For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நண்பா...! நீ குண்டா இருக்கியா...? இந்த கருஞ் சீரக விதைகள் உன்னை ஒல்லியாக மாற்றும்டா ..! ஒல்லி பெல்லி

என்னடா எவ்வளோ டயட் இருந்தாலும் ஒல்லியாவே ஆகமாற்றோமே...! அப்படினு சோகமா..? இல்லனா... உடல் இடை பெருகி கிட்டே போகுதேனு ...! மன வருத்தமா..?? கவலைய விட்டு தள்ளுங்கள். இந்த உடல் இடை சார்ந்த பிரச்னைகளுக்கு

|

சப்பா..!! இப்போவே கண்ணக்கட்டுதே...' இது நீங்கள் தினமும் படிக்கட்டு ஏறும்போது விடும் பெருமூச்சா...?? என்னடா எவ்வளோ டயட் இருந்தாலும் ஒல்லியாவே ஆகமாற்றோமே...! அப்படினு சோகமா..?
இல்லனா... உடல் இடை பெருகி கிட்டே போகுதேனு ...! மன வருத்தமா..?? கவலைய விட்டு தள்ளுங்கள். இந்த உடல் இடை சார்ந்த பிரச்னைகளுக்கு நம்ம வீட்டு வைத்தியமே ஒரு அற்புதமான தீர்வாக இருக்கே..!! ஆமாங்க... அதற்கு தீர்வுதான் இந்த கருஞ் சீரக விதைகள்.

health

இதில் உள்ள எண்ணற்ற பலன்கள் நமது உடலை ஆரோக்கியமாகவும், ஒல்லியாவகவும் மாற்ற உதவுகிறது. உடலுக்கு அதிக உற்சாக்கத்தை இந்த கருஞ் சீரக விதைகள் தருகிறது.இதில் கிட்டத்தட்ட 250 வைட்டமின்களும்,பலவித ஊட்டச்சத்துக்களும்,ஒமேகா-3 யும் ,நிறைந்துள்ளது. இதன் முதன்மை பங்கு உடல் உடையை குறைப்பதும், தொப்பையின் கொழுப்பை நீக்குவதுமே....!எப்படி கருஞ் சீரக விதைகள் நம்மை ஒல்லியாக மாற்றும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1 சாறும் எண்ணெய்யும்

#1 சாறும் எண்ணெய்யும்

தேவையான பொருட்கள் :-

- கருஞ் சீரக விதைகள்

- ஆரஞ்சு சாறு

செய்முறை :-

ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிது ஆரஞ்சு சாற்றையும் , கருஞ் சீரக விதைகளில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்யும் எடுத்து கொள்ளவும். இந்த கலவையை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் கச்சிதமாய் மெல்லியதாக மாறி விடும். மேலும் ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி உடலில் பாதிக்கபட்ட தசைகளை மீண்டும் புதுப்பிக்க வழி செய்கிறது.

#2 மூன்றும் வரமே

#2 மூன்றும் வரமே

தேவையான பொருட்கள் :-

- இலவங்கப்பட்டை

- கருஞ் சீரக விதைகள்

- தேன்

-சுடு தண்ணீர்

செய்முறை :-

முதலில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் கருஞ் சீரக விதைகளில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் ஆகியவற்றை நன்கு கலக்கி கொள்ளவும். பிறகு ஒரு கப் மிதமான சுடு தண்ணீரை இதனுடன் ஊற்றவும். அத்துடன் இலவங்கப்பட்டை பவுடரையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொண்டு இந்த நீரை குடிக்கவும். இந்த தண்ணீரை குடித்த பின்பு 30 நிமிடம் வரை வேறு எதையும் சாப்பிடவோ ,குடிக்கவோ கூடாது.

#3 எண்ணெய்யும் தேனும்

#3 எண்ணெய்யும் தேனும்

தேவையான பொருட்கள் :-

- கருஞ் சீரக விதைகள்

- தேன்

செய்முறை :-

1 டீஸ்பூன் கருஞ் சீரக விதைகளில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் மற்றும் 2 டீஸ்பூன் தேனையும் நன்கு கலந்து அதனை காலை வேளையில் குடித்து வர உங்கள் உடல் எடை கட்டாயம் குறைய தொடங்கும். இந்த கருஞ் சீரக விதைகள் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளதால் வயிற்று, தொடை, மற்றும் இடுஞ் பகுதிகளில் உள்ள அதிக கொழுஞ் களை கறைக்க வல்லது.

மேலும் தேன், நமது உடலில் இல்ல கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

#4 தினமும் எடுத்து கொள்ளலாம்

#4 தினமும் எடுத்து கொள்ளலாம்

தேவையான பொருட்கள் :-

- கருஞ் சீரக விதைகள்

- சுடு தண்ணீர்

செய்முறை :-

3-5 mg கருஞ் சீரக விதைகளை எடுத்து கொண்டு அதனை நேரடியாக சுடு தண்ணீரை கொண்டு மாத்திரை சாப்பிடுவது போல் விழுங்கி விடுங்கள். இந்த கருஞ் சீரக விதைகளை வெறும்வாயிலே தினமும் காலையில் அல்லது தூங்குவதற்கு முன் சாப்பிட வேண்டும். இப்படி செய்தால் உங்கள் அதிக உடல் இடை விரைவிலேயே குறைந்து அழகான உடல் அமைப்பை பெறுவீர்கள்.

 #5 சமையலிலும் சேர்க்கலாம் :-

#5 சமையலிலும் சேர்க்கலாம் :-

தேவையான பொருட்கள் :-

- கருஞ் சீரக விதைகள்

- காலி ஃபிலோவேர்

- கொடை மிளகா

- தக்காளி

-பீன்ஸ்

- வெங்காயம்

- ஆலிவ் எண்ணெய்

- கருப்பு மிளகு பொடி

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெய்யை ஊற்றி சூடாக்கி கொள்ளவும். எண்ணெய் சூடான பிறகு 3-5 mg கருஞ் சீரக விதைகளை அதனுள் போட்டு வறுக்கவும்.அதன்பிறகு அனைத்து காய்கறிகளையும் அதில் சேர்த்து 10 முதல் 15 நிமிடம் வரை நன்கு வறுக்கவும். தேவையான அளவு உப்பை சேர்த்து கொண்டு அதன் மேல் கருப்பு மிளகு பொடியை தூவ வேண்டும். இந்த உணவை மதிய உணவாகவும், மாலை நேர ஸ்னாக்சாக சாப்பிடலாம்.இது மிகவும் கம்மியான அளவில் கலோரிஸ்களை கொண்டதால் இடை குறைப்புக்கு நன்கு உதவும். மேலும் நல்ல பசிக்கான உணவாகவும் இது இருக்கும்.

முன்னெச்சரிக்கை :-

முன்னெச்சரிக்கை :-

# "அளவுக்கு மிஞ்சினால்,அமிர்தமும் நஞ்சு" என்பதை போன்றே இந்த கருஞ் சீரக விதைகளை ஒரு நாளைக்கு 3-5 mg அளவே எடுத்து கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக இதனை சாப்பிட வேண்டாம்.

#அதிக அளவில் இந்த கருஞ் சீரக விதைகளை சாப்பிட்டல் உடலில் அதிக சூட்டை ஏற்படுத்தி கர்ப்பமாவதில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆதலால் கர்ப்பமாக உள்ள பெண்கள் மற்றும் கர்ப்பமாக விரும்பும் பெண்கள் இந்த கருஞ் சீரக விதைகளை தவிர்ப்பது நல்லது.

#குறைந்த ரத்த அழுத்தம் கொண்டவர்கள் இந்த கருஞ் சீரக விதைகளை சாப்பிட வேண்டாம் ...ஏனெனில் இது அதிக உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

#மேலும் உடலில் ஏதேனும் அலர்ஜி இருந்தால் கட்டாயம் மருத்துவரை ஆலோசித்ததற்கு பின்பே கருஞ் சீரக விதைகளை எடுத்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

using-black-cumin-seeds-get-a-slim-body

You are very fatty..? Don't worry..!! Black cumin seeds are the best solution..!!
Desktop Bottom Promotion