For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோயாளிகள் இப்ப இந்த பழங்களை சாப்பிடுவது ரொம்பவே நல்லதாம்.. அது என்னென்ன?

மழைக்காலத்தில் குறிப்பிட்ட பழங்கள் அதிகம் கிடைக்கும். என்ன தான் பழங்கள் ஆரோக்கியமானவையாக இருந்தாலும், அவற்றில் உள்ள கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவை கொண்டு தான், அந்த பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா கூடாதா என்பதே தெரியும்

|

மழைக்காலத்தில் நல்ல மேகமூட்டமான வானம், ஜில்லென்று காற்றுடன், புத்துணர்ச்சியூட்டு மழை பெய்யும். இத்தகைய காலநிலை அனைவருக்குமே பிடிக்கும். வருடத்தில் நான்கு வகையான பருவங்கள் உள்ளன. ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமான பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகளவில் கிடைக்கும். அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை கட்டாயம் சாப்பிடுவதன் மூலம், அந்த பருவத்தில் தாக்கும் நோய்த்தொற்றுக்களின் அபாயத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

அந்த வகையில் மழைக்காலத்தில் குறிப்பிட்ட பழங்கள் அதிகம் கிடைக்கும். ஆனால் அனைத்து பழங்களையுமே சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட்டுவிட முடியாது. என்ன தான் பழங்கள் ஆரோக்கியமானவையாக இருந்தாலும், அவற்றில் உள்ள கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவை கொண்டு தான், அந்த பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா கூடாதா என்பதே தெரியும். ஏனெனில் சர்க்கரை நோயாளிகள் அதிக கிளைசீமிக் இன்டெக்ஸ் கொண்ட பழங்களை சாப்பிடும் போது, இரத்த சர்க்கரை அளவு சட்டென்று அதிகரித்து ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆகவே சர்க்கரை நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள பழங்களை சாப்பிட வேண்டும்.

MOST READ: உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிளைசீமிக் இன்டெக்ஸ் என்றால் என்ன?

கிளைசீமிக் இன்டெக்ஸ் என்றால் என்ன?

ஒரு உணவின் கிளைசீமிக் இன்டெக்ஸ் என்பது அது உடலில் எவ்வளவு வேகமாக உறிஞ்சப்படுகிறது என்பதைக் குறிப்பிடும் அளவாகும். இந்த GI 1 முதல் 100 வரை அளவிடப்படுகிறது. இதில் 70-க்கும் அதிகமான GI கொண்ட உணவுகள் இரத்த சர்க்கரை அளவை அதிவேகமாக உயர்த்தும் உணவுகளாகும். 56-69 வரையிலான GI கொண்ட உணவுகள் மிதமாக இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும். 55-க்கும் குறைவான GI உணவுகள் இரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக அதிகரிக்கும். அதிர்ஷ்டவசமாக, மழைக்காலங்களில் குறைவான GI உள்ள பழங்கள் கிடைக்கின்றன. மேலும் இந்த பழங்கள் ஒவ்வொன்றிலும் 55-க்கும் குறைவான GI உள்ளன. ஆகவே இந்த வகையான பழங்கள் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்றது. இப்போது மழைக்காலங்களில் கிடைக்கும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற பழங்களைக் காண்போம். இந்த பழங்களை அச்சமின்றி சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.

பேரிக்காய்

பேரிக்காய்

நார்ச்சத்து அதிகம் நிறைந்த பேரிக்காய், உடல் எடையைப் பராமரிக்க உதவுகிறது. ஆகவே இது மறைமுகைமாக சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுகிறது. பொதுவாக உடல் பருமன் சர்க்கரை நோயின் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகளுள் ஒன்றாகும். அதோடு பேரிக்காயில் GI அளவானது 40-க்கும் குறைவாக உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற சிறந்த பழங்களுள் ஒன்றாகும்.

பீச்

பீச்

சதைப்பற்றுள்ள பீச் பழம் தனித்துவமான சுவையைக் கொண்டது. இத்தகைய பீச் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்று கூறப்படுகிறது. ஏனெனில் இதில் உள்ள GI அளவு 42 ஆகும். அதோடு இதில் கலோரிகள் குறைவு மற்றும் சீரான எடையை பராமரிக்க சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும்.

ப்ளம்ஸ்

ப்ளம்ஸ்

மழைக்காலங்களில் கிடைக்கும் மற்றும் பெரும்பாலானோர் விரும்பும் பழம் தான் ப்ளம்ஸ். இது உயர் இரத்த சர்க்கரை கொண்ட சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஆரோக்கியமான மற்றும் சாப்பிட ஏற்ற பழமாக கூறப்படுகிறது. நற்பதமான ப்ளம்ஸ் பழத்தில் உள்ள GI அளவு 40 மற்றும் இதில் நன்மை விளைவிக்கும் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது.

ஆப்பிள்

ஆப்பிள்

வருடத்தின் அனைத்து நாட்களும் கிடைக்கும் பழம் தான் ஆப்பிள். ஆப்பிள் இயற்கையாகவே இனிப்புச் சுவையைக் கொண்டது மற்றும் இது சர்க்கரை நோயாளிகளின் இனிப்பு உணவுகளின் மீதான நாட்டத்தை நிரப்புகிறது. இதில் உள்ள GI அளவு 39. ஆகவே இது சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி சாப்பிட ஏற்ற அற்புதமான பழம்.

செர்ரி

செர்ரி

கோடைக்காலம் மற்றும் மழைக்காலங்களில் கிடைக்கும் பழம் தான் செர்ரி. இந்த சிறிய பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது மற்றும் சாப்பிட பாதுகாப்பானதும் கூட. ஏனெனில் இதில் பொட்டாசியம், ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகமாக இருப்பதோடு, GI அளவு மிகவும் குறைவாக 20 தான் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diet For Diabetics: Monsoon Fruits That May Regulate Blood Sugar

Monsoon Fruits For Diabetics: Diabetics must carefully select fruits to be included in their daily diet, from the low end of the Glycaemic Index spectrum.
Desktop Bottom Promotion