அதிக உடல் எடை மற்றும் சர்க்கரை நோயால் அவதிப்படுபவரா? அப்ப இத செய்ய மறந்துடாதீங்க…

நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிறு வயதிலேயே நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் கூட அதிகரித்துவிட்டனர். உடலுழைப்பின்மை, மோசமான உணவுப்பழக்கம் போன்றவற்றை காரணங்களாக கூறினாலும், பரம்பரை நோயாகவும் இது இருப்பதே கடினமான ஒன்று.

Can Diabetes Be Controlled By Reducing Weight? 3 Easy Tips For Fat Loss

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. ஏனென்றால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் எடை அதிகரிக்கும் போது, சில மோசமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. அதாவது, நீரிழிவுடன் கூடிய அதிகப்படியான எடை, மாரடைப்பு, கொழுப்பு நிறைந்த கல்லீரல், சிறுநீரக செயலிழப்பு, இதய செயலிழப்பு மற்றும் நீரிழிவு ரெட்டினோபதி போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஆய்வுகள் கூறுவது என்னவென்றால், டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்களது உடல் எடையைக் குறைப்பதன் மூலம், நீரிழிவின் பாதிப்பையும் குறைக்கின்றனர் என்பது தான்.

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசன் கூறுவதன் அடிப்படையில், சரியான உடல் எடையை பராமரிப்பதன் மூலம், உடலில் நல்ல கொழுப்பு சத்தின் அளவு, ட்ரைகிளிசரைடுகள், இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு ஆகியவை சரியான அளவு வைத்திருக்க உதவுகிறது. சீரான உடல் எடையை பராமரிப்பதன் மூலம், 75% நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம். நீரிழிவு நோய் ஒரு கொடிய நோயாக இருந்தாலும், உடல் எடையை குறைப்பதன் மூலம் ஒருவர் தங்களது வாழ்நாளை கூட்டிக் கொள்ள முடியும் என்பதே உண்மை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் எடையை குறைக்க உதவும் பாதுகாப்பான வழிகள்:

உடல் எடையை குறைக்க உதவும் பாதுகாப்பான வழிகள்:

நீரிழிவு நோயாளிகளை பொறுத்தவரையில், உடல் எடை குறைப்பு என்பது மிகவும் கடினமான ஒன்று தான். ஏனென்றால், அவர்கள் உட்கொள்ளும் உணவுகளின் வகையே குறைவு. எனவே தான், நீரிழிவு நோயாளிகள் முறையாகவும், பாதுகாப்பாகவும் உடல் எடையை குறைப்பது கடினம். இருந்தாலும், சில விஷயங்களை மட்டும் மனதில் வைத்துக் கொண்டால் உடல் எடையை முறையாக பராமரிக்கலாம்.

அதிகப்படியான எடையை குறைக்க உதவும் வீட்டு வைத்திய முறைகள்:

அதிகப்படியான எடையை குறைக்க உதவும் வீட்டு வைத்திய முறைகள்:

கார்போஹைட்ரேட்டை குறைத்திடவும்

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும். எனவே தான், நீரிழிவு நோயாளிகள் கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றனர். அதுமட்டுமல்லாது, கார்போஹைட்ரேட் உடல் எடையையும் அதிகரிக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? எனவே, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் உட்கொள்வதை குறைப்பதன் மூலம், உடல் எடையை மட்டுமல்ல, நீரிழிவையும் கட்டுப்படுத்திட முடியும்.

வல்லுநர்கள் கூறுவதன் அடிப்படையில், நீரிழிவு நோயாளிகள், ஒரு நாளைக்கு தேவையான கலோரிகளில் 45% அதிகமான கார்போஹைட்ரேட்களை எடுத்துக் கொள்ள கூடாது. எனவே, பழங்கள் அதிகமாக சாப்பிட அறிவுறுத்தப்படுகின்றனர். அதனால், சர்க்கரை அளவு அதிகரிக்காது. அது தவிர, காய்கறிகள், தானியங்கள் கூட நார்ச்சத்து நிறைந்தவை தான்.

காலை உணவை தவிர்க்காமல் கலோரிகளை குறைத்திடவும்

காலை உணவை தவிர்க்காமல் கலோரிகளை குறைத்திடவும்

சாதாரணமாக ஒருவர் எடுத்துக் கொள்ளும் கலோரிகளை விட, நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவிலான கலோரிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கலோரிகளை குறைத்திட வேண்டும் என்றவுடன், பெரும்பாலானோர் செய்வது காலை உணவை தவிர்ப்பது. நீரிழிவு நோயாளிகள் இதனை செய்வது என்பது மிகவும் ஆபத்தான செயலாகும். அதனால் தான் மருத்துவர்கள், காலை உணவில் புரதம் நிறைந்த உணவை சேர்க்க சொல்கின்றனர். புரதமானது, கொழுப்பு கரைவதை துரிப்படுத்தக்கூடியது. நினைவில் கொள்ள வேண்டியது, நிறைவுற்ற கொழுப்பை விட, நிறைவுறா கொழுப்பை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

நிறைவுறா கொழுப்பு (Unsaturated fat)

நிறைவுறா கொழுப்பு (Unsaturated fat)

பாதாம், வால்நட், ஆளிவிதை, கனோலா ஆயில், அவகேடோ போன்றவற்றில் நிறைவுறா கொழுப்புகளை பெற முடியும். அதிகமான எண்ணெய் பலகாரங்கள் மற்றும் ஜங்க் புட்ஸ் சாப்பிடுவது நிறைவுற்ற கொழுப்பை அதிகரித்து உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடும். எனவே, அவற்றை தவிர்த்திடுவது நல்லது.

முக்கியமாக உடற்பயிற்சி செய்திடவும்

முக்கியமாக உடற்பயிற்சி செய்திடவும்

உடலில் தேங்கியுள்ள கொழுப்புகள் கரையாத வரை, உங்களது உடல் எடை குறையவே குறையாது. உணவு பழக்கமானது, கொழுப்பு கரைவதை துரிதப்படுத்துமே தவிர, கொழுப்பை கரைத்திட உதவிடாது. எனவே தான, உடற்பயிற்சி செய்வது அவசியம் ஆகிறது. உடற்பயிற்சி ஒன்றே உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்திடும்.

உலக சுகாதார மையம் அறிவுறுத்துவது என்னவென்றால், ஒரு மனிதர் வாரத்திற்கு 300 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்திட வேண்டும் என்பது தான். அதன் அடிப்படையில், ஒவ்வொருவரும் நாளொன்றிற்கு 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டும். இந்த பயிற்சிகளில், நீங்கள் ஏரோபிக்ஸ், வலிமை பயிற்சி, கார்டியோ போன்றவற்றை செய்யலாம். இவற்றில் எதையும் செய்ய முடியாவிட்டால், தினமும் 40 நிமிடங்கள் வேகமாக நடக்கவும். இதுவும் உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, March 6, 2020, 12:40 [IST]
Desktop Bottom Promotion