ஏழே நாட்களில் தட்டையான வயிற்றைப் பெற இந்த ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடிங்க...

Written By:
Subscribe to Boldsky

நம் அனைவருக்குமே முருங்கைக் கீரை உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிப்பதில் மிகவும் சிறந்த ஓர் உணவுப் பொருள் என்பது தெரியும். ஆனால் அந்த முருங்கைக் கீரை நம் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க உதவும் என்பது தெரியுமா?

Get Flat Belly/Stomach In 7 Days - No Diet/No Exercise - 100%

என்ன நம்பமுடியவில்லையா? ஆம், உண்மையிலேயே முருங்கைக் கீரை நம் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, கொழுப்புக்களையும் கரைத்து வேகமாக தட்டையான வயிற்றைப் பெற உதவும்.

இப்போது ஏழே நாட்களில் தட்டையான வயிற்றைப் பெற முருங்கைக் கீரையை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

முருங்கைக் கீரை - 1/4 கப்

தண்ணீர் - 1 கப்

எலுமிச்சை - 1/2

தேன் - 1 டீஸ்பூன்

செய்முறை:

செய்முறை:

முதலில் மிக்ஸியில் 1 கப் நீர் ஊற்றி, அதில் முருங்கைக் கீரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை வடிகட்டி, அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, தேன் சேர்த்து கலந்தால், ஜூஸ் தயார்.

குடிக்கும் முறை:

குடிக்கும் முறை:

இந்த முருங்கைக் கீரை ஜூஸை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது இரவு உணவு உண்ட 1/2 மணிநேரம் கழித்துக் குடிக்கலாம்.

குறிப்பு

குறிப்பு

இந்த ஜூஸை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்த பின் இடைவெளி விட வேண்டும். முக்கியமாக நீங்கள் ஏதேனும் மருந்து மாத்திரைகளை அன்றாடம் எடுத்து வருபவராயின், மருத்துவரிடம் இந்த ஜூஸ் குறித்து சொல்லி, அவரது அனுமதியின் பேரில் பின்பற்றுவதே நல்லது. மேலும் இந்த ஜூஸ் குழந்தைகளுக்கோ அல்லது 5 வயதிற்குட்பட்ட சிறுவர்/சிறுமியர்களுக்கோ கொடுக்கக்கூடாது.

இப்போது முருங்கைக் கீரையின் இதர நன்மைகளைக் காண்போம்.

நன்மை #1

நன்மை #1

முருங்கைக் கீரையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், இது உடலினுள் இருக்கும் உட்காயங்கள் அல்லது அழற்சியைக் குறைக்க உதவும்.

நன்மை #2

நன்மை #2

முருங்கைக் கீரை குடலை சுத்தம் செய்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

நன்மை #3

நன்மை #3

முருங்கைக்கீரை உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்து, நோய்களின் தாக்குதலைத் தடுக்கும்.

நன்மை #4

நன்மை #4

முருங்கைக்கீரை உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கலோரிகளை வேகமாக கரைக்க உதவி, அசிங்கமான தொப்பை மற்றும் உடல் பருமனைக் குறைக்க உதவும்.

முருங்கைக்கீரையின் சிறப்பு

முருங்கைக்கீரையின் சிறப்பு

முருங்கைக் கீரையில் பசலைக் கீரையை விட 25 முறை அதிகமாக இரும்புச்சத்தும், ஆரஞ்சு பழத்தை விட 7 மடங்கு அதிகமாக வைட்டமின் சி சத்தும், வாழைப்பழத்தை விட 15 மடங்க அதிகமாக பொட்டாசியமும், முட்டையை விட 4 மடங்கு அதிகமாக புரோட்டீனும், கேரட்டை விட 10 மடங்கு அதிகமாக வைட்டமின் ஏ சத்தும், பாலை விட 17 மடங்கு அதிகமாக கால்சியம் சத்தும் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Get Flat Belly/Stomach In 7 Days - No Diet/No Exercise - 100%

To lose belly fat in 7 days and lose 3-4 inches off your waist with moringa leavesis is decsribed here
Please Wait while comments are loading...
Subscribe Newsletter