ஆரோக்கியமான வாழ்வைப் பெறுவதற்கான மிகச்சிறந்த 20 உணவு பழக்கங்கள்!!!

Posted By: Staff
Subscribe to Boldsky

ஆரோக்கியமே மிகச் சிறந்த செல்வம் என்பதால் நாம் அனைவருமே கட்டுக்கோப்புடனும், பருவகால நோய்களை எதிர்க்கும் சக்தியுடனும் உடலை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம். மேலும் அனைவரது விருப்பப்பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்த ஆசையும் ஒன்றாகும் என்பதை யாருமே மறுக்க முடியாது.

பரப்பரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த உலகத்தோடு, நாமும் வேகமாக ஓடவேண்டிய காலக்கட்டத்தில், உணவைப் பற்றி சிந்திப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. நமது வயிறு பசிக்கும் போது அல்லது ஏதாவது உணவுப் பொருளை பார்க்கும் போது மட்டுமே நமக்கு சாப்பிடத் தோன்றுகிறது. ஆகவே சரியான முறையில் உணவை சாப்பிட்டு, நல்ல ஆரோக்கியத்துடன் வாழ ஆசைப்பட்டால், கீழ்கூறிய சில வழிமுறைகளைப் பின்பற்றினால், நிச்சயம் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தற்போதைய உணவுப் பழக்கத்தை ஆராய்ந்து பார்க்கவும்

தற்போதைய உணவுப் பழக்கத்தை ஆராய்ந்து பார்க்கவும்

ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கொண்டு வருவதற்கு, முதலில் தற்போதய உணவு பழக்கம் பற்றி கவனிக்க வேண்டும். அதற்கு தினமும் என்ன சாப்பிடுகிறோம், எப்போது சாப்பிடுகிறோம் என்பதை தொடர்ந்து கவனிக்கவும். இந்த டெக்னிக் தற்போதைய உணவு பழக்கம் ஆரோக்கியமானதா? இல்லையா? என்பதை மதிப்பீடு செய்ய உதவும்.

மெதுவாக உணவு பழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வரவும்

மெதுவாக உணவு பழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வரவும்

ஒரே நாளில் ஆரோக்கியமான உணவிற்கு மாறுவது என்பது கடினம். உணவு பழக்கத்தை கைவிடுவதை தவிர்க்கும் பொருட்டு, மெதுவாக மற்றும் சீரான முறையில் புதிய உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். ஆரம்ப கட்டத்தில் வாரத்தில் ஒரு நாளாவது சைவ உணவு சாப்பிட ஆரம்பித்து, அது பழக்கமாகிவிட்டால், பின்னர் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சாப்பிட முயற்சி செய்ய வேண்டும்.

மெடிடரேனியன் (Mediterranean) டயட் முறையை ட்ரை பண்ணவும்

மெடிடரேனியன் (Mediterranean) டயட் முறையை ட்ரை பண்ணவும்

மெடிடரேனியன் டயட் ஒரு ஆரோக்கியமான டயட் முறையாகும். இந்த டயட் முறையில் நல்ல சுவையும், ஆரோக்கியமும் ஒன்றாக கிடைக்கும். இதில் அவரை, நவதானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருட்கள் அதிகளவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தேவையான கலோரியின் அளவை நிர்ணயிக்கவும்

தேவையான கலோரியின் அளவை நிர்ணயிக்கவும்

முதலில் அன்றாடம் எவ்வளவு கலோரி தேவை என்பதை நிர்ணயம் செய்ய வேண்டும். இல்லையெனில், உடம்பில் உள்ள தசைத்திசுக்கள் உடைந்து, ஆற்றல் குறையும்.

காலை உணவு மிகவும் அவசியம்

காலை உணவு மிகவும் அவசியம்

தினமும் தவறாது பின்பற்ற வேண்டிய ஒன்று என்னவென்றால், ஆரோக்கியமான காலை உணவு சாப்பிடுவதே. காலையில் எழுந்தவுடன் அன்றைய நாளை ஆரோக்கியமான காலை உணவோடு ஆரம்பிக்க வேண்டும்.

ஆரோக்கியமான உணவையே தேர்வு செய்யவும்

ஆரோக்கியமான உணவையே தேர்வு செய்யவும்

ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என முடிவெடுத்துவிட்டால், சாப்பாட்டின் அளவு என்ன? அதில் எவ்வளவு கலோரி உள்ளது என்பவற்றிற்கு முன்னுனிமை கொடுக்காதீர்கள், மாறாக, வெவ்வேறு வகையான புத்துணர்ச்சி தரும் உணவு வகைகளை, உணவுப் பழக்கத்தில் சேர்த்து கொள்ள வேண்டும். இது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.

கார்போனேட்டட் பானங்களைத் தவிர்க்கவும்

கார்போனேட்டட் பானங்களைத் தவிர்க்கவும்

கார்போனேட்டட் பானத்தில் இயற்கையாக இனிப்புச் சுவை சேர்க்கப்படுவதால், அது ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் தினமும் ஏதாவது ஒரு குடிபானம் அருந்துபவராக இருந்தால், உடல் நிலை மிகவும் மோசமாகும்.

ஸ்நாக்ஸிற்கு பதிலாக பழங்கள் சாப்பிடவும்

ஸ்நாக்ஸிற்கு பதிலாக பழங்கள் சாப்பிடவும்

மாலையில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு கப் ஃப்ரஷ் ஃபுருட்ஸ் சாப்பிடவும். பசி எடுக்கும் போதெல்லாம், ஒரு துண்டு பழம் சாப்பிட்டு பழகினால், அதனால் உடலுக்குத் தேவையான, வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

வேலை செய்யும் இடத்திலும் வீட்டு சாப்பாட்டை சாப்பிடவும்

வேலை செய்யும் இடத்திலும் வீட்டு சாப்பாட்டை சாப்பிடவும்

வேலைக்குச் செல்லும் போது, வீட்டு சாப்பாட்டை எடுத்து செல்வது ஆரோக்கியமான வாழ்விற்குச் சிறந்தது. இது சர்க்கரை, சோடியம் மற்றும் உணவிலுள்ள செயற்கை பதார்த்தங்கள் பற்றிய கவலையை நீக்கிவிடும்.

பழங்கள், காய்கறிகளே எப்போதுமே சிறந்தது

பழங்கள், காய்கறிகளே எப்போதுமே சிறந்தது

அன்றாட உணவில் குறைந்தது ஐந்து பகுதியாவது வெவ்வேறு வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

அளவாகச் சாப்பிடவும்

அளவாகச் சாப்பிடவும்

‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம்' என்பார்கள். நல்ல உணவை பார்த்தவுடன், தட்டு நிறைய சாப்பிடத் தோன்றும். ஆனால் அவ்வாறு சாப்பிடக்கூடாது. மாறாக அளவாகச் சாப்பிட்டு பழக வேண்டும்.

உணவுப்பொருள் மீதுள்ள லேபிளை படித்து வாங்கவும்

உணவுப்பொருள் மீதுள்ள லேபிளை படித்து வாங்கவும்

கடையில் உணவுப்பொருள் வாங்கும் போது, லேபிளை நன்றாக படித்து, அதில் என்ன செயற்கை பொருட்கள் சேர்த்துள்ளனர் என்பதை தெரிந்து கொண்டு பொருளை வாங்கி பழக வேண்டும்.

அதிகளவு தண்ணீர் குடிக்கவும்

அதிகளவு தண்ணீர் குடிக்கவும்

தினமும் காலையில் எழுந்தவுடன் குறைந்தது ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலுக்கு ஆக்ஸிஜன் மற்றும் நீரை வழங்கி, உடல் திசுக்களுக்கு புத்துயிர் அளிக்கும்.

மெதுவாக சாப்பிடவும்

மெதுவாக சாப்பிடவும்

‘பதறாத காரியம் சிதறாது' என்பார்கள். ஆகவே முடிந்தவரை மெதுவாகச் சாப்பிட வேண்டும். இது உடலுக்கு மிகவும் நல்லது. மேலும் சாப்பிடும் போது, உணவை சிறு சிறு துண்டுகளாக மென்று சாப்பிட்டால், உணவு விரைவாக ஜீரணமடைந்து திருப்தியளிக்கும்.

முழுநிறைவு முக்கியமல்ல

முழுநிறைவு முக்கியமல்ல

ஆரோக்கியமான உணவுப்பழக்கத்திற்கு எடுக்கும் ஒவ்வொரு மாற்றத்திலும் பெருமளவு பங்கு உண்டு. எதிலுமே நிறைவு காண முயற்சிக்கக்கூடாது. மேலும் அதிகம் பிடிக்கும் உணவு வகைகளை, முற்றிலும் உணவு பழக்கத்திலிருந்து நீக்கி விடக்கூடாது.

வீட்டில் சமைத்து சாப்பிடவும்

வீட்டில் சமைத்து சாப்பிடவும்

ரெஸ்டாரண்ட்டில் ஆர்டர் செய்வதற்குப் பதிலாக, வீட்டில் சமைத்து சாப்பிடவும். பிட்சா முதற்கொண்டு பர்க்கர் வரை, வீட்டிலேயே சமைக்கலாம். இது தான் உண்மையில் ஆரோக்கியமான வழிமுறையாகும்.

புரோட்டீன் உணவுகளை அதிகம் சாப்பிடவும்

புரோட்டீன் உணவுகளை அதிகம் சாப்பிடவும்

அன்றாடம் சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கு எனர்ஜி அவசியம். இறைச்சி, முட்டை, பால், பருப்பு வகைகள், சீஸ் போன்றவற்றில் புரோட்டின் அதிகமாக கிடைக்கும். மேலும் தயிர், சோயா பீன்ஸ், கடலை சாப்பிட்டு வந்தால், எலும்பு, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

 சரியான நேர இடைவெளியில் சாப்பிடவும்

சரியான நேர இடைவெளியில் சாப்பிடவும்

மூன்று அல்லது நான்கு மணிநேரத்திற்கு ஒரு முறை சாப்பிடுவது சிறந்தது. அதாவது தினமும் மூன்று வேளை சாப்பாடும், ஒன்று அல்லது இரண்டு வேளை ஸ்நாக்ஸும் சாப்பிடலாம். இவ்வாறு நேர இடைவெளியில் சாப்பிடுவதால், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

ஆரோக்கியத்திற்கு கார்போஹைட்ரேட் அவசியம்

ஆரோக்கியத்திற்கு கார்போஹைட்ரேட் அவசியம்

போதிய அளவு கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அடங்கிய ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்வு செய்ய வேண்டும். தானிய வகை உணவுகள் நீண்ட நேர எனர்ஜிக்கு உகந்தது. தானிய வகை உணவுகளில் அதிகளவு பைட்டோகெமிக்கல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், இதயநோய், புற்றுநோய், மற்றும் நீரிழிவு நோயிலிருந்து நம்மை பாதுகாக்க உதவும்.

ஆரோக்கியமான கொழுப்புச்சத்துள்ள உணவுகள்

ஆரோக்கியமான கொழுப்புச்சத்துள்ள உணவுகள்

ஆரோக்கியமான நல்ல கொழுப்பு, மூளை, இதயம் மற்றும் திசுக்கள் வளர்ச்சிக்கு அவசியம். அதேப்போல் தலைமுடி, சருமம் மற்றும் நகங்களுக்குச் சிறந்தது. ஒமேக-3 என்ற கொழுப்பு வகை உள்ள உணவுகள், இதய நோய் அபாயத்தை குறைத்து, உற்சாகமான மனநிலையை கொடுப்பதுடன், அறிவாற்றல் குறையை நீக்கவும் உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

20 best ways healthy eating habits

All of us desire to age gracefully, be fit, immune to various seasonal illness, and maintain a healthy body. We are pretty sure that this desire is listed somewhere in your top 10 wish list. In this rat race world we tend to eat only when our stomach growls or when we see some food.
Story first published: Friday, August 16, 2013, 12:07 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter