தொப்பையை குறைக்கனுமா? இந்த 5 விதியை ஃபாலோ பண்ணுங்க !!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைக்கு தட்டையான வயிறு தான் பலரது எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. இதற்காகவே எக்கச்சக்கமான மெனக்கெடல்கள் எடுப்பதற்கும் தயராகத்தான் இருக்கிறார்கள்.

தொப்பையின்றி இருந்தால் பிடித்தமான ஆடைகளை அணியலாமே என்று ஏங்குபவர்களே தட்டையான வயிறு வைத்திருப்பவர்களின் சிரமங்களை கொஞ்சம் கேளுங்க.

Follow these 5 steps daily to reduce your weight

இதனை சிரமம் என்று நினைக்காமல் உடல் ஆரோக்கியம் என்று நினைத்து வெற்றி நடை போடுபவர்களுக்கு ஒரு சபாஷ். தொப்பையின்றி இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தட்டையான வயிற்றை விரும்புபவர்கள் இதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜங்க் ஃபுட் :

ஜங்க் ஃபுட் :

ஒரு போதும் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். எப்போதும் ஆரோக்கியமான சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். காய்கறி,பழங்கள்,முட்டை,கறி, நட்ஸ் போன்றவற்றை எடுக்கலாம். அதிகமான சர்க்கரை சேர்ப்பது, எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக்கூடாது.

எப்போதும் தண்ணீர்ச் சத்து :

எப்போதும் தண்ணீர்ச் சத்து :

நம்முடைய உடலில் எப்போதும் தண்ணீர் சத்து இருந்து கொண்டேயிருக்க வேண்டும். நம்முடைய நண்பனாக கருத வேண்டிய தண்ணீரை எப்போதும் உடன் வைத்திருப்பது நன்று. இது செரிமானத்தை எளிதாக்கும்.அதோடு சருமத்தை பாதுகாத்திடும். செரிக்காமல் வயிற்றில் சேரும் உணவுகள் தான் கொழுப்பாக மாறுகிறது . ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு சிப் தண்ணீராவது குடிக்க வேண்டும்.

தூக்கம் முக்கியம் :

தூக்கம் முக்கியம் :

நம்முடைய மனதையும் ஆரோக்கியத்தையும் பேணிக்காக்க, உறுதுணையாக இருப்பது தூக்கம், சரியாக தூங்கவில்லையெனில் அது உங்களுக்கு மனச் சோர்வை உண்டாக்கும்.

இதனால் கார்டிசோல் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்க ஆரம்பித்திடும். இது தொப்பையை உண்டாக்ககூடியது.

வடிவம் :

வடிவம் :

நல்ல போஸ் தட்டையான வயிறை பெருவதற்கான முக்கிய வழி. நிற்கும் போது, உட்காரும் போது, நடக்கும் போது உங்களுடைய முதுகு வளையாமல் கூன் போடாமல் நிமிர்ந்து இருக்க வேண்டும். நிமிர்ந்து உட்கார்ந்து டயர்டாக இருந்தால் எழுந்து சின்ன வாக் போய்வாருங்கள்.

சோம்பல் :

சோம்பல் :

நாள் முழுமைக்கும் உங்களை எனர்ஜியாக வைத்திருங்கள். சோர்வாக ஒரேயிடத்தில் நீண்ட நேரம் உட்காராமல் சின்ன வேலைகளை செய்தால் கூட போதுமானது.

ஆக்டிவாக இருக்க வேண்டும். வயிற்றை சுருக்கி அதிக நேரம் உட்காருவது தவறு என்பதால் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கிறோம் என்று உணர்ந்து எழுந்து நிற்பது அல்லது கொஞ்சம் தூரம் நடை செல்வது போன்றவற்றை செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Follow these 5 steps daily to reduce your weight

Follow these 5 steps daily to reduce your weight
Story first published: Wednesday, August 23, 2017, 12:53 [IST]
Subscribe Newsletter