இந்த ஜூஸை தினமும் 2 கப் குடிச்சா, சீக்கிரம் தட்டையான வயிற்றைப் பெறலாம்!

Posted By:
Subscribe to Boldsky

தொப்பையைக் குறைத்து தட்டையான வயிற்றைப் பெறுவது என்பது முடியாத ஒன்றல்ல. ஆனால் அதற்கு சற்றும் முயற்சிக்காமல் இருந்தால், அப்படிப்பட்ட வயிற்றைப் பெறுவது தான் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். தொப்பையைக் குறைக்க டயட் மற்றும் உடற்பயிற்சிகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தாலே போதும்.

அதோடு உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டும் பானத்தைக் குடித்து வருவதன் மூலம், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரையும் வேகத்தை அதிகரிக்கலாம். இக்கட்டுரையில் தொப்பையைக் குறைத்து தட்டையான வயிற்றைப் பெற உதவும் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பானம் கொழுப்புக்களைக் கரைப்பதோடு, உடலின் மூலை முடுக்குகளில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி உடலைச் சுத்தம் செய்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சரி, இப்போது தட்டையான வயிற்றைப் பெற உதவும் பானம் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

பப்பளிமாஸ்/கிரேப் ஃபுரூட்- 1 கப்

ஆப்பிள் சீடர் வினிகர் - 2 ஸ்பூன்

தேன் - 1 ஸ்பூன்

கிரேப் ஃபுரூட்/பப்பளிமாஸ்

கிரேப் ஃபுரூட்/பப்பளிமாஸ்

இந்த பழத்தில் 53 கலோரிகளும், 2 கிராம் நார்ச்சத்தும் உள்ளது. மேலும் இந்த பழம் கொழுப்பைக் குறைக்கும் செயல்பாட்டை அதிகரித்து, விரைவில் எடையைக் குறைக்க உதவும். ஆகவே தொப்பையைக் குறைக்க நினைப்பவர்கள் இந்த பழத்தை டயட்டில் அதிகம் சேர்த்து வர, விரைவில் தொப்பையைக் குறைத்து தட்டையான வயிற்றைப் பெறலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் கொழுப்பு செல்கள் செரிமான பாதையில் நீண்ட நேரம் இருப்பதைத் தடுக்கும்.

தேன்

தேன்

தேனில் உள்ள இயற்கை சர்க்கரை மற்றும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

#1

#1

முதலில் ஜூஸ் தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

#2

#2

இந்த பானத்தை மதியம் மற்றும் இரவு உணவிற்கு முன் ஒரு கப் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ச்சியாக குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

குறிப்பு

குறிப்பு

ஆய்வுகளில் கிரேப்ஃபுரூட் ஜூஸை கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது குடிப்பதன் மூலம், உடலில் கொழுப்புச் செல்கள் தேங்கும் அளவு 50% குறையும். மேலும் மூன்று வேளையும் உணவு உண்ணும் போதும் கிரேப்ஃபுரூட் ஜூஸைக் குடித்தால், தொப்பை வருவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Two Cups A Day Of This Juice For One Week Will Give You A Flatter Tummy

Flat tummy can be achieved by drinking two cups of this juice every day. Also, read to know about the best drinks for flat tummy.