உடல்எடை குறைப்பிற்கு உலக நாடுகளில் கடைபிடிக்கின்ற வினோத முறைகளை தெரிஞ்சிக்கோங்க...!

இன்று உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உலகில் பல நாட்டு மக்களும் பல விதமான முயற்சிகளை செய்து வருகின்றனர். உடல் எடையை குறைப்பது அவ்வளவு கடினமான விஷயமா..? என்ற கேள்வி இப்போது உங்களுக்கு தோன்றி இருக்கும். இது சாதாரண விஷயம் தான்.

உடல்எடை குறைப்பிற்கு உலக நாடுகளில் கடைபிடிக்கின்ற வினோத முறைகளை தெரிஞ்சிக்கோங்க..!

ஆனால், சரியான முறையில் இதை நாம் கடைபிடித்து வந்தாலே உடல் எடை சட்டென குறைக்க கூடும். நம் ஊரை போன்றே மற்ற நாடுகளிலும் உடல் எடையை குறைக்க பல வினோத முறைகளை கட்டிப்பிடித்து வருகின்றனர். அவை என்னென்ன என்பதை இனி அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரான்ஸ்

பிரான்ஸ்

நம்மில் பலர் "எங்கேயும் காதல்" படத்தை பார்த்து விட்டு பிரான்ஸ் போக வேண்டும் என்ற முடிவெல்லாம் எடுத்திருப்போம். அந்த நாட்டின் காதல் காவியத்தை போன்றே உடல் எடை முறையும் சற்றே சுவாரசியமாக உள்ளது. 92% பிரெஞ்சுகாரர்கள் அதிக நேரம் உட்கார்ந்து, நிறைய பேசி கொண்டே சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள். இதனால் உணவு சீராக செரிமானம் அடைந்து உடல் எடை கூடாமல் பார்த்து கொள்ளுமாம்.

ஹங்கேரி

ஹங்கேரி

நம் ஊரில் எந்த ஊறுகாய் பிரியர்கள் இருக்கின்றனரோ அதே அளவிற்கு ஹங்கேரி நாட்டிலும் இருக்கிறார்கள் போலும். இவர்கள் வெள்ளரிக்காய், தக்காளி, குடைமிளகாய், முட்டை கோஸ் போன்றவற்றை ஊறுகாவாக தயாரித்து சாப்பிடுவார்களாம். இது அவர்களின் ரத்த அழுத்தத்தை குறைத்து, கொழுப்பையும் கரைய செய்து விடுமாம்.

இந்தோனேஷியா

இந்தோனேஷியா

இந்தோனேஷியர்கள் ஒரு புது வித முறையை உடல் எடை குறைப்பதற்காக பயன்படுத்துகின்றனர். அது என்னவென்றால் இவர்கள் அதிகம் விரதம் இருப்பார்களாம். அத்துடன் விரத நாட்களில் வெறும் தண்ணீர் மற்றும் வெள்ளை அரிசியை உணவில் சேர்த்து கொள்வார்களாம். இது உடல் எடையை குறைப்பதற்காக பல ஆயிர வருடமாக இவர்கள் பின்பற்றி வரும் ஒரு முறையாகும்.

 ஜப்பான்

ஜப்பான்

ஜப்பானியர்களின் பழக்க வழக்கங்களை பல நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகின்றன. உடல் எடையை கூடாமல் பார்த்து கொள்ள "Power Sleep" என்ற முறையை கட்டிப்பிடித்து வருகின்றனர். 20-30 நிமிடம் குட்டி தூக்கம் போடுவதே இவர்களின் உடல் எடை குறைப்பிற்கான மந்திரமாக கடைபிடிக்கின்றனர்.

தாய்லாந்து

தாய்லாந்து

தாய் நாட்டினர், பெரும்பாலும் அவர்களின் உணவில் அதிகமான அளவில் மிளகாயையும் காரத்தையும் சேர்த்து கொள்வார்களாம். அதிக காரசாரமான உணவு நமது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்து, உடல் எடையை குறைக்குமாம்.

மலேசியா

மலேசியா

நமது அண்டை நாடான மலேசியாவில் நம்மை போன்றே ஒரு அற்புத வழி முறையை உடல் எடை குறைப்பிற்காக கடைபிடித்து வருகின்றனர். எல்லா வகையான உணவிலும் மஞ்சளை இவர்கள் அதிகம் சேர்த்து கொண்டே சமைத்து உண்ணுவார்களாம். இது உடலில் கொழுப்பை சேர விடாமல் வைத்து கொள்ளும்.

பிரேசில்

பிரேசில்

பிரேசிலிலிருந்து கண்டுபிடிக்கபட்ட அரிய வகை மூலிகை என்றெல்லாம் நாம் விளம்பரத்தில் இந்நாட்டை பற்றி கேள்விப்பட்டு இருப்போம். இவர்கள் உணவில் அரிசியுடன் பீன்ஸ் சேர்த்து அதிகம் உண்ணுவார்களாம். இந்த உணவு உடல் எடையை கூடாமல் பார்த்து கொள்ளுமாம்.

ரஷ்ஷியா

ரஷ்ஷியா

இந்நாட்டு மக்கள் பெரும்பாலும் தங்கள் வீடுகளிலே காய்கறி மற்றும் பழங்களை வளர்க்கின்றனர். இதனால், அதிக ஊட்டசத்து கொண்ட உணவை இவர்களால் உண்ண முடிகிறது. மேலும், இது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுமாம்.

சுவிட்ஸர்லாந்து

சுவிட்ஸர்லாந்து

சுவிட்ஸ் மக்கள் காலை உணவை அழகான முறையில் உண்கின்றனர். இவர்கள் ஓட்ஸ், பழங்கள்,மற்றும் நட்ஸ் ஆகியவற்றை காலை உணவாக சேர்த்து உண்கின்றனர். இந்த முறை உடல் எடையை கூட விடாமல் பார்த்து கொள்ளுமாம்.

மெக்ஸிகோ

மெக்ஸிகோ

இந்த நாட்டு மக்கள் ஒரு எளிய வழியை பின்பற்றி வருகின்றனர். அதாவது, மற்ற வேலைகளை காட்டிலும் மதிய நேரத்தில் அதிக அளவில் இவர்கள் உணவை எடுத்து கொள்வார்களாம். இந்த முறைதான் அவர்களின் உடல் எடை குறைப்பிற்கான இரகசியம் என அந்நாட்டு மக்கள் கூறுகின்றனர்.

நெதர்லாந்து

நெதர்லாந்து

இந்த நாட்டு மக்கள் கச்சிதமான உடல் அமைப்புடன் இருக்க ஒரு எளிய வழி முறையை கடைபிடிக்கின்றனர். இவர்கள் எங்கு செல்வதாக இருந்தாலும் சைக்கிளையே பயன்படுத்துவார்களாம். நெதர்லாந்து மக்கள் அதிகமான அளவில் சைக்கில்களை உபயோகிக்கின்றனர்.

போலந்து

போலந்து

போலந்து நாட்டு மக்கள் பெரும்பாலும் வெளியில் சாப்பிடுவதை தவிர்த்து விடுவார்களாம். இவர்கள் வீட்டிலே உணவை தயாரித்து உண்ணும் பழக்கம் கொண்டதால் தான் உடல் எடை கூடாமல் கச்சிதமாக வைத்து கொள்கின்றனர்.

ஃபின்லாந்து

ஃபின்லாந்து

இந்த நாட்டு மக்கள், நடைப்பயிற்சியை உயிர்மூச்சாய் கொண்டவர்கள். இவர்களுக்கு நடப்பது அதிகம் பிடிக்கும் போன்று. பல விதமான முறையில் பல இடங்களுக்கு இவர்கள் நடந்தே செல்வார்களாம். இதுதான் இவர்களின் உடல் எடை குறைப்பு ரகசியம்.

தென் ஆபிரிக்கா

தென் ஆபிரிக்கா

இவர்கள் "ரைபோஸ்" என்கிற டீயை அதிகம் குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள். இந்த டீயை தரிக்கும் இலையில் இயற்கையாகவே இனிப்பு சுவை இருக்குமாம். எனவே, சர்க்கரையை இவர்கள் பெரும்பாலும் பயன்படுத்தாமல் டீயை அருந்துவார்கள். இது உடல் எடை குறைப்பிற்கு அருமையான மருந்தாகும்.

நார்வே

நார்வே

இவர்கள் ஒரு அற்புதமான முறையை உடல் எடையை குறைக்க பயன்படுத்துகின்றனர். ஞாயிற்றுகிழமைகளில் இவர்கள் குடும்பத்துடன் சுற்றுலா போன்று வெளியில் சென்று, அதிக மகிழ்ச்சியாக இருப்பார்களாம். அதிக மகிழ்ச்சி உடல் எடையை கூடாமல் பார்த்து கொள்ளும்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion