ஹியூமன் அனிமல் பிராக் லெஸ்னரின் டயட் மற்றும் ஃபிட்னஸ்!

Posted By:
Subscribe to Boldsky

பிராக் லெஸ்னர், இவரை ஒரு ஹியூமன்அனிமல் என்றே கூறலாம். அந்த அளவிற்கு மற்ற குத்துச்சண்டை வீரர்களுடன் ஒப்பிடுகையில் வேறுபட்டு காணப்படுபவர் பிராக் லெஸ்னர்.

இவரது உடற்கட்டே தனித்துவமாக இருக்கும். எப்படி என்ன சாப்பிட்டு இவர் இப்படி மிருகத்தனமான உடற்கட்டு பெற்றுள்ளார். இவர் பின்பற்றும் டயட் மற்றும் ஃபிட்னஸ் என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்படி இவ்வளவு பெரிய உருவம்?

எப்படி இவ்வளவு பெரிய உருவம்?

பிராக் லெஸ்னர் மிகவும் அகலமான உடல்வாகு கொண்ட வீரர். இதற்கு காரணம் இவர் நகர்புற நபர் அல்ல. மேலும், இவர் வீட்டில் பயிரிட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடுபவர். காய்கறி, கால்நடை இறைச்சி என இவர் உண்ணும் உணவுகள் பெரும்பாலும் ஆரோக்கியமான முறையில் வளர்க்கப்பட்டவை ஆகும்.

வேட்டையன்!

வேட்டையன்!

பிராக் லெஸ்னர் குத்துச்சண்டை போட்டி ரிங்கில் மட்டுமல்ல, நிஜத்திலும் வேட்டையாடுபவர். இவர் வேட்டையாடி வளர்ந்தவர் என கூறப்படுகிறது. இவரது அன்றாட உணவில் இறைச்சி ஒரு பங்கு இருந்தே தீரும்.

கால்பந்து!

கால்பந்து!

குத்துச்சண்டை என்பதை தாண்டி, பள்ளி பயிலும் போது கால்பந்தாட்டமும் விளையாடி வந்துள்ளார் பிராக் லெஸ்னர். பெரிய உருவம் அடைய வேண்டும் என்பது தான் பிராக் லெஸ்னரின் கனவாக இருந்தது. அதற்காக எல்லாமும் செய்தார். அதற்காக எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்பது தான் பிராக் லெஸ்னரின் டயட் மந்திரம்.

தீவிர பயிற்சிகள்!

தீவிர பயிற்சிகள்!

தடகள வீரர்கள் ஒல்லியாக இருந்தாலும் மிக வலுவாக இருப்பார்கள். இதற்கு காரணம் அவர்கள் இன்டன்ஸ் பயிற்சி எனப்படும் தீவிர பயிற்சிகளில் ஈடுபடுவார்கள்.

இதை செய்வது சற்று கடினம், அதிக பயிற்சிகள் வேண்டும். சரியான பயிற்சியாளர் உதவியுடன் தான் இந்த பயிற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பிராக் லெஸ்னரும் இந்த வகை பயிற்சி தான் எடுத்துக் கொண்டார்.

காரணம் எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் அவரை ரிங்கில் வீழ்த்த வேண்டும் என்பதே இவரது குறிக்கோள். மேலும், போலியாக இன்றி, உண்மையாக வெல்ல முயல்பவர் பிராக் லெஸ்னர்.

ரகசியமானவர்!

ரகசியமானவர்!

பிராக் லெஸ்னர் ப்ரைவசி விரும்பும் நபர். இவர் என்ன உண்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், ஒரு நாளுக்கு 3200 கலோரிகள் எடுத்துக் கொள்வார். அதனுடன் 300 புரதம் சேர்த்துக் கொள்கிறார்.

ஒருமுறை பைக் விபத்தில் அடிப்பட்டு, கடினமான சூழலை கடந்து, மீண்டும் கடுமையான பயிற்சிகள் செய்து தன் திறனை நிரூபித்தவர் பிராக் லெஸ்னர். 39 வயதிலும் தான் இளம் வயதில் பேணிக்காத்த அதே மாதிரியான உடற்கட்டை வைத்திருக்கிறார் பிராக் லெஸ்னர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Does Brock Lesnar Maintaince His Fitness

How Does Brock Lesnar Maintaince His Fitness? Check Out here his Diet and Fitness,
Story first published: Friday, November 25, 2016, 10:30 [IST]
Subscribe Newsletter