உடல் எடையைக் குறைக்க சில புத்திசாலித்தனமான வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

உங்களால் உடல் எடையைக் குறைக்க முடியவில்லையா? எடையைக் குறைக்கும் மாத்திரைகள் மற்றும் இதர சிகிச்சைகளை மேற்கொண்டும் உடல் எடை குறையவில்லையா? முக்கியமாக உங்களால் எடையைக் குறைக்க டயட்டை பின்பற்ற முடியவில்லையா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்காகத் தான்.

உடல் எடையைக் குறைக்க டயட்டை மேற்கொள்ள முடியாவிட்டாலும், உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்கும் உணவுப் பொருட்கள் அல்லது பானங்களைக் எடுத்து வந்தால் தான், கொழுப்புக்கள் மற்றும் கலோரிகளை எரிக்க முடியும்.

இங்கு உடல் எடையைக் குறைக்க உதவும் சில எளிய வைத்திய முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அதனை மட்டும் பின்பற்றி வந்தாலே, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். ஆனால் இதனைப் பின்பற்றும் முன் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அது தான் நடக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீரகம்

சீரகம்

சீரகத்தில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கும், அடிக்கடி பசி ஏற்படுவது குறையும். இதனால் உடல் எடை குறையும்.

எடுக்கும் முறை

எடுக்கும் முறை

சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை - 1/2

தண்ணீர் - 1 1/2 டம்ளர்

செய்முறை

இரவில் படுக்கும் போது நீரில் சீரகத்தைப் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, குளிர வைத்து, அதில் எலுமிச்சையை பிழிந்து, குடித்து வர வேண்டும். இப்படி தினமும் காலையில் செய்து வந்தால், 2 வாரத்தில் உடல் எடை குறைந்திருப்பதை நீங்களே காணலாம்.

Image Courtesy

எலுமிச்சை மற்றும் தேன்

எலுமிச்சை மற்றும் தேன்

ஒரே மாதத்தில் உடற்பயிற்சி அல்லது டயட் இல்லாமல் எடையைக் குறைக்க வேண்டுமெனில், தேன் மற்றும் எலுமிச்சை உதவும். எலுமிச்சை உடலை சுத்தப்படுத்துவதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, செரிமானத்தை மேம்படுத்தும். மேலும் எலுமிச்சையில் உள்ள பாலிஃபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து, எடையைக் குறைக்க உதவும். அத்தகைய எலுமிச்சையுடன் தேனைக் கலக்கும் போது, ஆரோக்கியமாக உடல் எடை குறையும்.

எடுக்கும் முறை

எடுக்கும் முறை

எலுமிச்சை - 1/2

தேன் - 1 டேபிள் ஸ்பூன்

வெதுவெதுப்பான நீர் - 1 டம்ளர்

செய்முறை:

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையைப் பிழிந்து, தேன் கலந்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, ஒரு வாரத்தில் எடையில் மாற்றத்தைக் காணலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

உடல் பருமனை நினைத்து கவலைக் கொள்கிறீர்களா? அப்படியெனில் ஆப்பிள் சீடர் வினிகரைக் கொண்டு எடையை விரைவில் குறைக்கலாம். ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள பெக்டின் என்னும் பொருள், நீங்கள் அளவாக உணவை உட்கொள்ளச் செய்யும். மேலும் இதில் உள்ள அசிட்டிக் ஆசிட், கொழுப்புக்களை கரைத்து, எடையைக் குறைக்க உதவும்.

எடுக்கும் முறை

எடுக்கும் முறை

ஆப்பிள் சீடர் வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்

வெதுவெதுப்பான நீர் - 1 டம்ளர்

தேன் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

வெதுவெதுப்பான நீரில் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் மாலை மற்றும் இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் குடித்து வர, ஒரு வாரத்தில் கொழுப்புக்கள் கரைந்து தொப்பை சுருங்கி, உடல் எடை குறைந்திருப்பதை உணர்வீர்கள்.

சுடுநீர்

சுடுநீர்

சொன்னால் நம்பமாட்டீர்க்ள, தினமும் குளிர்ந்த நீருக்கு பதிலாக சுடுநீரைக் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து, கலோரிகள் அதிகம் எரிக்கப்பட்டு, உடல் எடை சீக்கிரம் குறையும். எனவே உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் சுடுநீரைக் குடியுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 9-10 டம்ளர் சுடுநீரைக் குடித்து வந்தால், உடல் எடை குறையும்.

பூண்டு

பூண்டு

பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் சேர்மம், உடலில் சேர்ந்துள்ள ஆரோக்கியமற்ற கொழுப்புக்களை கரைத்து, உடலின் மெட்டபாலிச அளவை அதிகரித்து, கலோரிகளை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும். அதற்கு தினமும் 4-5 பற்களை பச்சையாக உட்கொள்ளலாம் அல்லது பாலுடன் சேர்த்தும் எடுத்து வரலாம்.

எடுக்கும் முறை

எடுக்கும் முறை

பூண்டு - 5 பற்கள்

பால் - 1 கப்

செய்முறை:

பூண்டு பற்களை பாலில் போட்டு, 20 நிமிடம் நன்கு வேக வைத்து, பின் பூண்டை அந்த பாலுடன் சேர்த்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், 2 வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம்.

தக்காளி மற்றும் வெள்ளரிக்காய்

தக்காளி மற்றும் வெள்ளரிக்காய்

தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை தினமும் காலை உணவாக எடுத்து வந்தால், அதில் உள்ள சத்துக்களான வைட்டமின் சி, பி, பொட்டாசியம், நீர்ச்சத்து போன்றவை உடலுக்கு நல்ல ஆற்றலை வழங்குவதோடு, பசியைக் கட்டுப்படுத்தும்.

எடுக்கும் முறை

எடுக்கும் முறை

வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியை துண்டுகளாக்கி, அதில் மிளகுத் தூள், உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் புதினா இலைகளை சேர்த்து கலந்து, சாலட் போன்று செய்து உட்கொள்ள வேண்டும்.

லெமன் க்ரீன் டீ

லெமன் க்ரீன் டீ

உடல் எடையைக் குறைக்க க்ரீன் டீ உதவும் என்று பல இடங்களில் படித்திருப்பீர்கள். இதற்கு அதில் உள்ள காப்ஃபைன் மற்றும் கேட்டசின்கள் எனும் இரண்டு சேர்மங்கள் தான், கொழுப்புக்களை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

எடுக்கும் முறை

எடுக்கும் முறை

ஒரு டம்ளர் சுடுநீரில் க்ரீன் டீ பையை சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.

பட்டை மற்றும் தேன்

பட்டை மற்றும் தேன்

பட்டை மற்றும் தேனில் உள்ள மருத்துவ குணங்கள், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும், இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தும், கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும், பசியை கட்டுப்படுத்தும் மற்றும் உடல் எடையை குறைக்க உதவி புரியும்.

எடுக்கும் முறை

எடுக்கும் முறை

பட்டை பொடி - 1 டீஸ்பூன்

தேன் - 1 டேபிள் ஸ்பூன்

சுடுநீர் - 1 டம்ளர்

செய்முறை:

ஒரு டம்ளர் சுடுநீரில் பட்டை பொடி மற்றும் தேன் கலந்து, குளிர வைத்து, பின் அதனைக் குடிக்க வேண்டும். இப்படி தினமும் 2 முறை, அதாவது மதிய உணவிற்கு 1 மணிநேரத்திற்கு முன் மற்றும் இரவு படுக்கைக்கு 30 நிமிடத்திற்கு முன் குடிக்க வேண்டும்.

கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ்

கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ்

கேரட் மற்றும் பீட்ரூட் சேர்த்து தயாரிக்கப்படும் ஜூஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இரத்த கொலஸ்ட்ரால் அளவு குறையும், அடிக்கடி பசி ஏற்படாது, மெட்டபாலிசம் அதிகரிக்கும், கலோரிகள் வேகமாக கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும்.

எடுக்கும் முறை

எடுக்கும் முறை

கேரட் - 2

பீட்ரூட் - 1

எலுமிச்சை - 1 துண்டு

ப்ளாக் சால்ட் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

கேரட் மற்றும் பீட்ரூட்டை தோலுரித்து துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து, 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, வடிகட்டி, எலுமிச்சை சாறு மற்றும் ப்ளாக் சால்ட் சேர்த்து தினமும் காலை உணவின் போது குடித்து வர வேண்டும்.

கறிவேப்பிலை

கறிவேப்பிலை

தினமும் காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையின் 8 இலைகளை பச்சையாக சாப்பிட்டு வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், 20 நாட்களில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

ஆளி விதை

ஆளி விதை

ஒரு கையளவு ஆளி விதைகளை வாணலியில் போட்டு குறைவான தீயில் வறுத்து, ஒரு பௌலில் போட்டு, அத்துடன் சிறிது மிளகுத் தூள், ப்ளாக் சால்ட் மற்றும் மிளகாய்த் தூள் சேர்த்து கலந்து, ஸ்நாக்ஸ் நேரத்தில் உட்கொண்டு வர, ஆளி விதையில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கலோரிகளை எரித்து, உடல் எடை குறைய உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Miracle Remedies For Weight Loss

Here are some miracle remedies for weight loss. Take a look...
Subscribe Newsletter