10 நாட்களில் 3 கிலோ எடையைக் குறைக்க உதவும் ஆசிய டயட் பற்றி தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பெரும்பாலான ஆசிய பெண்கள் ஒல்லியாக இருப்பதற்கு காரணம், ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வருவதுடன், சர்க்கரை இல்லாத மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் இல்லாத உணவுகளை அதிகம் தேர்ந்தெடுப்பது தான். ஒருவரது உடல் எடையில் உணவுகள் தான் முக்கிய பங்கை வகிக்கிறது.

Try This Asian Diet And Lose 3 kg For 10 Days

உணவுகளில் கட்டுப்பாட்டை விதித்தால், நிச்சயம் உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இங்கு சீன ஆய்வாளர் கோலின் காம்ப்பெல் டயட் ஒன்றை தயார் செய்தார். இந்த டயட் தான் ஆசிய டயட்.

இந்த டயட்டால் 10 நாட்களில் 3 கிலோ எடையை ஆரோக்கியமாக குறைக்கலாம். சரி, இப்போது அந்த ஆசிய டயட் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலை உணவு

காலை உணவு

இந்த டயட்டில் காலை உணவின் போது, ஒரு கப் சர்க்கரை சேர்க்காத க்ரீன் டீயுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் திணையை சேர்த்து வேக வைத்து சாப்பிட வேண்டும்.

ஸ்நாக்ஸ்

ஸ்நாக்ஸ்

கலோரி குறைவான தயிரில் பழங்களை நறுக்கிப் போட்டு ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிடலாம். அதுவும் பழங்களில் ஆரஞ்சு அல்லது பப்பளிமாஸ் சேர்த்துக் கொள்ளலாம் மற்றும் ஒரு கப் க்ரீன் டீ குடிக்க வேண்டும்.

மதிய உணவு

மதிய உணவு

சாதத்துடன் வேக வைத்த காய்கறிகள் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து கலந்து சாப்பிடலாம் அல்லது வேக வைத்த சிக்கன் மற்றும் உருளைக்கிழங்குடன் வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து சாப்பிடலாம்.

ஸ்நாக்ஸ்

ஸ்நாக்ஸ்

1 கப் க்ரீன் டீ அல்லது சீமைச்சாமந்தி டீ அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிக்கலாம். ஒருவேளை பசி அடங்கவில்லை என்றால், ஆரஞ்சு பழம் அல்லது பப்பளிமாஸ் பழம் சாப்பிடலாம்.

இரவு உணவு

இரவு உணவு

சிக்கனை சிறு துண்டுகளாக்கி, அதில் சிறிது எண்ணெய் மற்றும் மசாலா பொடியை சேர்த்து வேக வைத்து, எலுமிச்சை சாறு மற்றும் வேக வைத்த ப்ராக்கோலியை சேர்த்து பிரட்டி சாப்பிட வேண்டும்.

தூங்கும் முன்

தூங்கும் முன்

இரவில் தாமதமாக தூங்குபவர்களாக, ஒரு கப் பால் அல்லது க்ரீன் டீ குடித்துவிட்டு தூங்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Try This Asian Diet And Lose 3 kg For 10 Days

Try this asian diet and lose 3 kg for 10 days. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter