ஒரு மாதம் இதை தொடர்ந்து சாப்பிட்டா, அசிங்கமா தொங்கும் தொப்பையைக் குறைக்கலாம்!

Posted By:
Subscribe to Boldsky

உங்கள் உடலமைப்பு நாளுக்கு நாள் அசிங்கமாகிக் கொண்டிருக்கிறதா? இதுவரை உங்களுக்கு பொருத்தமாக இருந்த உடைகளை போடமுடியவில்லையா? எந்த உடையை அணிந்தாலும், தொப்பை அசிங்கமாக தெரிகிறதா? உங்கள் பிரச்சனைகளுக்கு ஓர் அற்புத தீர்வை தமிழ் போல்ட் ஸ்கை இக்கட்டுரையில் கொடுத்துள்ளது.

Try This Home Remedy To Reduce Abdominal Fat In A Month!

தொப்பை ஒருவருக்கு வர ஆரம்பித்தால், அதுவே பல நோய்களை அழையா விருந்தாளியாக உடலினுள் நுழையச் செய்யும்.

எனவே தொப்பையைக் கரைத்து, தட்டையான வயிற்றைப் பெற உதவும் ஓர் அற்புத மருந்து குறித்து தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து குடித்து சிக்கென்று மாறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

சியா விதைகள் - 2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

தேன் - 1 டீஸ்பூன்

சியா விதைகள்

சியா விதைகள்

சியா விதைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இதில் உள்ள புரோட்டீன் கொழுப்புக்களை எதிர்த்துப் போராடும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் வைட்டமின் சி ஏராளமான அளவில் உள்ளது. இது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, கொழுப்புக்களின் தேக்கத்தைக் குறைக்கும்.

தேன்

தேன்

தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலுக்கு பாதுகாப்பை வழங்குவதோடு, தொப்பையைக் குறைக்கவும் உதவி புரியும்.

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

ஒரு பௌலில் சியா விதைகளைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த விதைகளை மற்றொரு பௌலில் போட்டு, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்தால், தொப்பையைக் குறைக்கும் அற்புத மருந்து தயார்!

உட்கொள்ளும் முறை:

உட்கொள்ளும் முறை:

தயாரித்து வைத்துள்ள இந்த கலவையை தினமும் காலையில் உணவு உட்கொண்ட பின் சாப்பிட வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டால், தொப்பை குறைந்திருப்பதைக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Try This Home Remedy To Reduce Abdominal Fat In A Month!

Here is an amazing home remedy that can help you lose belly fat in a month, have a look!
Story first published: Saturday, March 25, 2017, 10:00 [IST]