Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சர்க்கரை நோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க...
பொதுவாக டைப்-2 சர்க்கரை நோயானது முதிர் வயதில் வரக்கூடியது. உடலில் சர்க்கரையை சரியாக ஜீரணிக்க முடியாத போது ஏற்படுவது தான் டைப்-2 சர்க்கரை நோய்.
சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளுள் ஒன்றாக இந்தியா உள்ளது. பொதுவாக டைப்-2 சர்க்கரை நோயானது முதிர் வயதில் வரக்கூடியது. உடலில் சர்க்கரையை சரியாக ஜீரணிக்க முடியாத போது ஏற்படுவது தான் டைப்-2 சர்க்கரை நோய். அதிகப்படியான இரத்த சர்க்கரை சிறுநீரகம், நரம்பு, கண்கள் போன்றவற்றை சேதப்படுத்துவதோடு, இதய நோய் மற்றும் பக்கவாதத்தையும் உண்டாக்கும்.

ஆரோக்கியமான டயட், உடற்பயிற்சி மற்றும் மருந்து அல்லது இன்சுலின் போன்றவை டைப்-2 சர்க்கரை நோயை கட்டுப்படுத்த அல்லது தடுக்க உதவக்கூடியவை. புரோட்டீன், ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புக்களை சமநிலையில் எடுப்பதன் மூலம் நீண்ட நேரம் இரத்த சர்க்கரை அளவு அதிகமாகாமல் தடுக்கப்படுவதோடு, அதிகப்படியான உணவு உண்தையும் தடுக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நீங்கள் டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தைத் தடுக்க விரும்பினால், உண்ணும் உணவில் பழங்கள், முழு தானியங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆய்வு
ஒரு பெரிய ஆய்வானது பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் உள்ள உணவுகள் டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தை 50 வதவீதம் வரை குறைப்பதாக தெரிவிக்கிறது. 22,000-க்கும் அதிகமானவர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகளின் உயர் இரத்த செறிவுகளுக்கு இடையேயான தொடர்பு டைப்-1 சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகளின் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைப்பதாக கருதப்படுகின்றன.

மற்றொரு ஆய்வு
மற்றொரு ஆய்வு முழு தானிய உணவுகள் டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தை 29 சதவீதம் குறைப்பதாக கூறுகிறது. இந்த கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும் சில உணவுகளின் பட்டியலை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை அன்றாட உணவில் சேர்த்து சர்க்கரை நோயில் இருந்து விலகி இருங்கள்.

கேரட்
கரோட்டீனாய்டுகள் அதிகம் நிறைந்த காய்கறிகளுள் கேரட்டும் ஒன்றாகும். இது டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைப்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் குறைந்த க்ளைசீமிக் இன்டெக்ஸ் நிறைந்த காய்கறிகளான கேரட் போன்றவற்றை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. கேரட்டில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது மலச்சிக்கலைக் குறைக்கவும், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், எடையை குறைக்கவும் உதவும்.

தக்காளி
தக்காளியில் ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டீன், லுடீன் மற்றும் லைகோபைன் போன்ற முக்கிய கரோட்டினாய்டுகள் உள்ளன. இவை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியவை. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், டைப்-2 சர்க்கரை நோயாளிகளுக்கு தினமும் 200 கிராம் தக்காளி சாப்பிட கொடுக்கப்பட்டதில் இரத்த அழுத்தம் குறைந்தது கண்டறியப்பட்டுள்ளது.

ஓட்ஸ்
நார்ச்சத்து அதிகம் நிறைந்த ஓட்ஸ் போன்ற உணவுகளை உட்கொள்வது, உடலில் உள்ள சர்க்கரையின் முறிவைக் குறைக்கவும், இரத்த சர்க்கரையை சீராக்கவும் உதவும். அதோடு ஓட்ஸ் சாப்பிடுவது இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கும்.

பசலைக்கீரை
பச்சை இலைக் காய்கறிகளான பசலைக்கீரை, கேல், லெட்யூஸ் போன்றவற்றில் நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ போன்றவை வளமான அளவில் நிறைந்துள்ளது. அதோடு இவற்றில் கலோரிகளும் குறைவு என்பதால், உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.

ப்ளூபெர்ரி பழங்கள்
ப்ளூபெர்ரி பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோயின் அபாயம் குறைவாக இருப்பது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. திராட்சை, ஆப்பிள், பேரிக்காய், பீச், ப்ளம்ஸ், ஆப்ரிகாட் போன்றவற்றையும் வேண்டுமானால் சாப்பிடலாம். இவற்றில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி, பொட்டாசியம், எண்ணிடலங்கா ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளதால், அவை சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும்.



Click it and Unblock the Notifications
