Latest Updates
-
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்!
கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவும் ஓர் அற்புத வழி!
இங்கு கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவும் அற்புத வழி குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் உடலில் ஆங்காங்கு கொழுப்புக்கள் தேங்கியுள்ளதா? இதனால் எந்த ஒரு உடையையும் உடுத்த முடியாமல் அவஸ்தைப்படுகிறீர்களா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு ஒரு நல்ல தீர்வை வழங்கும். மோசமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள் மற்றும் உடலுழைப்பு இல்லாமையால், இரத்தத்தில் கொழுப்புக்களின் அளவு அதிகரிக்கிறது.

இதனால் அடிவயிறு, தொடை, இடுப்பு போன்ற பகுதிகளில் கொழுப்புக்கள் தேங்கி, அசிங்கமான தோற்றத்தைத் தருகிறது. ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அற்புத வழியின் மூலம், விரைவில் கொழுப்புக்கள் கரைந்து உடல் எடை வேகமாக குறையும்.

தேவையான பொருட்கள்:
உலர்ந்த அத்திப்பழம் - 3
ஆப்பிள் சீடர் வினிகர் - 1 கப்

செய்முறை #1
முதலில் உலர்ந்த அத்திப்பழத்தை டூத் பிக்கில் குத்திக் கொள்ள வேண்டும். பின் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றி, அதில் உலர்ந்த அத்திப்பழத்தை வைத்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

செய்முறை #2
மறுநாள் காலையில் ஊறிய அந்த உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட வேண்டும். எஞ்சிய ஆப்பிள் சீடர் வினிகரை கீழே ஊற்றிவிட வேண்டாம். அதை மறுநாளுக்கும் பயன்படுத்தலாம்.

எத்தனை நாட்களுக்கு வினிகரைப் பயன்படுத்தலாம்?
இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்பிள் சீடர் வினிகர் ஏழு நாட்களுக்கு போதுமானதாக இருக்கும். எட்டாவது நாள் மீண்டும் புதிய ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்து, அடுத்த வாரத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.

எப்போது பலன் தெரியும்?
இப்படி 2 வாரம் தொடர்ந்து அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை குறைந்திருப்பதைக் காண்பீர்கள்.

குறிப்பு:
உடல் எடையைக் குறைக்க மேலே கொடுக்கப்பட்டுள்ள வழியை பின்பற்றும் முயற்சியில் இறங்கினால், கொழுப்புக்களை அதிகரிக்கும் ஜங்க் உணவுகள், எண்ணெயில் வறுத்த உணவுகள் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதோடு தினமும் தவறாமல் குறைந்தது 40 நிமிட உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம்.



Click it and Unblock the Notifications
