உடல் ஆரோக்கியத்திற்கு ஜப்பான் நாட்டினர் கடைபிடிக்கிற பழக்கங்கள் என்னவென்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உலகிலேயே மிக அதிக நாட்கள் ஆரோக்கியமாக வாழும் மனிதர்கள் ஜப்பான் நாட்டினர் தான் என்கிறது ஒரு ஆய்வு. ஆம், அவர்களது சராசரி வாழ்நாள் 84 வயதாக இருக்கிறது. இதனை உலக சுகாதார மையமும் உறுதி படுத்தியிருக்கிறது.

ஜப்பான் நாட்டினரின் இந்த வெற்றிக்கு முழு காரணமாக இருப்பது அவர்களது உணவுப்பழக்கம் தான். இவர்களுக்கு மாரடைப்பு,சர்க்கரை நோய் போன்றவை எல்லாம் குறைவாகத் தான் தாக்குகிறது. இப்படி உலகம் முழுவதிலும் இருந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்றால் அது ஜப்பான் நாட்டினரைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு மிகவும் சந்தோஷமான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ஜப்பான் நாட்டு மக்கள்.

அப்படி தங்களது ஆரோக்கியத்திற்கு என்ன தான் செய்கிறார்கள்? என்னென்ன விஷயங்களை கடைபிடிக்கிறார்கள் பாருங்களேன்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஜப்பானில் சோயா மிகவும் பிரபலம். அவர்களது தினசரி காலை உணவிலேயே சோயா சேர்த்துக் கொண்டிருப்பார்கள். இது எனர்ஜியை கொடுப்பதுடன் உடல் எடையை ஃபிட்டாக வைத்துக் கொள்ள உதவிடும். இது உங்களது ஹார்மோன் லெவல், மெட்டாபாலிக் அளவு மற்றும் உடல் எடை குறைக்க பயன்படுகிறது.

#2

#2

ஜப்பான் மக்கள் ஒரு நாளைக்கு மூன்று வேலை உணவு சாப்பிடுகிறார்கள். கூடுதலாக ஒயாட்சு எனப்படுகிற மதிய ஸ்நாக்ஸ் சாப்பிடுகிறார்கள். ஸ்நாக்ஸ் என்றதும் அவர்கள் எண்ணெயில் பொறித்த உணவு,கொழுப்பு,உப்பு அதிகமிருக்கிற உணவு போன்றவற்றையெல்லாம் எடுப்பதல்ல மாறாக ரைஸ் பால்ஸ் போன்ற சத்தான உணவுகளையே ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்கிறார்கள்.

#3

#3

ஜப்பானில் மீனைத் தவிர பிற அசைவ உணவுகள் விலை எல்லாம் அதிகம், அதற்காக ஜப்பான் மக்கள் பெரும்பாலும் தங்கள் உணவுகளில் மீன் சேர்த்துக் கொள்கிறார்கள்.மீனை அதிகம் கொள்முதல் செய்யும் உலகின் மூன்று முக்கிய நாடுகளில் ஜப்பானும் ஒன்று.

மீனில் லீன் ப்ரோட்டீன் இருக்கிறது. அதோடு இதில் சாச்சுரேட்டட் ஃபேட் கிடைத்திடும். இதைத் தவிர மீன் சாப்பிடுவதால் உங்களுக்கு விட்டமின்,ஃபேட்டி ஆசிட் உட்பட பல்வேறு சத்துக்கள் கிடைத்திடும்.

#4

#4

நாமெல்லாம் இந்த தவறை தினமும் செய்திருப்போம். உணவு சாப்பிடும் போது வயிறு முட்டுகிற அளவிற்கு சாப்பிடுவோம். ஆனால் ஜப்பான் மக்கள் அரை வயிற்றுடன் தான் ஒவ்வொரு வேளை உணவையும் முடித்துக் கொள்கிறார்கள்.

கிட்டதட்ட உங்கள் உணவுத் தேவையின் எண்பது சதவீதம் பூர்த்தியானாலே போதும். வயிறு நிறைந்துவிட்டது என்ற உணர்வு சற்று தாமதமாகத்தான் உணர முடியும். அதுவரை சாப்பிட்டுக் கொண்டேயிருந்தால் அது ஓவர் டோஸாகிடும்.

#5

#5

இந்த நேரத்தில் சாப்பிடுவேன், இந்த நேரம் உடற்பயிற்சிக்கானது என்று ஒரு நாளில் இரண்டு மணி நேரங்களை ஒதுக்கி விட்டு நாள் முழுவதும் உட்கார்ந்து டிவி பார்ப்பதோ அல்லது லேப்டாப் முன்னால் முன்னால் உட்கார்ந்து வேலை பார்ப்பதோ இல்லை.

மாறாக ஜப்பான் மக்கள் எப்போதும் தங்களை சுறுசுறுப்புடனே வைத்திருக்கிறார்கள். அருகில் உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டுமானால் நடந்தே தான் செல்கிறார்கள். பெரும்பாலும் பொது போக்குவரத்தை தான் பயன்படுத்துகிறார்கள்.

#6

#6

பிற நாட்டினரை விட க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் ஜப்பான் மக்களிடத்தில் அதிகமிருக்கிறது. இதில் நிறைந்திருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் உடல் எடை குறைப்பிற்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.

#7

#7

ஃபெர்மெண்டட் உணவுகள், அதாவது புளிக்க வைக்கப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்கிறார்கள். இதிலிருந்து ஜப்பானியர்களுக்கு ஏராளமான சத்துக்கள் கிடைக்கிறது. அதோடு உணவும் சீக்கிரம் செரிக்கிறது. இது உடல் எடை குறைப்பிற்கு பெரிதும் உதவுகிறது.

#8

#8

தினமும் தங்கள் உணவில் ஒரு வகை சூப் சேர்த்துக் கொள்கிறார்கள். இது எல்லாருக்கும் உண்டான பழக்கமாக இருக்கிறது. சூப் க்ரீம் பேஸ்டாக அல்லாது இருத்தல் நலம். இது போன்ற சூப் குடிப்பதால் வயிறு நிறைந்து குறைவான திட உணவையே எடுத்துக் கொள்வீர்கள். இது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள உதவிடும்.

#9

#9

இங்கே ஒவ்வொரு உணவிலும் என்னென்ன நியூட்ரிஷியன்கள் இருக்கிறது, எவ்வளவு கலோரி இருக்கிறது எனத் தேடித்தேடி சாப்பிடுவோம் ஆனால் ஜப்பானியர்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை உணவில் கார்போஹைட்ரேட்,ப்ரோட்டீன் மற்றும் கொழுப்புச் சத்து ஆகியவை போதுமான அளவு சேர்த்துக் கொள்கிறார்கள்.

ஜப்பான் மக்களின் பிரதான உணவில் அரிசி சாதமும் இடம்பெறுகிறது, நாம் சாப்பிடுவது போல் அல்லாமல் அவர்கள் ஒரு கப் அளவு சாதத்தை சாப்பிடுகிறார்கள். அதனோடு ப்ரோட்டீன் மற்றும் ஃபைபர் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்கிறார்கள். இது எனர்ஜியை கொடுப்பதுடன் உணவை சீக்கிரம் செரிக்க வைக்கிறது.

#10

#10

ஒரே நேரத்தில் குழம்பு,சாம்பார்,ரசம்,தயிர் என தொடர்ந்து விதவிதமாக வயிறு முட்ட ஒரு நாளும் அவர்கள் சாப்பிடுவதில்லை. எந்த வேலை உணவாக இருந்தாலும் , அது எவ்வளவு பிடித்தமான உணவாக இருந்தாலும் சிறிய போர்ஷன்களாக பிரித்துச் சாப்பிடலாம்.

#11

#11

பிற நேரங்களில் எப்படிச் சாப்பிடுகிறீர்களோ இரவு உணவை மிகவும் குறைவாக சாப்பிடுங்கள். அல்லது எளிதாக செரிக்கும்படியான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இது ஜீரண மண்டலத்திற்கு குறைவான வேலை கொடுப்பதுடன் உங்களுக்கு சீரான தூக்கத்தை கொடுத்திடும்.

#12

#12

ஒரு வேளை உணவில் ஜப்பான் மக்கள் நான்கு முதல் ஐந்து வகையான காயை சேர்த்துக் கொள்கிறார்கள். பெரும்பாலும் அவை சாலெட்டுகளாக உண்ணப்படுகிறது.

சாலட் செய்யும் போது சுவையூட்டுவதற்காக ஃப்ரை செய்வது,எலுமிச்சை சாறு,மயோசைஸ் ஆகியவற்றை சேர்ப்பது ஆகியவற்றால் அதிலிருந்து கிடைக்கக்கூடிய சத்துக்கள் கிடைக்காமல் போகலாம்.

#13

#13

உணவு சாப்பிட ஆரம்பிக்கும் போது முதலில் காய்களையே சாப்பிட வேண்டும், இது நம் வயிற்றிலிருக்கும் டாக்சின்களை உறிந்து கொள்ளும். அதோடு இதில் ஏராளமான ஃபைபர் இருப்பதால் சீக்கிரம் செரிப்பதுடன் இன்ஸுல் சுரப்பையும் துரிதப்படுத்தும்.

ப்ரோட்டீன் உணவுகள் செரிமானம் ஆக சற்று கடினமாக இருக்கும். அதை முதலில் எடுத்துக் கொண்டுவிட்டால் அதன் பின்னர் என்ன உணவு சாப்பிட்டாலும் அதுவும் செரிமானம் ஆகாது வயிறு உப்புசத்தைத் தான் ஏற்படுத்தும்.

#14

#14

ஜப்பான் மக்கள் சாப்பிடக்கூடிய ஒரு ஃபுல் மீல்ஸ் என்னென்ன அடங்கியிருக்கும் தெரியுமா? ஒரு க்ரில்டு பிஷ்,ஒரு கப் அரிசி சாதம்,ஒரு கப் காய்கறி சாலட், ஒரு கப் சூப்,ஒரு கப் பழங்கள் மற்றும் க்ரீன் டீ. இதனை தங்களது ட்ரடிஷனல் ஃபுட் என்றும் சொல்கிறார்கள்.

#15

#15

இவர்கள் பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள், நாமெல்லாம் ஏதேனும் உணவுப் பொருள் பாக்கெட் வாங்கும் போது பேக் செய்த வருடம், மாதம் ஆகியவை பார்த்து வாங்குவோம். ஆனால் இவர்கள் மாதம், தேதி இவ்வளவு ஏன் நேரத்தையும் பார்த்து வாங்குகிறார்கள்.

ஆம், பாக்டெட்டில் குறிக்கப்பட்டிருக்கும் நேரத்திலிருந்து ஒரு மணி முன்ன பின்ன இருக்கலாம்.

#16

#16

நம் வீடுகளில் வேகமா சாப்டு முழுங்க இவ்ளோ நேரம் வாய்ல வச்சுட்டு என்ன பண்ற என்று போட்டுத் திணிப்பார்கள் தானே.... ஆனால் ஜப்பான் நாட்டில் குழந்தைகள் வேகமாக சாப்பிட்டாலும் மெதுவாக சாப்பிடு என்று சொல்வார்களாம்.

ஒவ்வொரு கவளத்தையும் கடித்து பொறுமையாக சாப்பிடச் சொல்வார்களாம். மெதுவாக சாப்பிடுவதால் நீண்ட நேரம் சாப்பிடுவது போலத் தோன்றினாலும் குறைவான உணவையே சாப்பிட்டிருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் காலை உணவையே முழு உணவாக எடுத்துக் கொள்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Secrets of Japanese

Health Secrets of Japanese
Story first published: Saturday, January 20, 2018, 16:26 [IST]
Subscribe Newsletter