டவர் ட்விஸ்டர்ஸ்- ஓடும் கிளப்!! ஏப்ரல்- 9ம் தேதி 3 வது ஆண்டு விழா! ஓர் சிறப்பு பார்வை!!

Written By: Staff
Subscribe to Boldsky

டவர் ட்விஸ்டர்ஸ் நமது சென்னையில் அண்ணா நகரில் அமைந்துள்ள ஓடுபவர்களுக்கான ஒரு அமைப்பு. வெறும் 5 பேரில் தொடங்கிய இந்த குழு இன்று 350 பேர் வரை தாங்கி கம்பீரமாய் ஓடுகிறது. ஐந்து வயது முதல் 60 வயது வரை எவரும் ஓடலாம். ஜாக்கிங் விரும்புவர்களுக்கு இந்த அமைப்பு மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.

Tower twisters- 3rd Anniversary Run

டவர் ட்விஸ்டரின் மற்ற செயற்பாடுகள்:

டவர் ட்விஸ்டரில் ஓடுவதை தவிர இன்னும் அருமையான விஷயங்களும் இருக்கின்றன. யோகா, பைக் ரைட் , மிதிவண்டி பயணம், உடல் மற்றும் மனம் வலிமை பெற பயிற்சிகள் போன்றவைகளும் நடைபெறுகின்றன.

" நான் டவர் ட்விஸ்டர் அமைப்பின் உறுப்பினர். தினமும் இங்கு வந்து மற்றவர்களோடு ஓடும் பயிற்சியை தொடங்குவோம். எவ்வாறு தினமும் நாம் சாப்பிடுவது தூங்குவததை வழக்கமாக செய்கிறோமோ அதுபோல் ஓடுவதும் நமது அன்றாட வாழ்க்கை முறையில் ஒன்று என்பதை உணர்த்துவதுதான் இந்த டவர் ட்விஸ்டர் அமைப்பின் நோக்கமே." என்று இந்த குழுவிலுள்ள ஒரு உறுப்பினர் கூறுகிறார்.

Tower twisters- 3rd Anniversary Run

மூன்றாம் ஆண்டு கொண்டாட்டம் :

இந்த அமைப்பின் 3 வது ஆண்டு விழா வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி நடக்கவிருகிறது. இதனை நன்றாக நடத்த திட்டமிடுவதாக இந்த டவர் ட்விஸ்டர் அமைப்பினர் கூறுகின்றனர்.

3, 5, 10 கிலோமீட்டர் இலக்கை இந்த அமைப்பு நிர்ணயித்திருக்கிறது. உங்களுக்கு வசதியான தூரத்தை நீங்கள் தேர்ந்தெடுத்து கலந்து கொள்ளலாம்.

இடம் :

கந்தசாமி நாயுடு கல்லூரி- ரவுண்டானா அருகில்.

நேரம் :

10 கி.மி செல்பவர்கள் - காலை 5 மணிக்கு வரவேண்டும்

5 மற்றும் 3 கி.மி செல்பவர்கள்- 5.30 க்கு வர வேண்டும்.

ரிஜிஸ்டர் செய்யாதவர்கள் கீழே தரப்பட்டுள்ள இந்த சுட்டியை க்ளிக் செய்து பதிவு செய்து கொள்ளலாம். 

http://www.towertwisters.com/registration.html

English summary

Tower twisters- 3rd Anniversary Run

Tower twisters is a running group and located in Anna nagar, Chennai. It is celebrating 3rd Anniversary Run on the 9th of April 2017.
Story first published: Saturday, April 1, 2017, 13:26 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter