ஐஸ்வர்யா ராயின் வெயிட் லாஸ் 'சீக்ரெட்' என்ன தெரியுமா?

Subscribe to Boldsky

'ஐஸ்வர்யா ராய்' இந்தப் பெயரை இன்றளவும் யாருமே மறக்க முடியாது. அழகு என்ற பெயர் உச்சரித்தாலே உலகின் அழகி ஐஸ்வர்யா ராய் என்ற பெயர் கூடவே சேர்ந்து வரும்.

பொதுவாக சினிமாவில் இருப்பவர்கள் தங்களை இளமையுடன் காட்டிக் கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார்கள். இதில் கொஞ்சம் சிரமங்களை சந்திப்பது பெண்கள் தான். அதுவும் குழந்தை பிறப்புக்கு பிறகு இயற்கையாகவே கூடும் உடல் எடை குறித்த விமர்சனங்களை சந்திக்காத திரைப்பிரபலங்கள் இருக்கவே முடியாது. இதே பிரச்சனை ஐஸ்வர்யா ராய்க்கும் வந்தது. மகள் ஆராத்யா பிறந்த பிறகு ஐஸ்வர்யா ராயின் உடல் எடை பயங்கரமாக கூடியது.

அதை மீடியா உலகம் ஊதி ஊதி பெரிதாக்க மறு வருடமே உடல் இழைத்து விமர்சித்தவர்களின் வாயை அடைத்தார். எப்படி இது நடந்தது என்ற கேள்வி எல்லாருடைய மனதிலும் எழுகிறது அல்லவா? ஐஸ்வர்யா பின்பற்றிய டயட் என்ன எப்படி உடல் எடையை குறைத்தார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறந்த நாள் :

பிறந்த நாள் :

கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்த ஐஸ்வர்யா ராய் பிறந்தார் . மாடலிங் துறை,உலக அழகி பட்டம்,பாலிவுட் என வரிசையாக தன்னை மெருகேற்றிக் கொண்ட ஐஸ்வர்யா ராய் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.

இன்றைக்கு பிறந்த நாள் கொண்டாடும் ஐஸ்வர்யா ராய்க்கு ஆராத்யா என்ற மகளும் உண்டு.குழந்தை பிறந்த பிறகு பயங்கரமாக ஐஸ்வர்யா ராயின் உடல் எடை கூடியது. இதற்காக பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார்.

காலை உணவு :

காலை உணவு :

உடல் எடை குறைக்க வேண்டும் என்ற நினைப்பவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கூறும் சீக்ரட் என்ன தெரியுமா? தயவு செய்து காலை உணவை தவிர்க்காதீர்கள். ஆம், காலை உணவு அவ்வளவு அத்தியாவசியமானது.

ஐஸ்வர்யா ராய் எவ்வளவு அவசர வேலை இருந்தாலும் காலை உணவை தவிர்க்கவே மாட்டாராம். அதோடு காலை எழுந்த ஒரு மணி நேரத்தில் காலை உணவை சாப்பிட்டு விட வேண்டும்.

காலை வெறு வயிற்றில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்த சூடான தண்ணீர் குடிப்பாராம்.அதன் பின்னர் காலை உணவாக பிரவுன் பிரட் டோஸ்ட், ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் சாப்பிடுகிறார். தான் ஐஸ்வர்யாவின் காலை உணவு.

காலை உணவில் ப்ரோட்டீன் அல்லது ஃபைபர் நிறைவாக இருக்க வேண்டும்.

மதியம் :

மதியம் :

மதிய உணவாக ஒரு கப் தால் மற்றும் இரு சப்பாத்தி அல்லது ஃபுல்கா எடுத்துக் கொள்கிறார். அப்படி இல்லையெனில் ஒரு கிண்ணம் நிறைய வேகவைத்த காய்கறிகள்.

இந்த வேக வைத்த காய்கறிகள் எளிதாக ஜீரணமாவதுடன் அதில் ஏரளமான சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. அதோடு இதைச் சாப்பிடுவதால் எந்த கொழுப்பும் உடலில் சேர்ந்திடாது.

மாலை உணவு :

மாலை உணவு :

ஒவ்வொரு உணவுக்கும் இடையிலான இடைவேளை அதிக நேரம் எடுத்துக் கொள்ளாததால் குறைவான உணவு சாப்பிட்டாலே போதுமானதாக இருக்கிறது. இதனால் அதிகமான உணவை ஒரே நேரத்தில் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது.

மாலை சர்க்கரை சேர்க்காமல் பழச்சாறுகளை அருந்துகிறார். இதைத்தவிர ஒரு கப் நிறைய எதாவது ஒரு பழமும் சாப்பிடுவதுண்டு, ஆனால் ஸ்நாக்ஸ் என்று சொல்லி எண்ணெயில் பொறித்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள் என எதுவும் எடுத்துக் கொள்ளவதில்லை.

இதனைத் தவிர தன் உடல் ஆரோக்கியத்தையும் சருமத்தையும் பாதுகாக்க ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் வரை குடிக்கிறார்.

இரவு உணவு :

இரவு உணவு :

எப்போதுமே இரவு உணவினை மிகவும் குறைவாகவே எடுத்துக் கொள்கிறார். ஒருகப் பிரவுன் அரிசியுடன் க்ரில்டு ஃபிஷ் தான் பெரும்பாலான நேர இரவு உணவாக இருக்கிறது.

பிரவுன் அரிசியில் அதிகப்படியான ஃபைபர் இருக்கிறது. இது நாம் சாப்பிடுகிற வெள்ளை அரிசியை விட சிறந்தது. இது கொழுப்பைக் கரைப்பதுடன் குறைவான உணவு சாப்பிட்டாலே நிறைவான உணர்வைத் தரும். இதனால் நாம் அதிகப்படியான உணவு சாப்பிடாமல் தவிர்க்கலாம்.

மீன் சாப்பிடுவதால் அவை உங்களுக்கு தேவையான ப்ரோட்டீன் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் கொடுக்கிறது.

உடற்பயிற்சி :

உடற்பயிற்சி :

சரி என்ன தான் டயட் பின்பற்றினாலும் உடல் எடை குறைக்க உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் சொல்லும் பதில் என்ன தெரியுமா?

நான் தினமும் உடற்பயிற்சி செய்ய மாட்டேன். அதை விட பொழுதன்னைக்கும் ஜிம்மில் உட்கார்ந்திருக்கும் பழக்கம் எனக்கு கிடையாது. ஏதாவது ஒரு திரைப்படத்தில் ஃபிட்டாக நான் தெரிய வேண்டும் என்ற சூழல் ஏற்ப்பட்டால் மட்டுமே ஜிம் பயிற்சிகள் தொடர்வேன். மற்றபடி உடற்பயிற்சியை விட யோகா தான் எனக்கு மிகவும் பிடித்தமானது.

வொர்க் அவுட் செய்வதை விட யோகாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். வொர்க் அவுட்டை விட யோகா உங்கள் உடலை வளைவுத் தன்மையுடன் வைத்திருக்க உதவுகிறது.

தினசரி :

தினசரி :

காலை எழுந்ததும் தேன் கலந்த எலுமிச்சை சாறு குடித்ததும் வாக்கிங் அல்லது ஜாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதன் பின்னர் நாற்பத்தைந்து நிமிடங்கள் யோகா.எப்போதாவது கார்டியோ வொர்க் அவுட் செய்கிறார்.

தினமும் தான் எடுத்துக் கொள்ளும் உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்கிறார். பெரும்பாலும் வீட்டு உணவையே விரும்பி சாப்பிடுகிறார்.

ஹம் தில் தி சுக்கே சனம் :

ஹம் தில் தி சுக்கே சனம் :

ஐஸ்வர்யாவின் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய திரைப்படம் இது. நந்தினியாக இதில் நடித்திருந்த ஐஸ்வர்யா ராய் இளமையும் குறும்பும் நிறைந்த பெண்ணாக பார்ப்போரை ரசிக்க வைத்தார் அதே சமயம் தன் காதலனான சமீரை கரம் பிடிக்க அவர் படும் சிரமங்களை தத்ரூபமாக நடித்து ரசிகர்களை கண்ணீர் சிந்த வைத்தார்.

இத்திரைப்படத்தில் நடித்ததற்காக ஐஸ்வர்யா ராய்க்கு விருதும் கிடைத்துள்ளது.

தால் :

தால் :

சிறிய கிராமத்தில் பிறந்து நாடே போற்றும் திறமைசாலியாக ஐஸ்வர்யா ராய் இருந்தார். ஏ.ஆர் ரஹ்மானின் சிறந்த பாடல்கள் என்று வரிசைப்படுத்தினால் அதில் நிச்சயம் இத்திரப்பட பாடல்களும் இடம் பெறும். இதில் ஐஸ்வர்யாவின் நடிப்பும், நடனும் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

ஹமாரா தில் அப்கே பாஸ் ஹாய் ;

ஹமாரா தில் அப்கே பாஸ் ஹாய் ;

சதிஷ் கவுசிக் இயக்கிய இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் பாலியல் வன்புணர்வினால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்தார். ஒரு பெண் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பிறகு சாதரண வாழ்க்கை வாழ்வதற்கு எத்தகைய சிரமங்களை எல்லாம் சந்திக்க வேண்டியிருக்கிறது, நடுவில் வரும் காதல், அதை எப்படி கரம் பிடித்தார் என்பதை பேசியிருக்கிறது இத்திரைப்படம்.

தேவதாஸ் :

தேவதாஸ் :

சஞ்சய் லீலா பன்சாலியின் கனவுப் படம் இந்த தேவதாஸ்.இதில் ஐஸ்வர்யாவின் பாத்திரப்படைப்பு அவ்வளவு அழகானதாக இருக்கும். இதில் அவரது காஸ்ட்யூமும் பார்ப்போரை திரைப்படத்தோடு ஒன்றச் செய்வதாக அமைந்திருக்கும். இத்திரைப்படத்திற்காகவும் ஐஸ்வர்யா ராய்க்கு விருது கிடைத்தது.

குரு :

குரு :

மணிரத்தினம் இயக்கிய திரைப்படம். இத்திரைப்படத்தில் நடித்த பிறகு தான் ஐஸ்வர்யா-அபிஷேக் காதல் வலுவானது என்றே சொல்லலாம். கணவன் குரு தேசாய்க்கு உதவிடும் சுஜாதா தேசாயாக கச்சிதமாக பொருந்தியிருப்பார் ஐஸ்வர்யா ராய்/

ஜோதா அக்பர் :

ஜோதா அக்பர் :

இளவரசி ஜோதாவாக ஐஸ்வர்யா ராய். அரச குடும்பத்து பெண்ணாக பழங்காலத்து மேக்கப்,நகைகள் என அக்காலத்திற்கு ரசிகர்களை அழைத்துச் சென்றிருப்பார். தன் காஸ்ட்யூமைத் தாண்டி ஒரு ராஜபுத்திர இளவரசியாக ஐஸ்வர்யா காட்டும் பாவங்கள், துடுக்கான பேச்சு எல்லாமே ஈர்க்கும் படியாக அமைந்திருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Aishwarya Rai Reveals Secret about her Weight Loss

    aishwarya rai reveals secret about her weight loss
    இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more