For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பேலியோ டயட்டில் ஏன் பாதாம் முக்கியம் இடம்பெறுகிறது? உண்மையாவே எடை குறையுமா?

  By Suganthi Rajalingam
  |

  பாதாம் பருப்பு சாப்பிட்டா உடல் எடை குறையுமா? தெரிஞ்சுக்க இத படிங்க

  பாதாம் பருப்பில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்றவைகள் உள்ளன. அது மட்டுமல்லாமல் 1 அவுன்ஸ் பாதாம் பருப்பில் 1/8 பங்கு பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு தேவையான புரோட்டீன் சத்து அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், எடை குறைப்பு ஆகியவற்றை செய்ய விரும்பும் பலரும் பேலியோ டயட் பக்கம் திரும்பியிருக்கிறார்கள். அந்த டயட்டின் அடிப்படையே புரோட்டீனும் நல்ல கொழுப்பு உணவுகளும் தான். அதில் பாதாமுக்கு தான் அவர்கள் முதன்மையான இடத்தைத் தருகிறார்கள். அது ஏன்? அதற்கான காரணம் என்ன என்று பார்க்கலாம்?

  almond and weight loss

  இந்த பாதாம் பருப்பை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். பச்சையாக அல்லது வறுத்தோ அல்லது சிப்ஸ் வடிவத்திலயோ, மாவு வடிவிலோ, எண்ணெய் வடிவிலோ அல்லது பாதாம் மில்க் வடிவிலோ கிடைக்கின்றன.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  வரலாறு

  வரலாறு

  பாதாம் மரங்கள் மிகவும் பழமையானது. இவை கி. மு 3000 ஆண்டுகளுக்கு முன்னரே ஜோர்டானில் இருந்துள்ளது என்று சான்றுகள் கூறப்படுகின்றன. அதிலுள்ள பயன்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

  தினசரி உணவில்

  தினசரி உணவில்

  இந்த நவீன காலத்தில் உடல் பருமனை குறைக்க நாம் தினசரி உடற்பயிற்சி, கடுமையான டயட் முறைகள் என பின்பற்றி வருகிறோம். ஆனால் உங்களுக்கு தெரியுமா பாதாம் பருப்பை நமது தினசரி உணவில் சேர்த்து கொண்டாலே போதும் உடல் எடையை குறைக்க இயலும். இதற்கு காரணம் இதில் உள்ள நல்ல கொழுப்பு அமிலங்கள் தான்.

  ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்

  ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்

  இதில் கொழுப்பு அமிலங்களான ஒமேகா 6, ஒமேகா 3மற்றும் ஒமேகா 9 போன்றவை உள்ளன. இந்த நல்ல கொழுப்பு அமிலங்கள் நமது உடலுக்கு மிகவும் சிறந்தது. ஆனால் நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ்இல் உள்ள சேச்சுரேட்டேடு கொழுப்பு அமிலங்கள் இதய நோய்கள், பக்க வாதம் போன்றவற்றை ஏற்படுத்தி விடும். ஆனால் பாதாம் பருப்பை நீங்கள் ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஆக கூட எடுத்துக் கொள்ளலாம்.

  இதய நோய்கள்

  இதய நோய்கள்

  பாதாம் பருப்பில் உள்ள அன்சேச்சுரேட்டேடு கொழுப்பு அமிலங்கள் இதய நோய்கள் மற்றும் இரத்த சர்க்கரை நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. பாதாம் பருப்பின் மேல் உள்ள தோலில் நிறைய நார்ச்சத்துகள் இருப்பதால் சீரண சக்திக்கும், மலச்சிக்கல் பிரச்சினை இல்லாமல் இருக்கவும் உதவுகிறது.

  பாதாம் தோல்

  பாதாம் தோல்

  உணவு சரிவர சீரணிக்காத சமயத்தில் அவை கொழுப்பாக தங்கி உடல் பருமனை அதிகரித்து விடும். இந்த மாதிரியான சமயங்களில் நீங்கள் பாதாம் பருப்பை தோலுடன் ஸ்நாக்ஸ் மாதிரி சாப்பிட்டாலே போதும் சீரண சக்தி மேம்பட்டு உடல் எடையும் குறையும்.

  சாப்பிடும் விதம்

  சாப்பிடும் விதம்

  இதை நீங்கள் பச்சையாகவோ அல்லது முழுதாக வறுத்தோ உப்பு சேர்க்காமல் பதப்படுத்தாமல் சாப்பிடலாம். இதன் மூலம் சோடியம் அளவு இரத்தத்தில் அதிகரிப்பதை தடுக்கலாம்.

  தொப்பையை குறைக்க

  தொப்பையை குறைக்க

  பாதாம் பருப்பில் அதிக அளவு புரோட்டீன் சத்து இருப்பதால் வலுவான தசைகளின் உருவாக்கத்திற்கு உதவுகிறது. உடல் நிறை குறியீட்டு எண்ணை கட்டுப்பாட்டில் வைக்க இதிலுள்ள மோனோசேச்சுரேட் கொழுப்பு அமிலங்கள் உதவுகின்றன. இதன் மூலம் தொப்பையை குறைக்க இயலும்.

  ஊட்டச்சத்து அளவுகள்

  ஊட்டச்சத்து அளவுகள்

  இதில் மக்னீசியம், விட்டமின் ஈ, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்றவை உள்ளன. மக்னீசியம் உடம்பிற்கு ஆற்றலை தரக்கூடிய ஒரு சிறந்த ஊட்டச்சத்து ஆகும். மேலும் இது உடற்பயிற்சியின் போது தசைகளை வலுவாக்க உதவுகிறது. விட்டமின் ஈ ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தசைகளில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து தசைகள் இறுக்கமடைய உதவுகிறது.

  உடல் எடையை குறைக்க

  உடல் எடையை குறைக்க

  நன்றாக வறுத்த பாதாம் பருப்பை உங்களுக்கு பசி ஏற்படும் போதெல்லாம் சாப்பிடலாம். அவுன்ஸ் கணக்கில் எடுத்துக் கொண்டு வந்தாலே போதும் உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.

  பாதாம் பருப்பை உங்கள் காலை உணவில் சேர்க்கும் போது நீண்ட நேரம் பசி உணர்வை கொடுக்காது. வயிறு நிரம்பி இருப்பது போன்று தோன்றும். இதனால் உங்கள் மதிய உணவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வீர்கள். ஓட்ஸ் மற்றும் செரல் உணவுகளில் அப்படியே நறுக்கிய பாதாம் பருப்பை சேர்த்து சாப்பிடலாம்.

  மதிய வேளைகளில் பாதாம் ரைத்தா தயாரிக்கலாம். நறுக்கிய பாதாம் பருப்பை யோகார்ட் உடன் சேர்த்து அதில் அப்படியே உங்களுக்கு பிடித்தமான கார மசாலாக்களை சேர்த்து தயாரிக்கலாம். இதில் நிறைய புரோட்டீன் மற்றும் நல்ல பாக்டீரியா இருப்பதால் உடல் எடையை எளிதாக குறைக்க இயலும்.

  நறுக்கிய பாதாம் பருப்பை பாஸ்தா அல்லது சாலட் உடன் சேர்க்கலாம். இது கொஞ்சம் கடினமான உணவு என்பதால் கொஞ்சமாக உங்கள் வயிறு நிரம்பும் அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள்.

  இப்படி தினசரி உங்கள் உணவில் பாதாம் பருப்பை சேர்த்து வருவதோடு போதுமான உடற்பயிற்சியும் மேற்கொண்டு வந்தால் உடல் எடையை குறைக்கும் உங்கள் கனவு நிறைவேறும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Do Almonds Help You Lose Weight?

  Almonds are a great source of vitamin E, fibre, proteins, minerals, antioxidants, etc. It makes a good healthy snack and studies have revealed that almonds aid weight loss, though these nuts are considered to be a rich source of fatty acids. Keep a pack of roasted almonds with you to help you curb your hunger while helping you shed weight.
  Story first published: Thursday, May 24, 2018, 18:00 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more