள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

உடலின் நோயெதிர்ப்பு சக்தி அமைப்பில் ஏற்படும் கோளாறின் காரணமாக, செல்களின் வளர்ச்சி 10 மடங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு, பின் அந்த செல்கள் இறந்துவிடும். ஆனால் இப்படி இறக்கும் செல்களானது வெளிப்பட்டு, சருமத்தில் வெள்ளை நிற செதில்களை உருவாக்கும். பெரும்பாலும் சொரியாசிஸானது முழங்கால், முழங்கை, ஸ்கால்ப் போன்ற பகுதிகளில் வரும். ஆனால் சில சமயங்களில் உடலில் பாதம், உள்ளங்கை மற்றும் கால்விரல்களிலும் வரும்.

Healthy Diet For Psoriasis Patients

இப்படி வரும் சொரியாசிஸ் பிரச்சனையை சரிசெய்வதற்கு சிகிச்சை மேற்கொள்ளும் போது, உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு, டயட் முக்கிய பங்கை வகிக்கிறது. ஏனெனில் சில உணவுகள் சரும அழற்சியை தீவிரமாக்கும். உங்களுக்கு சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் எம்மாதிரியான உணவை சாப்பிட வேண்டும் மற்றும் எம்மாதிரியான உணவை சாப்பிடக்கூடாது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் இது விரைவில் சொரியாசிஸ் பிரச்சனையில் இருந்து விடுவிக்க உதவும். இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அனைத்து வகையான மீன்களான சூரை, சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் ஆளி விதை, சூரிய காந்தி விதைகள் மற்றும் எள்ளு விதைகளில் ஏராளமாக உள்ளது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சொரியாசிஸ் நிலைமையை தீவிரமாக்காமல் குறைக்க உதவும்.

ஜிங்க்

ஜிங்க்

ஜிங்க் என்னும் கனிமச்சத்து, கடல் உணவுகளில் ஏராளமாக உள்ளது. சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் கடல் உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே உள்ளது. எங்கு கடல் உணவுகள் சருமத்தில் அரிப்பை அதிகரித்துவிடுமோ என்ற அச்சத்தால், கடல் உணவுகளைத் தவிர்ப்பார்கள். ஆனால் ஏற்கனவே கடல் உணவுகளுக்கு அழற்சி இருந்து, சொரியாசிஸ் வந்தவர்கள் தான் கடல் உணவைத் தவிர்க்க வேண்டுமே தவிர, அனைவருமே அல்ல.

ஃபோலிக் அமிலம்

ஃபோலிக் அமிலம்

தானியங்கள், பருப்பு வகைகள், கோதுமை, பட்டாணி, ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றில் ஃபோலிக் அமிலம் உள்ளது. இது சரும ஆரோக்கியத்திற்காக சரும செல்கள் பிளவடைய உதவியாக இருக்கும். சொரியாசிஸ் பிரச்சனை உள்ளவர்கள் ஃபோலிக் அமில உணவுகளை உட்கொண்டு வந்தால், அது ஆன்டிபாடி தொகுப்புக்கான செயல்பாட்டில் அத்தியாவசிய பங்கு வகிக்கிறது. மேலும் சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு ஃபோலிக் அமில குறைபாட்டை சந்திக்கக்கூடும்.

பீட்டா-கரோட்டீன்

பீட்டா-கரோட்டீன்

பீட்டா-கரோட்டீன் என்னும் சத்து கேரட், பச்சை இலைக் காய்கறிகள், ஆப்ரிகாட் மற்றும் மாம்பழம் போன்றவற்றில் உள்ளது. பீட்டா-கரோட்டீன் வைட்டமின் ஏ வளர்சிதை மாற்றத்திற்கு உதவி புரிகிறது மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு அத்தியாவசியமானது. சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள், அவசியம் தங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகளுள் முக்கியமானதாகும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகுள் திராட்சை, கிரேப்ஃபுரூட், பீன்ஸ், நட்ஸ், ஆப்ரிகாட், உலர் திராட்சை, ப்ளம்ஸ், சோளம், கிராம்பு, பட்டை போன்றவற்றில் ஏராளமாக உள்ளது. இது லியூக்கோட்ரியேன்களின் உருவாக்கத்தைத் தடுக்க அவசியமானது. லியூக்கோட்ரியேன்கள் சொரியாசிஸ் நிலைமையை மோசமாக்க தூண்டுபவைகளாகும்.

சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் குறிப்பிட்ட சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது சொரியாசிஸ் நிலைமையை தீவிரப்படுத்திவிடும். சரி, இப்போது அந்த உணவுகள் எவையென்று காண்போம்.

சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்!

சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்!

ஆல்கஹால்

பொதுவாக ஆல்கஹால் குடித்தால், அது கல்லீரலின் செயல்பாட்டை மெதுவாக்கிவிடும். அதிலும் சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் ஆல்கஹால் குடித்தால், சாதாரணமானவர்களை விட சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்களின் இரத்தத்தில் ஆல்கஹால் அளவு மிகவும் அதிகமாகிவிடும். இதனால் கடுமையான அரிப்பை சந்திக்க நேரிடும். ஆகவே ஆல்கஹால் குடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

இறைச்சி மற்றும் முட்டை

இறைச்சி மற்றும் முட்டை

இறைச்சி மற்றும் முட்டையில் உள்ள அராசிடோன், அழற்சியை தீவிரமாக்கும். பொதுவாக இறைச்சி மற்றும் முட்டை ஆரோக்கியமானதாக இருந்தாலும், சொரியாசிஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது மிகவும் மோசமானது. ஆகவே புரோட்டீன் நிறைந்த உணவை உட்கொள்ள நினைத்தால், இறைச்சிக்கு மாற்றாக மீன் மற்றும் முட்டையை உட்கொள்ளுங்கள். குறைந்தது வாரத்திற்கு 3 முறையாவது மீன்களை சாப்பிடுங்கள்.

பால் மற்றும் பால் பொருட்கள்

பால் மற்றும் பால் பொருட்கள்

பால் மற்றும் பால் பொருட்களில் புரோட்டீன்கள் ஏராளமாக உள்ளது. ஆனால் இது உடலில் சளியை உருவாக்கும் மற்றும் ஆட்டோ-இம்யூன் நோய்களையும் உண்டாக்கும். சொரியாசிஸ் பிரச்சனை இருந்தால், பால் மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. இல்லாவிட்டால், நிலைமை தான் மோசமாகும்.

சர்க்கரை

சர்க்கரை

சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் உணவில் சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அதோடு ஃபுருக்டோஸ், கார்ன் சிரப், தேன் மற்றும் இதர சுவையூட்டிகளையும் திவிர்க்க வேண்டும். பழச்சாறுகள் மற்றும் பழங்களையும் அதிகம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இவற்றிலும் சர்க்கரை உள்ளது. ஆகவே சொரியாசிஸ் நோயாளிகளின் டயட் சிறப்பானதாக இருக்க வேண்டுமானால், பழங்களையும், பழச்சாறுகளையும் அளவாக சாப்பிடுங்கள்.

க்ரில்டு மற்றும் ரோஸ்ட்டட் உணவுகள்

க்ரில்டு மற்றும் ரோஸ்ட்டட் உணவுகள்

சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள், க்ரில்டு, வறுத்த மற்றும் ரோஸ்ட்டட் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அது எப்பேற்பட்ட ஆரோக்கியமான உணவாக இருந்தாலும், இவ்வாறு சமைத்து சாப்பிட்டால், அது சொரியாசிஸ் நிலைமையை மோசமாக்கும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ளவைகள் அனைத்துமே சொரியாசிஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, இதர சரும அழற்சி உள்ளவர்களுக்கும் தான் பொருந்தும். எனவே இதை மனதில் கொண்டு, உங்களுக்கு சரும அழற்சி ஏதேனும் இருந்தால், மேற்கூறியவாறு பின்பற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Healthy Diet For Psoriasis Patients

There are some different foods that the patients should and should not eat, and this article will reveal a reasonable diet for people with psoriasis.