10 நாட்களில் பூண்டு மற்றும் எலுமிச்சை கொண்டு தொப்பையை வேகமாக குறைப்பது எப்படி?

Posted By:
Subscribe to Boldsky

பலருக்கும் தொப்பை ஒரு உறுப்பாகவே ஆகிவிட்டது. ஒருவரது தொப்பையின் அளவு பெரிதாகும் போது, அவர்களுக்கு நோய்களின் அபாயமும் அதிகரிக்கும். தொப்பை கொழுப்புக்களின் தேக்கத்தால் ஏற்படுவதால், அது உடலின் செயல்பாடுகளில் இடையூறை ஏற்படுத்தி, அதனால் பல உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும்.

How To Lose Belly Fat Fast With Garlic and Lemon

தொப்பையைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் நாம் அனைவரும் விரும்புவது செலவே இல்லாத இயற்கை வழிகளைத் தான். எனவே தமிழ் போல்ட் ஸ்கை நம் வீட்டு சமையலறையில் உள்ள இரண்டு முக்கிய பொருட்களான பூண்டு மற்றும் எலுமிச்சை கொண்டு எப்படி தொப்பையை வேகமாக குறைப்பது என்று கொடுத்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை - 1
பூண்டு - 3 பற்கள்
சுடுநீர் - 1 கப்

பூண்டு

பூண்டு

பூண்டு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுவதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. முக்கியமாக பூண்டு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, வேகமாக உடல் எடை குறையச் செய்யும். மற்றொரு ஆய்வில் பூண்டு உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சை உடல் எடையைக் குறைக்க உதவும் பொருட்களுள் முதன்மையானது என்று சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியமில்லை. எலுமிச்சையில் இயற்கையாகவே உடலின் வெப்பத்தை அதிகரித்து, மெட்டபாலிசத்தை சீராக்கி, எடையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். முக்கியமாக எலுமிச்சை உடலின் மூலை முடுக்குகளில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும்.

செய்முறை #1

செய்முறை #1

முதலில் வெதுவெதுப்பான ஒரு கப் நீரில் ஒரு எலுமிச்சையின் சாற்றினைப் பிழிந்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை #2

செய்முறை #2

பின்பு பூண்டு பற்களைத் தட்டி, எலுமிச்சை நீரில் போட்டு, 15 நிமிடம் கழித்து வடிகட்டிக் குடிக்க வேண்டும். பூண்டு பற்களைத் தூக்கி எறிந்துவிடுங்கள்.

குறிப்பு

குறிப்பு

இந்த பானத்தை ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும். நிச்சயம் இந்த பானம் மிகவும் சுவையாக இருக்காது. இந்த பானத்தைக் குடிப்பது சற்று கஷ்டமாகத் தான் இருக்கும். இருப்பினும், தொப்பையை வேகமாக குறைக்க வேண்டுமானால், கஷ்டத்தை அனுபவித்து தானே ஆக வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Lose Belly Fat Fast With Garlic and Lemon

Want to know how to lose belly fat fast with garlic and lemon? Read on to know more...
Story first published: Monday, April 10, 2017, 10:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter