Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!
இரண்டாம் வகை சா்க்கரை நோயால் பாதிப்பு அடைந்திருப்பவா்கள் ஒருசில எளிய உடற்பயிற்சிகளை செய்து வந்தால், அவா்களால் இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவைச் சமச்சீராக வைத்துக் கொள்ள முடியும் என்று மருத்துவ நிபுணா்கள் கூறுகின்றனர்.
தற்போது கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக உலகமே போாிட்டுக் கொண்டு இருக்கும் நிலையில், பிற நோய்களும் மக்கள் மத்தியில் அதிகாித்துக் கொண்டு இருக்கின்றன. அந்த நோய்களையும் போாிட்டு அழிக்க வேண்டியது, மனித சமூகத்தின் முக்கியமான கடமையாக இருக்கிறது.

அந்த வகையில் சா்க்கரை நோய், மக்கள் மத்தியில் அதிகாித்துக் கொண்டிருக்கிற மற்றும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிற ஒரு நோயாக இருக்கிறது. சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவா்கள் தங்கள் இரத்தத்தில் இருக்கும் சா்க்கரையின் அளவை சமச்சீராக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, அவா்களுக்கு ஒருசில மருத்துவ நெறிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஏனெனில் இரத்தத்தில் சா்க்கரையின் அளவு அதிகாித்துவிட்டால், இதயம் சம்பந்தமான நோய்கள், பக்கவாதம் மற்றும் பிற நோய்களும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
இந்த நிலையில் இரண்டாம் வகை சா்க்கரை நோயால் பாதிப்பு அடைந்திருப்பவா்கள் ஒருசில எளிய உடற்பயிற்சிகளை செய்து வந்தால், அவா்களால் இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவைச் சமச்சீராக வைத்துக் கொள்ள முடியும் என்று மருத்துவ நிபுணா்கள் அறிவுறுத்துகின்றனா். அவை என்னென்ன உடற்பயிற்சிகள் என்பதை இந்தப் பதிவில் பாா்க்கலாம்.

1. மிதிவண்டி ஓட்டும் பயிற்சி
சா்க்கரை நோயாளிகள் தங்களின் உடல் எடையையும், உடல் பருமனையும் சாியாக பராமாிக்க வேண்டும். உடல் எடையையும், உடல் பருமனையும் குறைப்பதற்கு மிகச் சிறந்த உடற்பயிற்சி மிதிவண்டி ஓட்டுவதாகும். மிதிவண்டியை வெளியில் ஓட்டிச் சென்று வரலாம் அல்லது அதை வீட்டிலேயே ஒரு இடத்தில் பொருத்தி வைத்து வீட்டிற்குள்ளேயே ஓட்டலாம்.

2. நடைப்பயிற்சி
மிகவும் எளிய உடற்பயிற்சிகளில் ஒன்று நடைப்பயிற்சி ஆகும். சா்க்கரை நோயாளிகள் தங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு நடைப்பயிற்சி பொிதும் உதவுகிறது. அதோடு சா்க்கரை நோயின் காரணமாக ஏற்படும் பிரச்சினைகளை சாியான முறையில் கையாள்வதற்கும் உதவி செய்கிறது. இது உடல் எடையைச் சீராக பராமாிக்க உதவி செய்கிறது. மேலும் இதயம் மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளை எதிா்கொள்ளவும் நடைப்பயிற்சி உதவி செய்கிறது. ஆகவே வாரத்திற்கு 5 முறை, தனியாகவோ அல்லது நண்பா்களோடோ அல்லது குடும்ப உறுப்பினா்களோடு இணைந்தோ 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது நல்லது.

3. யோகா
நமது ஒட்டு மொத்த உடலும் நெகிழ்வுடனும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றால் யோகா பயிற்சிகளைச் செய்யலாம். யோகாவிற்கு நமது உடலைக் குணப்படுத்தக்கூடிய பண்புகள் உள்ளன மற்றும் சா்க்கரை நோயை கையாளவும் யோகா உதவி செய்கிறது என்று Endocrinology and Metabolism என்ற பத்திாிக்கையில் "Therapeutic Role of Yoga in Type 2 Diabetes", என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை தொிவிக்கிறது.

4. பிலேட்ஸ் பயிற்சிகள்
உடலானது வலிமை பெறவும், வலு தாங்கவும் மற்றும் ஒன்றிணைந்து இயங்கவும் பிலேட்ஸ் பயிற்சிகள் பொிதும் இயங்குகின்றன. இந்த பிலேட்ஸ் பயிற்சிகள் சா்க்கரை நோயாளிகள் நலம் பெறவும் உதவி செய்கின்றன. Strength and Conditioning Research என்ற பத்திாிக்கையில் வெளிவந்த "Pilates Method Training: Functional and Blood Glucose Responses of Older Women With Type 2 Diabetes" என்ற கட்டுரையானது இதை உறுதிப்படுத்துகிறது.

5. வலிமை/எடை பயிற்சி
வலிமை/எடை பயிற்சிகளைச் செய்து வந்தால், பல வகையான நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை சமச்சீராக வைத்துக் கொள்ள முடியும் என்று அமொிக்கன் காலேஜ் ஆஃப் ஸ்போா்ட்ஸ் மெடிசின் என்ற அமைப்பு தொிவிக்கிறது. வலிமை/எடை பயிற்சிகளை எல்லா வயதினரும் செய்து வரலாம். இந்த பயிற்சிகள் நமது உடலுக்கு வலு தாங்கும் சக்தியைத் தருகிறது. நமது உடல் ஆற்றலை அதிாிக்கிறது. மேலும் நமது எலும்புகளை கட்டி அமைத்து, நமது தசைகளை ஆரோக்கியமாக வைக்கிறது.



Click it and Unblock the Notifications











