திருமணத்திற்கு பின் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்க வேண்டுமா? அப்ப இத படிச்சு பாருங்க...

Posted By:
Subscribe to Boldsky

திருமணத்திற்கு முன்பு வரை ஃபிட்டாக இருக்கும் பலர், திருமணத்திற்கு பின் குண்டாக ஆரம்பித்துவிடுவார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இதுக்குறித்து பேசில் பல்கலைகழத்தினர் மேற்கொண்ட ஆய்வில், திருமணத்திற்கு பின் பலர் தங்களது உடல் ஆரோக்கியத்தைக் கண்டு கொள்வதில்லை மற்றும் போதிய உடற்பயிற்சிகளை தினமும் செய்வதில்லை என்பது தெரிய வந்துள்ளது.

ஆகவே, திருமணத்திற்கு பின் உடல் எடை அதிகரிக்காமல் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமானால், தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ள சிலவற்றைப் பின்பற்றி வந்தாலே போதும். சரி, இப்போது திருமணத்திற்கு பின் உடல் எடையைக் கட்டுபாட்டில் வைக்க பின்பற்ற வேண்டியவைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விருந்துகள்

விருந்துகள்

திருமணமான புதிய தம்பதியர்களுக்கு நண்பர்கள் மற்றும் விருந்தினர்களின் வீடுகளில் விருந்து கொடுக்கும் பழக்கம் கட்டாயம் இருக்கும். ஒரே மாதத்தில் அந்த விருந்துகள் அனைத்திலும் கலந்து கொள்ளாமல், கொஞ்சம் தள்ளிப் போட்டு மெதுவாக கலந்து கொள்ளுங்கள்.

உணவுகளில் கவனம் அவசியம்

உணவுகளில் கவனம் அவசியம்

புதிதாக திருமணமானவர்கள் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் திருமணமான புதிதில் வீட்டில் இனிப்பு பலகாரங்கள் அதிகம் இருக்கும். அவற்றை அதிகமாக உட்கொண்டு, உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். மாறாக காய்கறிகள், பழங்கள், நட்ஸ் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள்.

தினமும் உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி

எக்காரணம் கொண்டும் திருமணத்திற்கு பின் உடற்பயிற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டாம். ஒரு வாரம் அப்படி தள்ளிப் போட ஆரம்பித்தால், பின் உடற்பயிற்சி செய்வதில் சோம்பேறித்தனம் வந்து, பின் தொப்பையைப் பரிசாகப் பெற வேண்டியது தான். வேண்டுமானால் உங்கள் துணையையும் உடன் சேர்த்துக் கொண்டு சற்று ரொமான்ஸை கூட்டி உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

உடலுறவு கொள்ளவும்

உடலுறவு கொள்ளவும்

உடலுறவு ஓர் சிறந்த உடற்பயிற்சி. திருமணத்திற்கு பின் ஒவ்வொருவருக்கும் உடலுறவு கொள்ள லைசன்ஸ் கிடைத்துவிட்டது. அதிலும் 25 நிமிடம் உடலுறவில் ஈடுபட்டால், 100 கலோரிகளைக் கரைக்கலாம் என பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. எனவே எடையைக் குறைக்க ஏன் கண்ட வழிகளை யோசிக்குறீங்க.. இனிமேல் உங்கள் துணையோடு உடலுறவில் புகுந்து விளையாடுங்க...

விடுமுறை நாட்கள்

விடுமுறை நாட்கள்

விடுமுறை நாட்களில் தம்பதிகள் பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டு திரைப்படம் பார்ப்பதைத் தவிர்த்து, ஏதேனும் விளையாட்டுக்களில் ஒன்றாக ஈடுபட்டு வந்தால், இருவரும் நேரத்தை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் செலவழித்தாற் போல் இருக்கும் அல்லவா!

மிஞ்சிய உணவுகளை சாப்பிட வேண்டாம்

மிஞ்சிய உணவுகளை சாப்பிட வேண்டாம்

திருமணத்திற்கு பின் சமைத்து எஞ்சியிருக்கும் உணவுகளை தூக்கி எறிய மனம் இல்லாமல், கஷ்டப்பட்டு சில பெண்கள் சாப்பிடுவார்கள். குறிப்பாக சாதத்தை அப்படி செய்வார்கள். ஆனால் இப்படி மிஞ்சிய உணவுகளை வைத்து சாப்பிடுவதால் உடல் எடை தான் அதிகரிக்கும். எனவே இதனைத் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Six Weight Loss Tips You MUST Follow After Marriage

Here are some weight loss tips you must follow after marriage. Read on to know more...