கவர்ச்சியான உடலை பெற உதவும் சிறந்த உடற்பயிற்சிகள்!!!

By Boopathi Lakshmanan

நமது உடல் பல பாகங்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பாகும். உடலில் உள்ள ஒரு சில பாகங்களில் மட்டும் கொழுப்பு சேருவதற்கு அதிக வாய்ப்பு ஏற்படுகிறது. உதாரணத்திற்கு பேரிக்காய் போன்ற உடலை கொண்டவர்கள் அவர்களின் உடலின் கீழ் பாகம் பருமனாகவும் மேல்பாகம் மெல்லியதாகவும் இருக்கும். ஆப்பிள் போன்ற உடல் உருவம் கொண்டவர்கள் தங்கள் அடிவயிற்று பகுதியில் கொழுப்பை சேர்த்திருப்பார்கள். மிளகாய் போன்ற உடலை கொண்டவர்களிடம் பெருமளவில் கொழுப்பு சேர்ந்திருப்பதை காண முடியாது. பார்ப்பதற்கு கவர்ச்சியாக தோற்றமளிக்க நீங்கள் விரும்பினால் உடலில் உள்ள பாகங்களை நன்றாக அறிந்து அதற்கேற்ப உடற்பயிற்சியை செய்து உணவையும் உட்கொள்ள வேண்டும்.

பருமனாக இருக்கும் இடத்தில் மட்டும் பயிற்சி செய்து குறைப்பது முறையன்று. ஒருவர் பற்பல உடற்பயிற்சிகளையும் செய்து முழு உடலையும் கட்டுக்குள் வைக்க வேண்டும். நாம் அனைவரும் கனவு காண்பது போல் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு பல வழிகள் உண்டு. இதனால் பத்திற்கு பத்து (Perfect 10) என்ற சரியான அமைப்பை பெற முடியும். சரியான அமைப்பை பெற இரண்டு R-களை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அவை கண்டிப்பான உடற்பயிற்சி (Regular workout) மற்றும் கடுமையான உடற்பயிற்சி (Religious workout) ஆகும்.

கீழ்காணும் பகுதியில் உடலை கட்டுமஸ்தாக வைக்க உதவும் சிறந்த வழிகளை பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நடனம்

நடனம்

உடல் அமைப்பை சரி செய்ய நடனமே சிறந்த பயிற்சியாகும். நடனமாடும் போது உடலில் உள்ள அனைத்து பாகங்களும் அசைந்து பயன்படுத்தப்படுகின்றது. இதனால் உடல் முழுவதும் உள்ள எக்ஸ்ட்ரா கொழுப்புககள் கரைந்து உடலை சீர்படுத்துகிறது. தினமும் நடனப்பயிற்சி மேற்கொள்ளும் போது அது நமது உடலை நல்ல வடிவத்தில் மாற்றி உடலின் சக்தியை அதிகரிக்கிறது. ஆகையால் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதற்கு சிறந்த பயிற்சி நடனமாகும். இது மிகவும் சிறப்பான பயிற்சியாகவும் ஆனந்தத்தை தரக்கூடியதாகவும் அமைகின்றது.

பளு தூக்குதல்

பளு தூக்குதல்

உடலில் உள்ள தசைகளை விரிவுபடுத்த விரும்பினால் இந்த வகை பயிற்சியை மேற்கொள்ளலாம். சாதாரணமாக செய்யும் பயிற்சிகளை காட்டிலும் இது சிறிது மேலானதாகும். இந்த பயிற்சியை செய்வதற்கு பல்வேறு பயிற்சிகளும், உடல் பலமும் தேவைபடுகின்றது. ஆனால் பளு தூக்குவது உடலுக்கு சிறந்த வடிவத்தையும் கவாச்சியான அமைப்பையும் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதயம்

இதயம்

இதயத்தை பலப்படுத்த சைக்கிளிங், தடகளம், திரெட் மில், ஸ்டெப்பிங் மற்றும் பல பயிற்சிகள் உள்ளன. இத்தகைய பயிற்சிகள் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உங்கள் உடலுக்கு தேவையான சக்தியையும், தாங்கும் உறுதியையும் கொடுக்கின்றன. ஆப்பிள் போன்ற பருமனான உடலை உடையவர்களுக்கு இத்தகைய பயிற்சி மிக உபயோகமாக இருக்கும். இதை சரிவர செய்தால் உடல் நிச்சயம் குறையும்.

யோகா

யோகா

உடலின் அமைப்பு நன்றாக இருக்கச் செய்வதற்கு யோகா சிறந்த பங்கு வகிக்கிறது. நீன்ட காலம் எடுத்தாலும் நிரந்தரமாக தீர்வை கொடுக்கிறது. யோகா உடலை மட்டுமல்லாமல் சருமத்தையும் பொலிவூட்டி உடலில் இருக்கும் அழுக்குகளையும் நச்சுப்பொருட்களையும் வெளியேற்றுகிறது. மன அழுத்தத்திலிருந்து நம்மை விடுவித்து ஆரோக்கியமான உடலை தருகின்றது.

விளையாட்டு

விளையாட்டு

பேட்மிண்டன், டென்னிஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவதின் மூலம் எடையை குறைக்க முடியும். இவ்வாறு உடலை வடிவுப்படுத்தவும் முடியும். இத்தகைய பயிற்சிக்கு அதிக சக்தி தேவை மற்றும் இப்பயிற்சி மூலம் அதிக கொழுப்பையும் குறைக்க முடியும். இதுவும் கொழுப்பை குறைப்பதற்கான சிறந்த முயற்சியாகும்.

ஸ்ட்ரெட்சிங்

ஸ்ட்ரெட்சிங்

ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள் அதாவது கைகள், கால்கள், இடுப்பு, ஆகிய பாகங்களை நீட்டி பயிற்சியை தொடர்ந்து செய்தால் எடை வெகுவாக குறையும். உடலை கட்டுக்குள் கொண்டு வர இப்பயிற்சி உதவுகிறது. உடலுக்கு நல்ல அமைப்பையும் தருகிறது. ஸ்ட்ரெட்சிங் செய்வதால், உடல் இறுக்கமடைவதால் கவர்ச்சியான உடலை பெற முடியும்.

தாய் சி (Tai Chi)

தாய் சி (Tai Chi)

இந்த சீன தற்காப்பு கலையை பயில்வதன் மூலம் உடலை நல்ல உருவில் கொண்டுவர முடியும். இந்த பயிற்சி உடலின் சக்தியை அதிகரித்து உங்களையும் தற்காக்கும் வகையில் உபயோகமாக இருக்கும். தாய் சி உடலின் வளைக்கும் திறனை அதிகரித்து உடலை கட்டுக்குள் கொண்டு வருகின்றது. இந்த கலையை பயின்று உடலை குறைக்க முயற்சி செய்தால் நிச்சயம் பலன்களை பெற முடியும்.

நீச்சல்

நீச்சல்

நீச்சல் வேறு எந்த பயிற்சியை காட்டிலும் இரு மடங்கு கலோரிகளை குறைக்க வல்லது. நீச்சல் பயிற்சி கால் மற்றும் கைகளை வலுவூட்டி உடலையும் குறைக்கிறது. ஆகையால் நீச்சலும் உடலை குறைப்பதற்கு ஒரு சிறந்த பயிற்சியாகும்.

ஸ்கிப்பிங்

ஸ்கிப்பிங்

100 லிருந்து 200 ஸ்கிப்ஸ் ஒரு நாளைக்கு செய்வது உங்களை கவர்ச்சியாக வைக்க உதவும். உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் சீர்படுத்தி உடலை கச்சிதமாக வைக்க உதவுகிறது.

ஜிம்

ஜிம்

பெரும்பாலும் செய்யும் உடற்பயிற்சிகள் அனைத்தும் ஜிம்மில் உண்டு. அதில் மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து பயிற்சிகளும் அடங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, December 17, 2013, 20:30 [IST]
Desktop Bottom Promotion