For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண்ண சுத்தி வலிக்கிற மாதிரி இருக்கா?... இந்த சின்ன எக்சர்சைஸ் பண்ணுங்க போதும்...

உங்கள் கண்கள் களைப்படைந்து பொலிவிழந்து போய் காணப்படுகிறதா, அதற்கான சிறந்த 10 உடற்பயிற்சிகள் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

|

பார்வை என்பது சாதாரண விஷயமல்ல. நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளும் பிம்பமும் மூளையின் செயல்பாட்டைக் கொண்டே பார்க்கப்படுகிறது. 50 % அளவு இதில் மூளை வேலை செய்கிறது. எனவே நாம் நமது கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டாலே போதும் பார்வை திறனை அதிகரிக்கலாம்.

Best exercises for tired eyes

இதன் மூலம் மூளையின் செயல்பாட்டை 50% வரை மேம்படுத்த முடியும். இப்பொழுது எல்லாம் குழந்தைகளுக்கு கூட கண்பார்வை பிரச்சனை ஏற்படுகிறது. காரணம் மொபைல், கணிணி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை இடைவிடாமல் பார்ப்பதால் இந்த கண் பார்வை பிரச்சினை ஏற்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எதனால் கண் பார்வை திறன் குறைகிறது?

எதனால் கண் பார்வை திறன் குறைகிறது?

மணிக்கணக்காக மொபைல் பார்ப்பது, கணினி வேலை, பிடித்த புத்தகத்தை மங்கலான ஒளியில் படுப்பது போன்றவை எளிதில் உங்கள் கண்களை சோர்வடையச் செய்து விடும். இதனால் கண்களில் வலி, அசதி, கண்ணீர் வடிதல் போன்றவை ஏற்படும். சில நேரங்களில் கண்கள் சிவந்து போதல், மங்கலான பார்வை, முதுகு வலி, தோள்பட்டை வலி கூட நேரிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இப்படி ஏற்படும் கண் பார்வை சேதத்தை நாம் நினைத்தால் ஓரளவுக்கு குறைக்கலாம். சோர்வடைந்த கண்களுக்கென்றே நிறைய பயிற்சிகள் உள்ளன. இது கண்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கிறது. மேலும் கண்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து கண் பார்வை திறனை மேம்படுத்துகிறது.சரி வாங்க இதை எப்படி செய்யலாம் என்று இப்பொழுது பார்க்கலாம்.

MOST READ: செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம் - கிரக தோஷங்கள் விலக பரிகாரங்கள்

கண்களை ஒற்றி எடுத்தல்

கண்களை ஒற்றி எடுத்தல்

முதலில் கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் கண் இமை களுக்கு மேலே லேசாக உள்ளங்கையைக் கொண்டு ஒற்றி லேசான அழுத்தம் கொடுங்கள். இப்படி செய்யும் போது தசைகள் ரிலாக்ஸ் ஆகி கண்களில் உள்ள அழுத்தம் போய் விடுகிறது. கண்களும் புத்துணர்வு பெறுகிறது.

செய்யும் முறை

முதலில் செளகரியமாக நேராக உட்கார்ந்து கொள்ளுங்கள்

கண்களை மூடி மூச்சை இழுத்து கொள்ளுங்கள்

இப்பொழுது இமைகளின் மேல் விரல்களை வைத்து 10 நிமிடங்கள் லேசாக அழுத்தம் கொடுங்கள்

2 விநாடிகளுக்கு ஒரு முறை விட்டு விட்டு செய்யுங்கள்

பிறகு மறுபடியும் அழுத்தம் கொடுங்கள். இப்படியே செய்து வாருங்கள். கண்களில் உள்ள சோர்வு போய்விடும்.

 ரப் டவுன் பயிற்சி

ரப் டவுன் பயிற்சி

காண்டாக்ட் லென்ஸ் வைத்திருப்பவர்கள் கூட இதை செய்யலாம். ஏனெனில் இதனால் எந்த இடையூறும் கிடையாது. சீக்கிரமே கண்களில் உள்ள சோர்வை நீக்கி புத்துணர்வு கொடுத்து விடும்.

செய்யும் முறை

உங்களுக்கு செளகரியமாக நின்றோ அல்லது அமர்ந்தோ கொள்ளுங்கள்

உங்கள் உள்ளங்கைகளை நன்றாக சூடாகும் படி தேயுங்கள்

இப்பொழுது கண்களை மூடிக் கொண்டு இமைகளின் மேல் உள்ளங்கைகளை வையுங்கள்

கைகளில் உள்ள வெப்பம் இமைகளில் படர்வதை உணரலாம்

அழுத்தம் கொடுக்க வேண்டாம்.

இப்படி செய்தால் கண்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து சீக்கிரம் சோர்வு போய்விடும்.

அருகில் மற்றும் தொலைவு பயிற்சி

அருகில் மற்றும் தொலைவு பயிற்சி

இந்த உடற்பயிற்சி கண் தசைகளை ரிலாக்ஸ் செய்ய பயன்படுகிறது. மையோபியா போன்ற கண் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது. கண்களின் பார்வை திறன் மற்றும் கவனத்தை மேம்படுத்துகிறது.

செய்யும் முறை

உங்களது பெருவிரலை முகத்தில் இருந்து 10 அங்குலம் தள்ளி வைத்துக் கொள்ளுங்கள்.

15 நிமிடங்கள் அதையே பாருங்கள்

அடுத்து 10 மற்றும் 20 அடி தூரத்தில் உள்ள பொருட்களை யே பாருங்கள்

15 நிமிடங்கள் பார்க்க வேண்டும்

அப்புறம் பெருவிரலை பாருங்கள். இப்படி மாத்தி மாத்தியே 5 தடவை செய்யுங்கள்

கண் இமைகளுக்கு சிகிச்சை

கண் இமைகளுக்கு சிகிச்சை

கண் இமைகளுக்கு கொடுக்கும் யோகா பயிற்சி கண்களை ரிலாக்ஸ் செய்கிறது. இந்த பயிற்சி கண்களில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை போக்குவதோடு தலைவலியையும் போக்க உதவுகிறது.

செய்யும் முறை

செளகரியமாக அமர்ந்து கொண்டு உங்கள் மோதிர விரலைக் கொண்டு கீழ் இமைகளை மசாஜ் செய்யுங்கள்.

கீழ் இளமையின் உள் பகுதியில் இருந்து வெளிப்பகுதியை நோக்கி மசாஜ் செய்யவும்

இதே மாதிரி மேல் இமையையும் மசாஜ் செய்யவும்.

MOST READ: குரு பெயர்ச்சி 2019 - 20: கன்னி லக்னகாரர்களுக்கு ஹம்சயோகம் தரும் குருபகவான்

உள்ளங்கை கண் பயிற்சி

உள்ளங்கை கண் பயிற்சி

கண்களைச் சுற்றியுள்ள தசைகளை தளர்த்துவதற்கான மிகச் சிறந்த பயிற்சி.

செய்யும் முறை

ஒரு சேர் அல்லது அமர்ந்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுக்கு முன்னாடியுள்ள மேஜையில் முழங்கைகளை வைத்துக் கொண்டு கண்களை ஒற்றி எடுங்கள்

செய்யும் போது மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும்

கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன பிறகு மறுபடியும் 30 விநாடிகள் கழித்து திரும்ப செய்யுங்கள்.

பக்கவாட்டு கண் பயிற்சி

பக்கவாட்டு கண் பயிற்சி

கண் தசைகளை ரிலாக்ஸ் செய்து களைப்பினால் கண்களில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது.

செய்யும் முறை

நேராக நிமிர்ந்து உட்கார்ந்தோ அல்லது நில்லுங்கள்

தலையை அசைக்காமல் உங்கள் பக்கவாட்டில் உள்ள பொருட்களை பாருங்கள்.

இப்படி வலது மற்றும் இடது புறமாக பார்த்து ஒரு பொருளின் மீது கவனம் செலுத்துங்கள்.

இபபடி 5 தடவை அந்த பக்கம் இந்த பக்கமாக கருவிழியை ஓட விடுங்கள்.

3 தடவை திரும்பவும் செய்யவும்

கண் மசாஜ்

கண் மசாஜ்

இந்த மசாஜ் கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் அழுத்தத்தை போக்குகிறது.

செய்யும் முறை

நேராக உட்கார்ந்து உங்கள் தோள்பட்டையை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்

இப்பொழுது தலையை பின்னால் சாய்த்து கண்களை மூடுங்கள்

கண் இமைகள் மீது உங்கள் ஆள்காட்டி மற்றும் நடுவிரலை வைத்து மசாஜ் செய்யுங்கள்.

வலது கை விரல்களை கடிகார எதிர்திசையிலும், இடது கை விரல்களை கடிகார திசையிலும் சுழற்சி மசாஜ் செய்யவும்.

10 தடவை செய்து வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்

இமேஜ் பயிற்சி

இமேஜ் பயிற்சி

உங்களுக்கு இந்த இமேஜ் பார்ப்பதற்கு தலைச்சுற்றலை ஏற்படுத்துவது போன்று இருக்கலாம். ஆனால் இது உங்கள் கண் தசைகளை ரிலாக்ஸ் செய்ய பயன்படுகிறது.

செய்யும் முறை

படத்தில் காட்டியுள்ள படத்தை பாருங்கள். பார்பதற்கு 8 போன்று இருக்கும்.

உங்கள் தலையை அசைக்காமல் படத்தில் காட்டியுள்ள அம்புக் குறி வழியில் உங்கள் கண்களை சுற்றுங்கள்.

இதை 5 தடவை செய்யும் போது உங்க சோர்வு குறையும்

கண் சிமிட்டுதல்

கண் சிமிட்டுதல்

இது ஒரு எளிதான பயிற்சி முறை. கண் சிமிட்டல் இயற்கையான விஷயம். ஆனால் நாட்கணக்கா கணினி மற்றும் மொபைல் முன்னாடி உட்கார்ந்து இருந்தால் நாம் சிமிட்டுவதையே மறந்து விடுவோம். எனவே இந்த சிமிட்டல் பயிற்சி கண் தசைகளை ரிலாக்ஸ் செய்து கவனத்தை கொடுக்கும்.

செய்யும் முறை

ஒரு நிமிடத்திற்கு 15 முறை மெதுவாக கண்களை சிமிட்ட வேண்டும்.

MOST READ: வைட்டமின ஈ குறைஞ்சா என்ன ஆபத்து வரும்னு தெரியுமா?... மொதல்ல இத படிங்க...

20/20 /20 விதிகள்

20/20 /20 விதிகள்

நாள் முழுவதும் கணினி முன்னாலேயே வேலை செய்பவர்கள் இந்த பயிற்சியை மேற்கொள்வது நல்லது. ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஓய்வு எடுத்து 20 விநாடிகள் ஏதேனும் ஒரு பொருளை மட்டுமே பார்க்க வேண்டும். இது கண்களுக்கு ஓய்வு கொடுப்பதோடு மூளையையும் ரிலாக்ஸ் செய்கிறது.

மேற்கண்ட பயிற்சிகள் உங்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க. பலன் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Best exercises for tired eyes

Vision or the process of seeing make up for 50 per cent of your brain's functionality. Having healthy eyesight is guilelessly important and it is asserted that a good vision can improve the performance of the brain by 50 per cent as well.
Desktop Bottom Promotion