For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோய் இருப்பவர்கள் இளநீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன தெரியுமா?

பல நன்மைகளை வழங்கும் இளநீரை சர்க்கரை நோய் உள்ளவர்கள் குடிக்கலாமா? கூடாதா? என்பது விவாதத்திற்கு உரிய ஒரு கேள்வியாகும்.

|

இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் கலப்படமற்ற தூய்மையான பொருட்களில் ஒன்று இளநீர் ஆகும். எண்ணற்ற நன்மைகளை வழங்கும் இளநீர் இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டதாகும். குறிப்பாக எடை குறைப்பிற்கும், சுறுசுறுப்புக்கும் இளநீர் மிகவும் முக்கியமானதாகும். இனிப்பான சுவை கொண்ட இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்கிறது, கலோரிகள் குறைவாக இருப்பதால் இது எடை குறைப்பிற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

Is Drinking Coconut Water Safe For Diabetics?

பல நன்மைகளை வழங்கும் இளநீரை சர்க்கரை நோய் உள்ளவர்கள் குடிக்கலாமா? கூடாதா? என்பது விவாதத்திற்கு உரிய ஒரு கேள்வியாகும். ஏனெனில் இனிப்பு சுவை கொண்ட இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது, அதேசமயம் கலோரிகள் குறைவாக இருப்பதால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவும் என்று கூறப்படுகிறது. இதில் எது உண்மை என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் நீர்

தேங்காய் நீர்

தேங்காய் நீர் எப்பொழுதும் ப்ரெஸ்ஸான பானமாக இருக்கிறது, எந்தவொரு செயற்கை பொருளும், செயற்கை இனிப்புகளும் சேர்க்கப்படாத இது அனைவருக்கும் பொதுவான ஒரு பானமாகும். இது கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், மாங்கனீசு, இரும்பு, தாமிரம் மற்றும் அடிப்படை அமினோ அமிலங்களுடன் பொட்டாசியம் மற்றும் சோடியம் ஆகிய இரண்டு அத்தியாவசிய உப்புகள் உள்ளது. தேங்காய் நீரில் பிரக்டோஸ் (15%), குளுக்கோஸ் (50%) மற்றும் சுக்ரோஸ் (35%) போன்ற இயற்கை சர்க்கரைகளும் உள்ளன. சர்க்கரை நோயாளிகள் தேங்காய் நீர் குடிக்கலாமா என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

 சர்க்கரை நோய்க்கு தேங்காய் நீர் பாதுகாப்பானதா?

சர்க்கரை நோய்க்கு தேங்காய் நீர் பாதுகாப்பானதா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாராளமாக இளநீர் குடிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். சர்க்கரை நோய்க்கான ஆய்வில் இளநீர் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான உணவா என்னும் சோதனையை வெற்றிகரமாக 2015ல் கடந்தது. சர்க்கரை உள்ளவர்கள் மட்டுமல்ல சர்க்கரை நோய் இல்லாதவர்கள் கூட தாங்கள் தினமும் குடிக்கும் இளநீரின் அளவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். ஏனெனில், ஆரோக்கியமான பானமாக இருந்தாலும் தேங்காய் நீரில் பிரக்டோஸ் உள்ளது, இதன் அளவு குறைவாக இருந்தாலும் (சுமார் 15%), பிரக்டோஸ் உங்கள் இரத்த சர்க்கரை அளவில் தலையிடக்கூடும்.

 எவ்வளவு குடிக்க வேண்டும்?

எவ்வளவு குடிக்க வேண்டும்?

ஒரு நாளைக்கு சராசரியாக 8 அவுன்ஸ் அதாவது இரண்டு முறை 250மிலி வரை தேங்காய் நீர் குடிக்கலாம். இந்த அளவு அதிகரிக்கும் போது அது உங்கள் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக இளநீரை வேறு பொருட்களுடன் சேர்க்காமல் அதன் இயற்கை வடிவத்திலேயே குடிப்பதுதான் நல்லது. சர்க்கரை நோய்க்கு ஏன் இளநீர் நல்லது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

MOST READ:இந்த விரல் சின்னதாக இருக்கும் ஆண்களின் பாலியல் வாழக்கை செம்மையா இருக்குமாம் தெரியுமா?

 ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

முன்னரே கூறியது போல இளநீரில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும், தாதுக்களும் உள்ளது. இந்த சுவையான பானத்தின் ஒவ்வொரு கோப்பையிலும் 5.8 மி.கி வைட்டமின் சி, 0.1 மி.கி ரைபோஃப்ளேவின், 57.6 மி.கி கால்சியம், 60 மி.கி மெக்னீசியம், 600 மி.கி பொட்டாசியம், 252 மி.கி சோடியம் மற்றும் 0.3 மி.கி மாங்கனீசு உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள், குறிப்பாக சோடியம் மற்றும் பொட்டாசியம், இரத்தத்தில் உள்ள சர்க்கரை ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்த உதவுகின்றது.

அதிக பைபர் மற்றும் குறைவான கார்போஹைட்ரேட்டுகள்

அதிக பைபர் மற்றும் குறைவான கார்போஹைட்ரேட்டுகள்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் கார்போஹைட்ரேட் அளவில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உண்மையில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ள மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ள உணவுகளைதான் எடுத்துக்கொள்ள வேண்டும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த கார்போஹைட்ரேட்டுகள் இயற்கையான சர்க்கரைகளில் விதிவிலக்காக அதிகமாக இருப்பது இரத்த குளுக்கோஸ் அளவை விரைவாக அதிகரிக்கக்கூடும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். தேங்காய் நீர், நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் (240 கிராம் தேங்காய் நீருக்கு 2.6 கிராம்), இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

 இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் மோசமான இரத்த ஓட்டத்தால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சனையின் காரணமாக, அவர்கள் பெரும்பாலும் கால்களில் உணர்வின்மை, மங்கலான பார்வை, சிறுநீரக செயலிழப்பு போன்ற அசௌகரியங்களுக்கு ஆளாகிறார்கள். தினமும் இளநீர் குடிப்பது அவர்களின் இந்த பிரச்சினைகளை விரைவில் குணப்படுத்துகிறது. இரத்த நாளங்களை விரிவடையச் செய்வதன் மூலம் இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி எனப்படும் நீரிழிவு கோளாறுகளை குணப்படுத்தும் திறனும் இதற்கு உள்ளது.

எடை பராமரிப்பு

எடை பராமரிப்பு

ஒழுங்கற்ற எடை அதிகரிப்பு என்பது சர்க்கரை நோயாளிகள் எதிர்கொள்ளும் மற்றொரு முக்கிய பிரச்சினையாகும். தேவையில்லாத நேரத்தில் ஏற்படும் பசியை போக்க இளநீர் குடிப்பது உதவும். இது அத்தியாவசிய உப்புகள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களின் சரியான கலவையுடன் இருப்பதுடன் கொழுப்பும் இதில் மிகவும் குறைவாகவே இருக்கிறது. . இது ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த மூலமாகும். சர்க்கரை அளவையும், உடல் எடையையும் சீராக பராமரிக்க நீரிழிவு நோயில் இவை இரண்டும் அவசியம்.

MOST READ:மாதுளம் பழம் சாப்பிடறதுல இவ்வளவு ரிஸ்க் இருப்பது தெரியுமா உங்களுக்கு?

 வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது

தேங்காய் நீர் வளர்சிதை மாற்றத்தைத் தூண்ட உதவுகிறது, இது உடலில் கொழுப்பை எரிக்கும் அளவையும் மற்றும் சர்க்கரையை எரியும் செயல்முறையை மேம்படுத்துகிறது. நம் உடலுக்குள் தேங்காய் நீரின் இந்த செயல்பாடு நோயாளிகளுக்கு அதிக ஆற்றலையும், வீரியத்தையும் அளிக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Drinking Coconut Water Safe For Diabetics?

Read to know is drinking coconut water safe for diabetics.
Story first published: Monday, November 11, 2019, 14:05 [IST]
Desktop Bottom Promotion