Latest Updates
-
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம்
புதினாவை முகர்ந்தாலே உடல் எடை குறைந்து விடுமாம்..! எப்படினு தெரிஞ்சிக்கோங்க..
உலக அளவில் ஏராளமான மக்கள் எண்ணற்ற வழிகளில் உடல் எடையை குறைக்க முயன்று வருகின்றனர். ஜிம்மிற்கு போவதாலோ, குறைந்த உணவுகளை சாப்பிடுவதாலோ நம்மால் எளிதில் உடல் எடையை குறைக்க முடியாது. மாறாக சில முக்கியமான விசித்திர வேலைகளை நாம் செய்ய வேண்டும்.

இது போன்ற செயல்கள் உலக அளவில் நம்பப்பட்டு வருகிறது. இவை அறிவியல் பூர்வமாகவும் நிரூபணம் ஆகி உள்ளது என ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இது எப்படி வேலை செய்கிறது என்பதை இனி நாம் தெளிவாக அறிவோம்.

குண்டா..? ஒல்லியா..?
ஒரு சிலருக்கு குண்டாக ஆக வேண்டும் என எண்ணம் நீண்ட நாட்களாக இருக்கும். ஆனால், பலருக்கு ஒல்லியாக கச்சிதமான உடல் எடையுடன் இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகின்றனர். இது உண்மையில் சாத்தியமாக கூடுமா என்ற கேள்வி நம்மில் பலருக்கு இருக்கிறது. சரியான முறையில் எளிமையாக உடல் எடையை குறைக்க முடியும்.

நீல நிறமே...!
இது ஒரு புதுவிதமான உடல் எடை குறைப்பிற்கான வழியாக பல்வேறு மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது, நீல நிறத்தில் உங்கள் வீட்டை சுற்றி அலங்கரித்து கொண்டால் உங்களின் பசியை குறைத்து விட இயலுமாம். குறிப்பாக உங்களின் தட்டு, சமையல் அறை, சாப்பிடும் அறை, உங்களின் உடை ஆகியவை நீல நிறத்தில் இருந்தால் அதிக அளவில் பசியை தூண்டாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புதினாவை முகர்ந்தாலே போதுமா..?
இது உண்மையில் வேடிக்கையாக தான் இருக்கும். ஆனால், இந்த முறை நன்றாக வேலை செய்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதாவது, நீங்கள் புதினா அல்லது வாழைப்பழத்தை அடிக்கடி முகர்ந்து பார்க்கும் போது உங்களின் பசியை இது குறைத்து விடுகிறதாம். எனவே, இந்த முறையை வைத்து எளிதில் உடல் எடையை குறைக்க முடியுமாம்.

காலையில் எப்போதும் அதிகம்..!
உடல் எடை கூடுதலாக இருப்பவர்களுக்கு காலையில் 700 கலோரிகளும், மதியம் 500 கலோரிகளும், இரவு நேரத்தில் 200 கலோரிகளே போதும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, மற்ற வேளைகளை விட காலை நேரத்தில் நீங்கள் அதிக உணவு உண்டால் உடல் எடை கூடாமல் பார்த்து கொள்ளலாம்.

அதிக ஊறுகாய்..!
சாப்பிடும் உணவில் அதிக அளவில் ஊறுகாயை சேர்த்து கொண்டால் எளிதில் உடல் எடையை குறைத்து விடலாமாம். அதாவது, ஊறுகாயில் உள்ள வினிகர் மற்றும் அசிட்டிக் அமிலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, கொழுப்புகள் உருவாவதையும் தடுக்கிறதாம்.

சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு நோ நோ...!
உங்கள் வீடுகளில் இது போன்ற நிறத்தை அதிகம் பயன்படுத்தாதீர்கள். மீறி பயன்படுத்தினால் உங்களின் பசியை இவை அதிகரிக்க செய்து அதிகமாக சாப்பிடும் எண்ணத்தை தூண்டி விடும். எனவே, விரைவில் நீங்கள் குண்டாகி கொண்டே போவீர்கள். இதனால் தான் பெரும்பாலான உணவகங்களில் இது போன்ற நிறங்களில் டெகரேஷன் செய்து உங்களின் பசியை தூண்டி விடுவார்கள்.

முட்டை போதுமே..!
உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு எளிய வழி உள்ளது. அதவாது, காலை உணவில் ஒரு முட்டையை சாப்பிட்டால் மிக குறைந்த காலத்திலே எடையை குறைத்து விடலாம் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அல்லது வேறு ஏதேனும் புரத சத்து கொண்ட உணவை காலை வேளையில் எடுத்து கொண்டாலும் உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.

சாப்பாட்டிற்கு முன் நீரா..?
உணவை சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக நீர் குடித்தால் உடல் எடையை குறைக்க முடியுமாம். ஏனெனில், இவை குறைந்த அளவில் நம்மை கலோரிகளை எடுத்து கொள்ள செய்து எடையை கூடாமல் வைத்து, விரைவில் குறைய செய்து விடும்.

எவ்வளவு ஜங்க் மெயில்..?
இது முற்றிலும் புதுமையான முறையாக பல்வேறு மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது, உங்களின் மெயிலில் நீங்கள் வைத்துள்ள ஜங்க் மெயிலின் அளவிற்கு ஒவ்வொரு நாளும் உங்களின் வீட்டை சுற்றி நீங்கள் ஓட வேண்டும். இது எளிதில் உடல் எடையை குறைக்க பயன்படும் என பல நாட்டு மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

வயிற்றில் ரிப்பன்..!
பெரும்பாலான மக்கள் உடல் எடை குறைக்க இந்த ரிப்பன் முறையை பயன்படுத்துகின்றனர். அதாவது, இரவு விருந்திற்கோ அல்லது ஏதேனும் விழாக்களுக்கோ செல்லும் போது அவர்களின் உடையுடன் சேர்த்து ரிப்பன் ஒன்றை வயிற்று பகுதியில் கட்டி கொள்வார்களாம். இது அதிகமாக சாப்பிடுவதை கட்டுப்படுத்தி எடையை குறைக்க பயன்படும்.

உணவு கட்டுப்பாடு..!
நாம் சாப்பிடும் உணவில் எந்த அளவிற்கு கலோரிகள் உள்ளது என்பதை உணர்ந்து சாப்பிட்டாலே உடல் எடை கூடாமல் பார்த்து கொள்ளலாம். குறிப்பாக நாம் சாப்பிட கூடிய உணவுகள் அனைத்துமே சத்துள்ள உணவுகளாக இருப்பது நன்று.
மேலும் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications