ஆயுர்வேத முறையில் தொப்பையைக் குறைக்க சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

ஆயுர்வேத சிகிச்சை முறை நம் இந்தியாவின் சொத்து. இந்த முறைப்படி பல நோய்களை குணப்படுத்தலாம் என்பது அனைவரும் அறிவோம். மேலும் இந்த ஆயுர்வேத சிகிச்சையினால் ஏராளமான நன்மைகள் உள்ளன.

மாதம் 3 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா? அப்ப காலை உணவா இத சாப்பிடுங்க....

தற்போதைய மோசமான உணவுப்பழக்கம், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்றவற்றால் உடலின் மெட்டபாலிசம் பெரிதும் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக உடல் பருமனால் அவஸ்தைப்படுகிறோம்.

3 மாதத்தில் இந்த ஒரு பானத்தால் பாதி உடல் எடையைக் குறைத்து அதிசயமாக மாறிய பெண்!

அதிலும் வயிறு, இடுப்புப் பகுதியைச் சுற்றி கொழுப்புக்கள் தேங்கி, பானை போன்ற வயிற்றைப் பெறுகிறோம். அதோடு பல நோய்களையும் இலவசமாக பெறுகிறோம். நீங்கள் அப்படி தொப்பையால் கஷ்டப்படுகிறீர்கள் என்றால் ஆயுர்வேத முறைப்படி தொப்பையைக் குறைக்க முயலுங்கள். இதனால் தொப்பையால் வந்த நோய்களையும் குணப்படுத்த முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கறிவேப்பிலை

கறிவேப்பிலை

தென்னிந்தியாவில் கறிவேப்பிலை மிகவும் முக்கியமான பொருள். இது உணவிற்கு மணத்தையும் சுவையைத் தரும். ஆனால் இந்த கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க உதவும் என்பது சிலருக்கே தெரியும்.

இந்த அற்புதமான இலை உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, செரிமானத்தை மேம்படுத்துவதோடு, கொழுப்புக்களைக் குறைக்கும். ஆகவே தினமும் அதிகாலையில் சிறிது கறிவேப்பிலையை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், தொப்பை வேகமாக குறையும்.

ஆளி விதை

ஆளி விதை

ஆளி விதை கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் ஆளி விதையில் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் உள்ளது. இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக குறைத்து உடல் எடையையும் குறைக்கும்.

எனவே உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், ஆளி விதையை தினமும் சாலட்டில் சேர்த்து உட்கொண்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

சோம்பு

சோம்பு

சோம்பில் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின்கள் போன்றவை அதிகமாக உள்ளது. இது உடல் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும், டாக்ஸின்களை வெளியேற்றவும், இரத்தத்தை சுத்தம் செய்யவும், கொழுப்புக்களை குறைக்கவும் உதவும்.

அதற்கு 2 டேபிள் ஸ்பூன் சோம்பை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைப் பருக வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், தொப்பை வேகமாக குறைவதைக் காணலாம்.

தண்ணீர்

தண்ணீர்

தாகம் எடுக்கும் போது, குளிர் பானங்கள், சோடா பானங்கள் போன்றவற்றைக் குடிப்பதைத் தவிர்த்து, தண்ணீரை அதிக அளவில் பருக வேண்டும். இதனால் எடுக்கும் கலோரிகளின் அளவு குறைந்து, தொப்பை வருவது தடுக்கப்படும்.

அதிலும் உணவிற்கு முன் 2 டம்ளர் நீரைப் பருகுவது அல்லது நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் அல்லது காய்கறிகளை உட்கொள்வதன் மூலம், உணவை அதிகம் உட்கொள்வதைத் தவிர்த்து, உடல் எடையைக் குறைக்கலாம்.

வெந்தயம்

வெந்தயம்

வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கார்போஹைட்ரேட் மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாகவும் உள்ளது. உடல் பருமனால் அவஸ்தைப்படுபவருக்கு வெந்தயம் ஒரு நல்ல மாற்றத்தைத் தரும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை வெதுவெதுப்பாக சூடேற்றிப் பருக வேண்டும்.

குக்குலு

குக்குலு

குக்குலு என்பது தொப்பையைக் குறைக்க உதவும் ஓர் பொருள். இது உடலில் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும் மற்றும் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கல்லீரலில் இருந்து கொழுப்புக்களைக் குறைக்கும்.

இந்த குக்குலை ஆயுர்வேத மருத்துவரின் பரிந்துரையின் பேரில் சரியான அளவில் எடுத்து வர வேண்டும். ஒருவேளை அதிகமாக எடுத்தால், அதனால் பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

திரிபலா

திரிபலா

தொப்பையைக் குறைக்க திரிபலா பெரிதும் உதவியாக இருக்கும். திரிபலா என்பது மூன்று மூலிகைகள் கலந்த ஓர் பொருள். இது உடலை சுத்தம் செய்து, புத்துணர்ச்சி அடையச் செய்யும். மேலும் இது குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

அதற்கு தினமும் 1 டேபிள் ஸ்பூன் திரிபலா பொடியை சுடுநீரில் போட்டு, தேன் கலந்து பருக, உடல் எடை வேகமாக குறைவதை நீங்கள் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ayurvedic Remedies To Reduce Belly Fat

Take a look at the best ways to reduce belly fat. As these are the ayurvedic remedies, that are best to reduce belly fat.
Subscribe Newsletter