Just In
- 8 min ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 39 min ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- 1 hr ago கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- 1 hr ago இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
Don't Miss
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையாது இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
காலை உணவிற்கு முன் இத ஒரு டம்ளர் குடிச்சா, ஒரே மாதத்தில் 5 கிலோ வரை குறைக்கலாம் தெரியுமா?
இங்கு ஒரே மாதத்தில் 5 கிலோ எடையைக் குறைக்க உதவும் வாழைப்பழ பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது என்றும், குண்டாக நினைப்பவர்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால், வேகமாக குண்டாகிவிடலாம் என்ற கருத்தும் மக்களிடையே உள்ளது. ஆனால் இந்த வாழைப்பழம் ஒருவரது உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.
ஒருவரது உடல் எடை அதிகமாவதற்கு மோசமான டயட் மற்றும் உடற்பயிற்சியின்மை மட்டுமின்றி, பரம்பரை, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், மருந்துகளின் பக்கவிளைவுகள் மற்றும் மெட்டபாலிசம் குறைவாக இருப்பது போன்றவைகளும் காரணங்களாகும்.
ஆனால் தினமும் போதுமான உடற்பயிற்சி செய்து, மெட்டபாலிசத்தைத் தூண்டும் ஒருசில பானங்களைப் பருகி வருவதன் மூலம் உடல் எடையை நினைத்தவாறு வேகமாக குறைக்க முடியும். இங்கு உடல் எடையைக் குறைக்க உதவும் அற்புதமான வாழைப்பழம் பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
நன்கு கனிந்த வாழைப்பழம் - 1
ஆளி விதை - 1 டேபிள் ஸ்பூன்
சோயா பால் - 1/2 கப்
உண்மை #1
இந்த இயற்கை பானததை ஒருவர் தொடர்ச்சியாக குடித்து வந்தால், ஒரு மாதத்தில் 5 கிலோ வரை உடல் எடையைக் குறைக்க முடியும். குறிப்பாக தினமும் ஆரோக்கியமான டயட்டுடன், 40 நிமிட உடற்பயிற்சியை செய்து, எண்ணெய் பலகாரங்களை முற்றிலும் தவிர்த்து வந்தால், இதன் முழுமையான பலனைக் காணலாம். இல்லாவிட்டால், இந்த பானத்தின் முழு நன்மையையும் பெற முடியாமல் போகும்.
உண்மை #2
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக கரைக்க உதவும். ஆளி விதையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், கொழுப்புக்களை கரைக்கும் திறனை அதிகரிக்கும்.
இந்த பானத்தில் சேர்க்கப்படும் சோயா பாலில் கொழுப்புக்கள் குறைவாக உள்ளதால், எடை குறைக்கும் முயற்சியின் போது, இது உடலில் புரோட்டீன் அளவை சீராக பராமரிக்கும்.
தயாரிக்கும் முறை:
மிக்ஸியில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் போட்டு நன்கு அரைத்தால், எடையை வேகமாக குறைக்க உதவும் வாழைப்பழ பானம் தயார்.
குடிக்கும் முறை:
இந்த பானத்தை ஒரு மாத காலம், தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் குடித்து வர வேண்டும். ஒருவேளை சோயா பால் அலர்ஜி என்றால், கொழுப்பு குறைவான பாலைப் பயன்படுத்தி இந்த பானத்தைத் தயாரித்துக் குடிக்கலாம்.