For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடையை சமாளிக்க குளிர்ச்சியா சாப்பிடுங்க!

By Mayura Akilan
|

அக்னி வெயில் ஆரம்பிக்கும் முன்னே சாலைகளில் அனல் தகிக்கிறது. வெளியே தலை காட்ட பயந்து கொண்டே வீட்டிற்குள் அடைந்து கிடைப்பவர்கள் பலர் உண்டு. குளிர்ச்சியாய் சாப்பிட்டால் கோடையை சமாளிக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

அவர்கள் பரிந்துரைக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்டுப் பாருங்களேன். ஜில் ஜில் கூல் கூல் என கோடையை கொண்டாடுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெல்லிக்கனி

நெல்லிக்கனி

நெல்லிக்கனி கோடைக்கேற்ற இதமான இனிப்பான பழம். உடலை புத்துணர்ச்சியாக்கும். இது இதயம், கூந்தல், சருமம் போன்றவற்றினை இளமையோடு வைவத்திருக்கும். இது மூப்பினை தடுக்கும் என்று சங்க காலம் முதலே சொல்லப்பட்டு வந்துள்ளது. தினசரி நெல்லிக்கனி ஜூஸ் பருகலாம்.

ஆப்ரிகாட் பழங்கள்

ஆப்ரிகாட் பழங்கள்

கோடையில் சருமம் வறட்சியடையாமல் தடுப்பதில் ஆப்ரிகாட் பழம் சிறந்தது. இது இரும்பு சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து அதிகம் கொண்டுள்ளது. நொறுக்குத் தீணிகளை தவிர்த்து இந்த பழங்களை உண்ணலாம்.

குளிர்ச்சியான மோர்

குளிர்ச்சியான மோர்

கோடைக்கு ஏற்ற எளிமையான ஆரோக்கியமான பானம் மோர். இது கொழுப்பு சத்து இல்லாதது. பார்கார்ன் கோடைக்கேற்ற சத்தான உணவு. இதில் உள்ள வைட்டமின் பி உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க வல்லது. கொழுப்பு சத்தினை கட்டுப்படுத்துகிறது.

மாம்பழம்

மாம்பழம்

கோடை காலத்தில் இயற்கை அளித்துள்ள வரம் மாம்பழம். மாம்பழம் ஜூஸ் சத்தான ஆரோக்கியமான பானம். அதை இனிப்பாகத்தான் பருகவேண்டும் என்பதில்லை. சீரகம், உப்பு போட்டு கோடைக்கேற்ற ஆரோக்கிய பானமாகவும் பருகலாம். வேனல் கட்டி, புண்கள் வராமல் தடுக்கும்.

கடல் சிப்பி

கடல் சிப்பி

கோடைகாலத்தில் வியர்வை மூலம் நச்சுக்கழிவுகளை வெளியேற்றும் உணவு கடல் சிப்பி. அதில் உள்ள சத்துக்கள், பைட்டோ கெமிக்கல்ஸ் வியர்வை சுரப்பிகளை தூண்டுகிறது. டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் உள்ளதை வாங்குவதை விட ப்ரெஸ்சாக சாப்பிடலாம். அதேபோல் புரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் கோடைக்கேற்ற உணவு. கெட்ட கொழுப்புகளை கட்டுப்படுத்துகிறது.

தர்பூசணி பழரசம்

தர்பூசணி பழரசம்

கோடையில் இயற்கை அளித்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்பூசணி பழம். இது 95 சதவிகிதம் தண்ணீர் சத்து கொண்டுள்ளது. இதில் பொட்டாசியம், பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி போன்றவை அடங்கியுள்ளன. கோடை காலத்தில் ஏற்படும் ஜீரண கோளாறுகள், சிறுநீரக எரிச்சல் போன்றவைகளை சரி செய்கிறது. இதை பழமாகவும் சாப்பிடலாம், ஜூஸ் செய்தும் பருகலாம். உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ள இந்த உணவுகளை உட்கொண்டால் கோடை காலத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods To Beat The Summer Heat!

With the sweltering summer heat making an early appearance, you will need all the cool-aid you can get! Try these refreshing super foods to cool your body and mind.
Desktop Bottom Promotion