For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இஞ்சி டீ தெரியும்... இந்த மஞ்சள் டீ குடிச்சிருக்கீங்களா?... ஒருமுறை குடிச்சா அப்புறம் விடவேமாட்டீங்க

மஞ்சளும், இஞ்சியும் உடம்புக்கு சூடு என்பது ஒருபக்கம் இருந்தாலும், இவை இரண்டும் கொழுப்பை குறைத்து, ஜீரணத்தையும் மேம்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.

|

மஞ்சளும், இஞ்சியும் உடம்புக்கு சூடு என்பது ஒருபக்கம் இருந்தாலும், இவை இரண்டும் கொழுப்பை குறைத்து, ஜீரணத்தையும் மேம்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.

health

உடல் எடையை குறைப்பதை ஒரு ஜாலியான அனுபவமாக்க, ஊட்டச்சத்து மிக்க உணவை உண்பதும், உடற்பயிற்சியும் தான் சிறந்த வழி. இன்னும் சொல்லபோனால், சரிவிகித உணவும் வேர்க்க விறுவிறுக்க செய்யும் உடற்பயிற்சியும் தான் உங்களுக்கு தேவை. ஆனாலும் இந்த சூப்பரான இஞ்சி மற்றும் மஞ்சள் டீ போட்டு சுவைத்து தான் பாருங்களேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இஞ்சியும் மஞ்சளும்

இஞ்சியும் மஞ்சளும்

இந்த இஞ்சி, மஞ்சள் டீ உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், விரைவாக உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இஞ்சியும், மஞ்சளும் நமது சமையல் அறையில் முக்கிய அங்கம் வகிப்பதுடன், அதன் இயற்கையான மருத்துவ குணங்களால் பெரிதும் போற்றப்படுகிறது.

இயற்கை எப்போதும் தவறாகாது. இஞ்சியும், மஞ்சளும் சாதாரண மளிகைக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை, அப்படியே கிழங்கு/வேரகவும், பொடியாகவும் கிடைக்கிறது. இந்த இஞ்சி மற்றும் மஞ்சள் டீயின் பலன்களை பற்றி தெரிந்து கொள்ளலாமா?

பலன்கள்

பலன்கள்

மஞ்சளில் உள்ள குர்குமின், செல் பிரிவதை, குறிப்பாக கொழுப்பு செல்கள் பிரிவதை தடுக்கும். இதனால் புதிதாக கொழுப்பு செல்கள் உருவாவதை தடுத்து உடல் எடை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது. மேலும் எல்.டி.ல் எனப்படும் கெட்ட கொழுப்பையும், ட்ரை கிளேசிரைட்களையும் குறைக்க உதவுகிறது.

இன்சுலின்

இன்சுலின்

இன்சுலின் எதிர்ப்பு தன்மையை குறைத்து இரத்திலுள்ள சர்க்கரை அளவை கட்டுபடுத்துவதால், உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.

-வயிற்றில் சுரக்கும் பித்த நீர் அளவை அதிகரிக்க உதவும். பித்த நீர் என்பது கொழுப்பை கரைக்கவல்ல திரவம். அதனால் நம் உடல் எடைகுறைய உதவும்.

இதிலுள்ள பாலிஃபீனால், மிகச்சிறந்த ஆன்டி ஆக்ஸிடிடெண்ட் தன்மை கொண்டதால், உடலிலுள்ள நச்சுதன்மையை வெளியேற்ற உதவுகிறது.

உடல் வீக்கம்

உடல் வீக்கம்

இந்த மஞ்சள் டீ உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கும் தன்மை கொண்டிருப்பதால், வீக்கங்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகிறது. மேலும் இது உடலின் வளர்சிதை மாற்றங்களை அதிகரிக்க உதவுவதுடன் கொழுப்பை இயற்கையாகவும், விரைவாகவும் குறைக்க உதவுகிறது.

இஞ்சியின் நன்மைகள்

இஞ்சியின் நன்மைகள்

இஞ்சியை எந்த விதத்தில் சாப்பிட்டாலும் உடல் எடை குறைப்பிற்கு நல்ல பயனளிக்கும். இது செரேடேனின் அளவை அதிகப்படுத்துவதால், செரேடேனின் பசியை தூண்டும் நரம்பு சமிஞ்சைகளுக்கு காரணமாகி பசியை கட்டுப்படுத்தி, பசியின்மை ஏற்படுத்தும். இதனால் குறைந்த அளவு உணவு உட்கொள்ள இஞ்சி உதவுகிறது.

இதில் உள்ள ஜிஞ்சரால் மற்றும் ஷோகால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. அதனால் உடல் தனக்கு தேவையான சக்தியை, உடலில் உள்ள கொழுப்பை எரித்து தானே பயன்படுத்திக் கொள்ள முடியும். இது கொழுப்பை மிகச்சிறந்த முறையில் கரைப்பதால், உடல் உஷ்ணத்தை அதிகரிக்கிறது.

இஞ்சி மிகச்சிறந்த ஆன்டி ஆக்ஸிடிடெண்ட் தன்மை கொண்டதால், உடலில் வியாதியை உண்டாக்கும் நச்சுதன்மையை வெளியேற்ற உதவுகிறது, உடலின் நீர்சத்தை நீடிக்கசெய்யவும், வீக்கங்களை குறைக்கவும், எடைகுறைப்பிலும் உதவுகிறது.

மஞ்சள் டீயின் நன்மைகள்

மஞ்சள் டீயின் நன்மைகள்

இஞ்சி மற்றும் மஞ்சள் டீ மிகச்சிறந்த மருத்துவ குணம் நிறைந்த ஓரு மருந்தாகிறது. வாருங்கள் இந்த டீயின் நன்மைகளை பற்றி பார்ப்போம்.

இந்த டீ கல்லீரலின் எல்லா செல்களையும் பாதுகாத்து கல்லீரலை நன்றாக செயல்பட உதவுகிறது. மேலும் உங்களுக்கு பித்தபை கற்கள் பிரச்சனை இருந்தால் இந்த டீ நல்ல தீர்வாகிறது. இதில் உள்ள மூலபொருட்கள் பித்தபையை பாதிக்கும் நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

செரிமாணக்கோளாறு

செரிமாணக்கோளாறு

செரிமானமின்மை, மெதுவாக ஜீரணமாவது போன்ற கோளாறு உள்ளவர்களுக்கு இந்த டீ ஒரு நல்ல டானிக் என்றே சொல்லலாம். இரைப்பை சவ்வு அழற்சி நோய்க்கும் இது நல்ல மருந்து ஆகிறது.

இந்த டீயில் இரைப்பை/ குடல் வலி நீக்கும் தன்மை இருப்பதால் வயிறு உப்புசம், அஜிரண கோளாறுகளுக்கு மருந்தாவதுடன், வாயு வெளியேற்றத்திற்கும் உதவுகிறது.

ஜலதோஷம்

ஜலதோஷம்

இந்த டீ ஜலதோஷத்திற்கும் அதனால் உண்டாகும் காய்ச்சலுக்கும் இயற்கையான நல்ல மருந்தாகிறது. இதில் விட்டமின் சி, நியாசின், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் தேவையான அளவு இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது இருமலுக்கும் சளிகோழைகட்டு பிரச்சனைக்கும் நல்ல தீர்வாகிறது.

மஞ்சள் டீ தயாரிக்கும் முறை

மஞ்சள் டீ தயாரிக்கும் முறை

2 தேக்கரண்டி மஞ்சள் பொடி (10 கிராம்)

2 தேக்கரண்டி இஞ்சி (30 கிராம்)

1 ஸ்பூன் தேன் (25 கிராம்)

2 கப் தண்ணீர் (500 மிலி)

தயாரிக்கும் முறை

இஞ்சியை தோல் நீக்கி, சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். தண்ணீரை சுட வைத்து அதில் அந்த இஞ்சியை சேர்க்கவும். 5 முதல் 10 நிமிடம் வரை நன்றாக கொதிக்க வைக்கவும்.

பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, நன்றாக கலக்கி வைத்துகொள்ளவும். இந்த திரவத்தை ஒரு கப்-ல் இட்டு மஞ்சள் பொடி சேர்க்கவும். அத்துடன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். உங்களுக்கு எலுமிச்சை சுவைபிடிக்கும் என்றால் இதில் சில துளிகள் எலுமிச்சை சாறும் சேர்க்கலாம்.

எப்படி சாப்பிட வேண்டும்?

எப்படி சாப்பிட வேண்டும்?

இந்த பானம் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்க தான் தயாரிக்கப்படுகிறது. ஆகையால் இயற்கையான மற்றும் வேகமான முறையில் உடல் எடையை குறைக்க, இதை எப்போது குடிக்கவேண்டும் என்று உங்களுக்கு நிச்சயம் தெரிய வேண்டும்.

ஒரு நாளின் எந்த நேரத்திலும், நீங்கள் வெறும் வயிற்றில் இந்த டீயை குடிப்பது நல்லது. நீங்கள் உடற்பயிற்சியின் போது குடிக்கலாம். இந்த டீயை, குடிநீரை போல், ஏன் அதைவிட அதிகமாகவே குடிக்கலாம். இதனால் தேவையான நீர்சத்து உடலுக்கு கிடைப்பதுடன், உடலுக்கு சக்தி மற்றும் பலமும் கிடைக்கிறது. உடல் எடையும் குறையும்.

மேல் குறிப்பிட்டது போல், இந்த டீயை சாப்பிட்டால், வயிறு நிறைந்த உணர்வை தரும் என்பதால், நீங்கள் சாப்பிட போகும் 30 நிமிடத்திற்கு முன்னால் குடித்துவிடுவது நல்லது. அதனால் உணவின் மீது ஆர்வத்தை குறைக்கும்.

ஆமாங்க இந்த டீ மட்டும் மேஜிக் எல்லாம் பண்ணிடாது. இதில் உடல் எடையை குறைக்கும் பல விஷயங்கள் இருந்தாலும், சமச்சீரான உணவும், நல்ல உடற்பயிற்சியும் கண்டிப்பாக தேவை என்பதை மறந்துடாதீங்க!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Delicious Ginger and Turmeric Tea to Help You Lose Weight

A balanced diet and plenty of physical activity are exactly what you need. However, you should also give this delicious turmeric and ginger tea a try
Desktop Bottom Promotion