அட!! உடல் எடையை இப்படி கூட குறைக்கலாமா? புதுவிதமான உருளைக் கிழங்கு வைத்தியம்!!

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

நிறைய பேர் இந்த தலைப்பை பார்த்ததும் எடைக்கும் உருளைக்கிழங்குக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்பீர்கள்? ஏனெனில் இந்த இரண்டு வார்த்தைகளையும் நீங்கள் ஒன்றாக பார்த்து இருக்க முடியாது.

நீண்ட காலமாக சொல்லப்படும் விஷயம் உருளைக்கிழங்கு சாப்பிட்டால் நாம் குண்டாகி விடுவோம் என்பது தான். இதைப் பற்றிய குழப்பங்களும் மக்களிடையே இருந்து வருகிறது.

இங்கே உருளைக்கிழங்கு உங்கள் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது என்றால் இதை எண்ணெய்யில் வறுத்தோ பொரித்தோ சாப்பிடக் கூடாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே.ஆமாம் நீங்கள் எண்ணெய்யில் பொரித்து உணவுகளை சாப்பிடும் போது கண்டிப்பாக உங்கள் எடையை அதிகரிக்கிறது.

பொரித்த உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காய் போன்றவை உடல் நலத்திற்கு தீங்கானது. எனவே உங்கள் உடல் எடையை குறைக்க உருளைக்கிழங்கை வேக வைத்து  சிறந்த முறையில் பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.

Simple Potato Diet To Lose Weight Quickly!

இப்பொழுது எல்லோருக்கும் தெரியும் அதிகமான கொழுப்பு உடலில் தங்குவதால் இரத்த அழுத்தம், அதிக கொல ஸ்ட்ரால், மூட்டு வலி மற்றும் உடல் எடை போன்றவை ஏற்படுகிறது.

மேலும் அதிகமான உடல் எடை உங்கள் தன்னம்பிக்கையை குறைத்து மற்றவர்கள் முன்னிலையில் கேளிக்கைக்கு உள்ளாக்கி விடுகிறது. எனவே தான் நீங்கள் உங்கள் எடையை கண்காணித்து அதை பராமரிக்கவும் வேண்டும்.

அதிகமான கொழுப்பு உடலில் தங்குவதற்கு ஆரோக்கியமற்ற உணவு முறைகள், ஹார்மோன் சமநிலையின்மை, உடற்பயிற்சியின்மை, பாரம்பரியம் போன்றவை காரணமாகும்.

உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

இதிலிருந்து நமக்கு தெரிவது ஒன்னே ஒன்னு தான் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மேற்கொள்ள வேண்டும். அதிகமான உடல் எடை இதய நோய்கள், குழந்தையின்மை மற்றும் புற்று நோய் வர வைக்கிறது.

நீங்கள் இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க விரும்பினால் அதற்கு இந்த உருளைக்கிழங்கு முறையை பயன்படுத்தி பாருங்கள். கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும். சரி வாங்க அதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்

Simple Potato Diet To Lose Weight Quickly!

தேவையான பொருட்கள் :

வேக வைத்த உருளைக்கிழங்கு - 2

யோகார்ட் - 1மீடியம் அளவு கப்

உப்பு - 1 டேபிள் ஸ்பூன்

இந்த இயற்கையான முறையை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காணலாம். இதனுடன் உடற்பயிற்சியையும் 45 நிமிடங்கள் மேற்கொண்டு எண்ணெய் உணவுகளை தவிர்த்து வந்தால் விரைவில் உங்கள் உடல் எடை குறைவது சாத்தியமே. நல்ல உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி இல்லாவிட்டால் இந்த முறை உங்களுக்கு சிறந்த பயனை தர இயலாது.

Simple Potato Diet To Lose Weight Quickly!

உருளைக்கிழங்கு பயன்கள் :

உருளைக்கிழங்கில் நிறைய பொட்டாசியம் மற்றும் விட்டமின் சி உள்ளது. இந்த சத்துக்கள் உங்கள் உடலின் மெட்டா பாலிசத்தை அதிகரித்து மற்றும் கொழுப்பை எளிதில் கரைக்க உதவுகிறது. எனவே உங்கள் உடல் எடை விரைவில் குறைந்து விடும்.

யோகார்ட் அல்லது தயிரில் அதிகமான புரோட்டீன்ஸ் மற்றும் கால்சியம் உள்ளது. புரோட்டீன்கள் உங்கள் உடலில் உள்ள கொழுப்புக்கு எதிராக செயல்பட்டு ஆரோக்கியமான வலுவான தசைகள் கிடைக்கச் செய்து உடலை கச்சிதமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

உருளைக்கிழங்கு மற்றும் யோகார்ட் குறைந்த அளவு கலோரிகளை கொண்ட உணவுப் பொருட்கள் என்பதால் உங்கள் உடல் எடையை எந்த விதத்திலும் பாதிக்காது.

Simple Potato Diet To Lose Weight Quickly!

செய்முறை :

1. வேக வைத்த உருளைக்கிழங்குடன் போதுமான அளவு யோகார்ட்டை கலக்க வேண்டும்.

2. பிறகு உப்பு சேர்த்து நன்கு இந்த கலவையை கலந்து கொள்ள வேண்டும்.

3. இந்த கலவையை தினமும் இரவு உணவாக 2 மாதங்கள் சாப்பிட வேண்டும்.

இரவில் சாப்பிடுவதை தவிர்ப்பதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

என்னங்க இந்த முறையை பயன்படுத்தி உடல் எடையை குறைத்து மற்றவர்கள் முன்னிலையில் உங்கள் தன்னம்பிக்கையை மேலோங்க செய்யுங்கள்.

English summary

Simple Potato Diet To Lose Weight Quickly!

Simple Potato Diet To Lose Weight Quickly!