For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையை குறைக்க, உத்தித பார்சுவ கோணாசனம் செய்யுங்கள் - தினம் ஒரு யோகா!

By Hemalatha
|

உத்தித பார்சுவ கோணாசனம் :

உடல் எடையை குறைக்க முடியாதவர்கள் இந்த யோகாவினை செய்தால் உரிய பலன்களைத் தரும். பருமனானவர்கள் தினமும் காலை மாலை என இரு வேளை இந்த யோகாவை செய்தால் இடுப்புப் பகுதியில் உள்ள சதைகளை குறைத்து ஸ்லிமான தோற்றத்தை பெறுவார்கள்.

Do this yoga to reduce your body weight

பொருள் விளக்கம் :

உத்தித என்றால் சமஸ்கிருதத்தில், விரிவடைந்த நிலை, பார்சுவ என்றால் பக்கவாட்டில், கோணா என்றால் குறிப்பிட்ட கோணத்தில் என்று பொருள் தரும். கால்களை விரித்து, ஒரு பக்கம் சாய்ந்து செய்யப்படும் ஆசனம் இது. ஆகவே உத்தித பார்சுவ கோணாசனம் என்று பெயர் வந்துள்ளது.

செய்முறை :

முதலில் தடா ஆசனத்தில் நிற்கவும். அதாவது கால் மற்றும் கைகளை நேராக வைத்துக் கொண்டு, ப்ரேயர் செய்வது போல் நில்லுங்கள். பிறகு 3 அடி இடைவெளியில் இரு கால்களையும் விரித்து நில்லுங்கள்.

இப்போது மூச்சை இழுத்தவாறு வலது காலை அரை மண்டியில் மடக்கவும். உடலை வலப்பக்கம் சாய்க்க வேண்டும்.

பின் மூச்சை விட்டவாறு வலது கையை வலது பாதத்திற்கு இணையாக தரையில் பதியுங்கள்.உள்ளங்கைகள் முழுவதுமாய் தரையில் ஊன்றிக் கொள்ளுங்கள்.

இப்போது இடது கையை மேலே, தலையை ஒட்டியவாறு உயர்த்துங்கள். காது இடது கையினால் மூடியிருப்பது போன்ற நிலையில் இருக்க வேண்டும்.

இப்போது முகத்தை சற்று மேலே தூக்கி பார்க்க வேண்டும். பிறகு ஆழ்ந்த மூச்சினை இழுத்து, விட வேண்டும். இந்த நிலையில் ஒரு நிமிடம் நிற்க வேண்டும். மீண்டும் இயல்பு நிலைக்கு வாருங்கள். இப்போது இடது காலிற்கும் இதேபோல் செய்ய வேண்டும்.

பலன்கள் :

இடுப்பு பகுதியில் இருக்கும் கொழுப்புகள் நீங்கும். சுவாச உறுப்புகள் நன்றாக வேலை செய்யும். ஜீரண மண்டலங்கள் தூண்டப்படும். கழிவுகள் அகற்றப்படும்.

English summary

Do this yoga to reduce your body weight

Do this yoga to reduce your body weight
Story first published: Friday, June 3, 2016, 8:53 [IST]
Desktop Bottom Promotion