Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
மனஅழுத்தத்தால் அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவை சீராக்க சில டிப்ஸ்!
மனஅழுத்தமானது நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்று எத்தனை பேருக்கு தெரியும்? நாள்பட்ட மனஅழுத்தமானது, சுவாச கோளாறுகளை மேலும் பாதிக்க செய்திடும்.
மனஅழுத்தம் என்பது மனதளவில் மட்டுமல்ல உடலளவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. நாள்பட்ட மனஅழுத்தமானது, உடல் ஆரோக்கியத்தை பாதிக்க செய்யும் என்பது அனைவரும் அறிந்தது தான். இத்தகைய மனஅழுத்தமானது நீரிழிவு நோயாளிகளுக்கு மேலும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்று எத்தனை பேருக்கு தெரியும்? ஆம், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய மனஅழுத்தமானது, இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவக்கூடிய இன்சுலின் எனும் ஹார்மோனை சுரக்க விடாமல் தடுத்துவிடும்.

அதுமட்டுமல்லாது, நாள்பட்ட மனஅழுத்தமானது, சுவாச கோளாறுகளை மேலும் பாதிக்க செய்திடும். நாவல் கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட் 19, முதன்மையாக தாக்குவது சுவாச மண்டலத்தை தான். ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்னவென்றால், நீரிழிவு நோய் மற்றும் பிற நாள்பட்ட உடல்நல கோளாறு உள்ளவர்கள் தான் கொரோனாவால் அதிகப்படியாக பாதிக்கப்படுவதாகவும், உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
கொரோன வைரஸ் குறித்த கவலை, ஊரடங்கு மற்றும் வாழ்வின் பொதுவான இடையூறுகள் போன்றவை தற்போதைய மனஅழுத்தத்திற்கான காரணங்களையும், அளவுகளையும் அதிகரித்துக் கொண்டே போகலாம்.

ஆய்வு
ஆய்வுகள் பரிந்துரைப்பது என்னவென்றால், மனஅழுத்தமானது இரத்த நாளங்களில் இரத்த சர்க்கரையை உருவாக்கக்கூடும் என்றும், அதனால் மோசமான ஆரோக்கிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பது தான்.
கோவிட்-19 தொற்றுநோயால், இடையூறுகள், அதிகரித்த மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவை நீரிழிவு நோயாளிகளிடையே இரத்தத்தில் சர்க்கரை அளவை 20 சதவீதம் உயர்த்தியுள்ளன. நீரிழிவு பராமரிப்பு மற்றும் நிர்வாகத்திற்கான முழு அடுக்கு டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பான பீட்டோவின் அறிக்கையின்படி. இந்தியா முழுவதும் சுமார் 8,200 நீரிழிவு நோயாளிகளிடமிருந்து முடிவுகள் பெறப்பட்டன.

மன அழுத்தத்தைக் குறைத்து, இரத்த சர்க்கரை அளவை சீராக்கும் வழிகள்
உயர் இரத்த சர்க்கரை அளவு மனச்சோர்வு முதல் இதய நோய் வரை பல அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மற்றும் பிற ஆரோக்கியமான பழக்கங்களை கடைப்பிடிப்பது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் நீரிழிவு காரணமாக ஏற்படும் சிக்கல்களைத் தடுக்கவும் உதவிடும். நீரிழிவு நோயாளிகள் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும், இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கவும் செய்யக்கூடிய 5 எளிய விஷயங்களை இப்போது பார்க்கலாம்...

உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவதோடு, பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. ஏரோபிக் உடற்பயிற்சியை தவறாமல் செய்வதால் ஒட்டுமொத்த பதற்றத்தை குறைத்து, மனநிலையை உயர்த்தி, உறுதிப்படுத்துவதோடு, தூக்கம் மற்றும் சுயமரியாதையையும் மேம்படுத்துகிறது என சில ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. அமெரிக்காவின் கவலை மற்றும் மனச்சோர்வு சங்கத்தின் கூற்றுப்படி, வெறும் ஐந்து நிமிட ஏரோபிக் உடற்பயிற்சியைச் செய்வது கவலைகளை விரட்டிட உதவிடும். அனைத்து விதமான உடற்பயிற்சிகளுமே உடலுக்கு நன்மை பயக்கக் கூடியவை தான்.

தியானம்
மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், மனநலத்தை மேம்படுத்தி, சீராக பராமரிப்பதற்கும் யோகா, தியானம், ஆழ்ந்த சுவாச பயிற்சிகள் போன்ற மன-உடல் செயல்பாடுகளைப் பயிற்சி செய்யுங்கள். இது மனஅழுத்தத்தை குறைக்க நிச்சயம் உதவிடும்.

சீரான உணவு பழக்கம்
ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு பழக்கம் என்பது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்க உதவும். மேலும் நீரிழிவு நோயையும் தலைகீழாக மாற்ற உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கு வண்ணமயமான பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் நார்ச்சத்து நிறைந்த தானியங்கள், உயர்தர புரத மூலங்கள் (அதாவது, முட்டை, பீன்ஸ், குறைந்த கொழுப்புள்ள பால்), மீன், நட்ஸ்களிலிருக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆலிவ் எண்ணெய், ஆளி விதைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கிளைசீமிக் சுமையை குறைக்கவும், உணவின் தரத்தை மேம்படுத்தவும் நீரிழிவு நோயாளிகள் செய்யக்கூடிய சிறந்த வழிகளில் ஒன்று, ஹெல்ப் கெய்டின் படி, மத்திய தரைக்கடல் டயட் அல்லது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் டயட்டைப் பின்பற்றுவது தான். அதோடு சிக்கலான கார்ப்ஸ், முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளால் நிறைந்த ஆரோக்கியமான உணவுகள், மூளையில் செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கவும், இரத்த அழுத்தத்தை உறுதிப்படுத்தவும் செய்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

மூலிகை மற்றும் மசாலாப் பொருள்கள்
லாவெண்டர், பேஷன்ஃப்ளவர், அஸ்வகந்தா, துளசி, இஞ்சி, மஞ்சள், பூண்டு போன்ற சில மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் எதிர்த்துப் போராடுவதோடு மட்டுமல்லாமல் நீரிழிவு நிர்வாகத்திற்கும் உதவிடக் கூடும்.

மருத்துவ உதவியை நாடுவது
மேலே பரிந்துரைக்கப்பட்டுள்ள உதவிக்குறிப்புகள் உதவியாக இல்லை மற்றும் உங்களது மன அழுத்தம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது எனும் பட்சத்திலோ, சாதாரண உறவுகள் அல்லது செயல்பாடுகளில் உங்களால் செயல்பட முடியாமல் போனாலோ, உடனடியாக உங்களது மருத்துவர் அல்லது உட்சுரப்பியல் நிபுணரிடம் பேசுங்கள். உங்கள் மருத்துவர் அல்லது உட்சுரப்பியல் நிபுணர், சிறந்த மனநல நிபுணர்களின் உதவியுடன் அதிக மன அழுத்தத்தை சமாளிக்க முடியும்.

முடிவு
இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின் முக்கிய அம்சம் என்னவென்றால், நீரிழிவு நோய் சிகிச்சையில் மன அழுத்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உங்களுக்கு புரிய வைப்பதற்காக தான். என்ன தான் படித்து தெரிந்து கொண்டாலும், மன அழுத்தத்தை கையாளவும், உயர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் நிறைய விஷயங்களை அன்றாடம் தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications











