For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே மாதத்தில் 6 கிலோ வரை குறைப்பது எப்படி?

உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும் அதில் முக்கியமான ஒன்று நம் உணவுப்பழக்கத்தை சீராக மாற்றுவதுதான். இதனை செய்யாமல் நீங்கள் என்ன முயற்சி எடுத்தாலும் அது வீண்தான். ஒரே மாதத்தில் உங்கள் எடையை 6 கிலோ

|

எடை அதிகரிப்பு என்பது அனைவருக்கும் பொதுவான பிரச்சினையாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் நம்மை சோம்பேறியாக்கும் வாழ்க்கை முறையும், ஆரோக்கியமற்ற உணவு பழக்கமும்தான். உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும் அதில் முக்கியமான ஒன்று நம் உணவுப்பழக்கத்தை சீராக மாற்றுவதுதான். இதனை செய்யாமல் நீங்கள் என்ன முயற்சி எடுத்தாலும் அது வீண்தான்.

13 small diet changes helps to reduce weight

உணவுப்பழக்கத்தில் மாற்றம் வேண்டுமென கூறியவுடன் அதற்காக கடுமையான டயட் இருக்கிறேன் என்று உடலை வருத்தி சிக்கலை பெரிதாக்காதீர்கள். ஒரே மாதத்தில் ஆறு கிலோ வரை எடையை குறைக்க உங்கள் உணவுமுறையில் சில மாற்றங்கள் செய்தால் போதும். இந்த பதிவில் ஒரே மாதத்தில் உங்கள் எடையை 6 கிலோ வரை குறைப்பது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சையுடன் நாளை தொடங்குங்கள்

எலுமிச்சையுடன் நாளை தொடங்குங்கள்

காலையில் காபி, டீ குடிப்பதை தவிர்த்து விடுங்கள். சூடான நீரில் எலுமிச்சை சாறை கலந்து குடிப்பது கல்லீரலில் உள்ள நச்சுக்களை பாதுகாப்பதுடன் கொழுப்புகளின் வளர்ச்சிதை மாற்றத்தை குறைக்கிறது. ஆய்வுகளின் படி, தினமும் 3 லிட்டர் நீர் குடிப்பது 100 கலோரிகளை எரிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

பாதாம் சாப்பிடுங்கள்

பாதாம் சாப்பிடுங்கள்

ஆரோக்கிய நிபுணர்களின் கருத்துப்படி, நீங்கள் சாப்பிடக்கூடிய மிகச்சிறந்த சிற்றுண்டி பாதாம்தான். தினமும் சிறிதளவு பாதாம் சாப்பிடுவது உங்கள் இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு எடையை குறைப்பதற்கும் உதவுகிறது.

பழங்கள் சாப்பிட தொடங்குகள்

பழங்கள் சாப்பிட தொடங்குகள்

நம்மில் பலரும் பழங்கள் சாப்பிட சோம்பேறித்தனம் படுவோம். ஆனால் அதுதான் நாம் செய்யும் பெரிய தவறு. பசியாக இருக்கும் நேரத்தில் பழங்கள் சாப்பிடுவது குறைவான கலோரிகளை வழங்குவதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. குறிப்பாக பழங்களில் கார்போஹைடிரேட்டுகள் மிகவும் குறைவாகவே இருக்கும். இதுவே உங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும்.

சரியான நேரத்தில் சாப்பிடுங்கள்

சரியான நேரத்தில் சாப்பிடுங்கள்

எடை குறைப்பு நிபுணர்கள் கூறுவதாவது நீண்ட நேரம் பசியாக இருப்பதே உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாகும். சிலர் காலை உணவை தவிர்ப்பார்கள் ஆனால் அதுதான் அவர்களின் உடல் எடை அதிகரிப்பிற்கான முக்கிய காரணமாகும். உங்கள் உடலை ஆரோக்கியமாகவும், வளர்ச்சி விகிதம் சீராகவும் இருக்க 3 மணி நேரத்திற்கு ஒருமுறை ஏதாவது சாப்பிட வேண்டும்.

சாலட்

சாலட்

எடையை ககுறைக்க கடுமையான டயட் இருக்க வேண்டிய அவசியமில்லை. தினமும் ஒருவேளை உணவிற்கு பதிலாக சாலட்டை உணவாக எடுத்துக்கொள்ளுங்கள். சாலட்டில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், புரோட்டின்கள், நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை எடை குறைப்பில் மிகவும் உதவக்கூடியவை. சாலட்டில் பச்சைகாய்கறிகளும், கீரைகளும் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

ஆளி விதை

ஆளி விதை

இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. இந்த சத்துதான் உங்களை நீண்ட நேரம் பசியில்லாமல் வைக்கவும் உங்கள் குடல் இயக்கங்களை சீராக வைக்கவும் உதவுகிறது. இதனை பொடியாக உபயோகிப்பதே சிறந்தது ஏனெனில் முழு விதைகள் செரிமானம் அடைய நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும்.

புரோட்டின்

புரோட்டின்

சாப்பிடும் அனைத்திலும் புரோட்டின்கள் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். மருத்துவர்களின் கருத்துப்படி சாப்பிடும் போதெல்லாம் உணவில் புரோட்டின் சேர்த்து கொள்வது பசி வேதனையிலிருந்து உங்களை பாதுகாக்கும். மேலும் புரோட்டின் உங்கள் மனஅழுத்தத்தையும் குறைக்கும்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

நீங்கள் குடிக்கும் போது அது அசிட்டேடாக மாற்றப்படுகிறது. இது கொழுப்பு மற்றும் சர்க்கரைக்கு முன்னதாகவே கரைக்கப்படுகிறது. இதனால் மற்ற கலோரிகள் எரிக்கப்டும் நேரம் தாமதப்படுத்தபடுகிறது. எனவே உடலில் அதிக கலோரிகள் சேரும்போது அதன் விளைவு எடை அதிகரிப்புதான்.

கார்போஹைட்ரேட் அளவு

கார்போஹைட்ரேட் அளவு

கார்போஹைட்ரேட்டுக்கள் ஆற்றலை வழங்க சிறந்த தேர்வு என்பது உண்மைதான். ஆனால் அதிகளவு கார்போஹைட்ரேட் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும். எனவே சாப்பிடும்போது கார்போஹைட்ரேட் அளவு குறைவாக இருக்கும் உணவுகளை சாப்பிடுங்கள், குறிப்பாக வெளியிடங்களில் சாப்பிடும்போது.

ரெடிமேட் டயட் உணவுகள்

ரெடிமேட் டயட் உணவுகள்

டயட் உணவுகள் என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட துரித உணவுகளை பாக்கெட்டில் அடைத்து விற்கும் பழக்கம் இப்போது அதிகரித்து வருகிறது. இதில் பல செயற்கை இரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. இவை டயட் உணவுகள் என்று கூறப்பட்டாலும் மறைமுகமாக உங்கள் எடையை அதிகரிக்க செய்யும்.

மயோனிகள்

மயோனிகள்

உங்களுக்கு எடையை குறைக்க வேண்டுமென்ற எண்ணம் நிஜமாகவே இருந்தால் மயோனிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக கடுகில் தயாரிக்கப்பட்ட க்ரீமக்ளை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இது உங்கள் உடல் வெப்பநிலையை சீராக்கி உங்களின் பசியுணர்வை கட்டுப்படுத்தும்.

புதிய ஆரோக்கிய உணவுகள்

புதிய ஆரோக்கிய உணவுகள்

ஒரு மாறுதலுக்கு சில புதிய ஆரோக்கிய உணவுகளை சாப்பிட முயற்சி செய்யுங்கள். வித்தியாசமான சுவை உங்கள் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும், மேலும் எடை அதிகரிப்பதை கட்டுப்படுத்தும்.

செயற்கை குளிர்பானங்கள்

செயற்கை குளிர்பானங்கள்

செயற்கை இனிப்புகள் சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் சோடாக்கள் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இதனால் இன்சுலினின் அளவு திடீரென உயரும். கல்லீரல் இதனை கொழுப்பாக மாற்றும் இதனை விளைவு எடை அதிகரிப்புதான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

13 small diet changes that help weight loss

If you really want to change things in life, start with baby steps than the giant ones. And when it comes to weight loss, this rule applies the best. These small changes that you can do in your daily diet to lose 6 kilo in a month.
Desktop Bottom Promotion