For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோயாளிகள் தர்பூசணி, கிர்ணி பழம் சாப்பிடலாமா? கூடாதா?

|

வெயிலுக்கு இதமான பழங்களில் முலாம் பழம் என்னும் கிர்ணிப் பழம் மிக முக்கியமான ஒரு பழமாகும். இது ஒரு சுவை மிகுந்த பழம் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரம் பல சிறந்த ஆரோக்கிய நன்மைகளைத் தன்னிடம் கொண்டுள்ள இந்த முலாம் பழம் பற்றி அறிந்துக் கொள்வதற்காகவே இந்த பதிவு. ஆரோக்கியமான சருமம், ஆரோக்கியமான கண்கள், ஆரோக்கியமான நுரையீரல் போன்றவற்றைத் தரும் இந்த பழம், புற்றுநோயைத் தடுக்கும் வலிமைக் கொண்டது.

மேலும் மன அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையும் கொண்டது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க உதவுகிறது, எலும்புப்புரை நோயைத் தடுக்கிறது, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. இந்த தன்மைகள் இந்த பழத்திற்கு இருப்பதற்குக் காரணம், இந்த பழத்தில் உள்ள மிக அதிக அளவு வைட்டமின் மற்றும் கனிம உள்ளிருப்பு ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிர்ணிப் பழம் என்பது என்ன?

கிர்ணிப் பழம் என்பது என்ன?

முலாம் பழம் என்பது மிகவும் பிரபலமான ஒரு பழ வகையாகும். குகுர்பிடசியா குடும்பத்தைச் சேர்ந்த முலாம் பழம் 500 கிராம் முதல் 5 கிலோ வரை வளரும் பழமாகும். முலாம் பழத்தின் தாவர பெயர், குகுமிஸ் மெலோ. இதனை கிர்ணிப் பழம், முள் வெள்ளரி என்று பல பேர்களில் அழைப்பார்கள்.

ஆப்ரிக்கா, ஈரான், இந்தியா போன்ற நாடுகள் இந்த பழத்தின் தாயகமாக இருந்தாலும், கலிபோர்னியா மற்றும் ஐரோப்பா முழுவதும் இந்த பழம் பயிரிடப்பட்டு வருகிறது.

MOST READ: தொழுநோய் யாருக்கெல்லாம் வரும்... என்ன அறிகுறி? முழுசா தெரிஞ்சிக்க இத படிங்க

ஊட்டச்சத்து மதிப்பு

ஊட்டச்சத்து மதிப்பு

முலாம் பழத்தில் பல ஊட்டச்சத்துகள் மிக அதிக அளவில் இருப்பதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருவதாக இந்தப் பழம் உள்ளது. USDA பிரகாரம், இந்தப் பழத்தில் கார்போஹைட்ரெட், புரதம், மற்றும் தண்ணீர் சத்து மிக அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ.

பீட்டா கரோடின், வைட்டமின் பி 1, வைட்டமின் பி 2. வைட்டமின் பி 6, வைட்டமின் பி 9, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே போன்றவை முலாம் பழத்தில் உள்ளன. முலாம் பழத்தில் உள்ள கனிமங்கள், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் ஜின்க் போன்றவை ஆகும் .

கலோரி அளவு

கலோரி அளவு

100 கிராம் முலாம் பழத்தில் 34 கலோரிகள் மட்டுமே உள்ளன. அதனால் எடை இழப்பிற்கான உணவாக இது சிறந்த முறையில் செயல்படுகிறது.

ஆரோக்கிய நன்மைகள்

ஆரோக்கிய நன்மைகள்

வெயில் காலங்களில் உங்கள் உடலை நீர்ச்சத்தோடு வைக்க உதவும் பழங்களில் முலாம் பழம் முக்கிய இடம் பிடிக்கிறது. அதனால் கோடைக்கு ஏற்ற உணவாக இது கருதப்படுகிறது. இந்த பழத்தின் பல்வேறு நன்மைகள் பற்றி கீழே காணலாம்.

கண்பார்வை மேம்படுத்த

கண்பார்வை மேம்படுத்த

ந்யுட்ரியன்ட் ஜர்னல் என்ற பத்திரிகையில் வெளிவந்த ஆய்வுப்படி, ஆரோக்கியமான முறையில் கண்களைப் பாதுகாக்க முலாம் பழத்தில் உள்ள வைட்டமின் சி, சியாக்சன்தின் மற்றும் கார்டினைடு போன்றவை உதவுகின்றன. கண்புரை நோய், படர்ந்த நசிவு மற்றும் போன்ற பாதிப்புகள் குறையும் வாய்ப்பு உள்ளது.

MOST READ: தேனை இப்படி சாப்பிட்டிருக்கீங்களா? சாப்பிடுங்க இத்தனை நோயும் பறந்துடுமாம்...

ஆஸ்துமாவைத் தடுக்க

ஆஸ்துமாவைத் தடுக்க

முலாம் பழம் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோடின் ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. இந்த ஊட்டச்சத்துகள் ஆஸ்துமா அபாயத்தைக் குறைக்க உதவியாக உள்ளன.

புற்றுநோய் எதிர்ப்பு

புற்றுநோய் எதிர்ப்பு

முலாம் பழத்தில் போலேட் சத்து மிக அதிக அளவு உள்ளது. உதாரணத்திற்கு, ஒரு மிதமான அளவு முலாம் பழத்தின் கால் பகுதியில் 25mcg ஆளவு போலேட் சத்து உள்ளது. அமெரிக்கன் ஜர்னல் ஆப் க்ளினிகல் ந்யுட்ரிஷன் நடத்திய முதல் கட்ட ஆய்வுப்படி, குறைந்த அளவு புற்று நோய்க்க அறிகுறிகள் இருக்கும் மனிதர்களைப் பாதுகாக்கும் தன்மை போலேட் சத்துக்கு உள்ளதாக அறியப்படுகிறது.

ஆனால் புற்று நோயின் அதிகரித்த அறிகுறிகள் காணப்படும் பிற்கால நிலைகளில் முலாம் பழம் புற்று நோயாக்கத்தை அதிகரிக்கிறது என்பதும் அறிவுறுத்தப்படுகிறது. முலாம் பழத்தின் புற்று நோய் எதிர்ப்புப் பண்புகள் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள அடுத்த கட்ட ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.

நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

முலாம் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பீட்டா கரோடின் மற்றும் தாவர ஊட்டச்சத்துகள் போன்றவை இருந்து, தீங்கு விளைவிக்கும் கூறுகளை எதிர்த்துப் போராடுகிறது. பெத்சிடா, மேரிலாண்டில் உள்ள தேசிய சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, வைட்டமின் சி சத்து , நோய்க்கு காரணமாக இருக்கும் ப்ரீ ரெடிகேல்களைப் போக்குவதாகக் கூறப்படுகிறது.

ஒரு ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலம் உருவாக்க ஒரு பாதுகாப்பு வளையமாக செயல்படுகிறது என்று போஸ்டனில் உள்ள ஹார்வர்ட் மருத்துவ பள்ளியின் மருத்துவர். ரோட்ரிகோ மோரா கூறுகிறார். மேலும், இரத்த ஓட்டத்தில் காணப்படும் அபாயகரமான பக்டீரியா, கிருமிகள் மற்றும் இதர நச்சுப் பொருட்கள் மற்றும் வெளிப்புறப் பொருட்கள் போன்றவற்றை அழிக்க உதவும் வெள்ளை அணுக்கள் உற்பத்தியை ஊக்குவிக்க உதவுகிறது.

நீர்ச்சத்து குறைபாடு

நீர்ச்சத்து குறைபாடு

முலாம் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், வெயில் காலங்களில் உண்டாகும் நீர்ச்சத்து குறைபாட்டைத் தடுக்கும் ஒரு சிறந்த சிற்றுண்டியாக இருக்கிறது. இதன் காரணமாக, வெயில் காலங்களில் விடுமுறையில் சுற்றுலாச் செல்லும் நேரங்களில் முலாம் பழத்தைக் கொண்டு செல்லலாம். இதோடு வாட்டர்மலனும் நிறைய சேர்த்து சாப்பிடுங்கள். இதைவிடவும் வாட்டர்மெலனில் அதிக அளவு நீர்ச்சத்து இருக்கிறது.

சரும பராமரிப்பு மற்றும் கூந்தல் பராமரிப்பு

சரும பராமரிப்பு மற்றும் கூந்தல் பராமரிப்பு

முலாம் பழத்தில் உணவு பீட்டா கரோடின் உள்ளது. மற்ற உணவுப் பொருட்களைப் போல் அல்லாமல், வைட்டமின் ஏ சத்து அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்பட்டு, வைட்டமின் ஏ விஷத்தன்மை உண்டாகாமல், உடலுக்குத் தேவையான அளவு மட்டுமே இந்த சத்து உறிஞ்சப்பட்டு, மற்றவை பீட்டா கரோடின் அன்டி ஆக்சிடென்ட்டாக இருந்து செயல்பட்டு, நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. வைட்டமின் ஏ சத்தாக மாற்றம் பெரும் சத்து சருமதிற்குள் நுழைந்து சரும அணுக்களின் சவ்வுகளை ஊக்குவித்து வளர்ச்சியை அதிகரித்து சேதங்களை சீரமைக்க உதவுகிறது.

விரைந்து வயது முதிர்ச்சியை உண்டாக்கும் தீங்கு விளைவிக்கும் நச்சுகளிடம் இருந்து சரும சவ்வுகளைப் பாதுகாக்க உதவுகிறது. வைட்டமின் ஏ க்ரீம் அதன் இயற்கையான இதமளிக்கும் தன்மைக் காரணமாக சரும எரிச்சல் மற்றும் சருமத்தில் சிவந்து போவதை தடுக்க உதவுகிறது. செபம் உற்பத்திக்கு நன்மை புரிகிறது, இதனால் கூந்தல் ஆரோக்கியத்துடன் ஈரப்பதத்துடன் இருக்க முடிகிறது.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த

முலாம் பழத்தில் காணப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்தான பொட்டாசியம் சிறந்த குழல் விரிப்பியாக செயல்புரிந்து இரத்த குழாய்களைத் தளர்த்தி, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது என்று ஜெர்ரி. பி.ஸ்காட் கூறுகிறார். அதிகரித்த அளவு இரத்த அழுத்தம் உடலுக்கு அழுத்தத்தை உண்டாக்கி, மன அழுத்த ஹார்மோனான கார்டிசால் வெளியீட்டிற்கு உதவுகிறது.

மூளைக்கு செல்லும் இரத்தம் மற்றும் ஆக்சிஜென் அளவை அதிகரிக்கும் பொட்டாசியம் மூளைக்கு அமைதியான உணர்வைத் தந்து, உடலில் இருக்கும் மன அழுத்த ஹார்மோன்களை குறைத்து, பதட்டத்திற்கான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது என்று அமெரிக்காவில் நாஷ்வில், ஹைப்பர் டென்ஷன் நிறுவனம், வெளியிட்ட ஆய்வில் குறிப்பிடப்படுகிறது.

MOST READ: ஒயிட் ஒயின் - ரெட் ஒயின் ரெண்டுல எது ஆரோக்கியம்? தெரிஞ்சிக்கங்க...

நீரிழிவைக் கட்டுப்படுத்த

நீரிழிவைக் கட்டுப்படுத்த

போஸ்டனில் உள்ள ஹார்வர்ட் பள்ளியில் பொது சுகாதாரத் துறையின் மருத்துவர். ஜோன் மான்சன் தனது ஆரம்பக் கட்ட ஆராய்ச்சியில் கூறுவது, முலாம் பழம், மேம்படுத்தப்பட்ட இன்சுலின் வளர்சிதை மாற்றத்துடன் தொடர்புடையதாக உள்ளது என்று கூறுகிறார். அதாவது, இரத்த சர்க்கரை அளவில் சீரான மாறுபாடு இருப்பதை அதாவது, அபாயம் விளைவிக்கும் அளவில் இரத்த சர்க்கரை அளவு உயராமல் தடுக்க உதவுகிறது. மேலும் சிறுநீரகத்தில் விஷத்தன்மை அழுத்தம் ஏற்படாமல் தடுக்க உதவுவதாகவும் அறியப்படுகிறது. இதனால் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

எலும்புப்புரை நோய்

எலும்புப்புரை நோய்

முலாம் பழத்தில் உள்ள தாவர ஊட்டச்சத்துகள் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, முலாம் பழத்தை உங்கள் உணவு அட்டவணையில் இணைத்துக் கொள்வதால், உங்கள் மூட்டு மற்றும் எலும்புகளில் உள்ள விஷத்தன்மை அழுத்தம் குறைந்து, அழற்சி குறைய உதவுகிறது. இந்த பகுதிகளில் உண்டாகும் நாட்பட்ட அழற்சி எலும்புப்புரை நோய் போன்ற நிலைகளுக்கு வழி வகுக்கும். எனவே, உங்கள் மூட்டு மற்றும் எலும்புப் பகுதிகளில் பலவீனமாக உணர்ந்தால், முலாம் பழத்தை நிறைய எடுத்துக் கொள்ளலாம்.

செரிமானத்தை ஊக்குவிக்க

செரிமானத்தை ஊக்குவிக்க

முலாம் பழத்தில் உணவு நார்ச்சத்து மிக அதிகம் இருப்பதால், ஆரோக்கியமான குடல் இயக்கம் மற்றும் ஆரோக்கியமான செரிமானம் உறுதி செய்யப்படுகிறது. சீரான அளவு உணவு நார்ச்சத்து எடுத்துக் கொள்வதால் உங்கள் மலம் கனம் அதிகரித்து, மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது, வழக்கமான குடல் இயக்கம் சாத்தியப்படுகிறது.

கர்ப்ப காலத்தில்

கர்ப்ப காலத்தில்

முலாம் பழத்தில் உள்ள போலேட் சத்து கர்ப்பிணிகள் கருவில் உள்ள குழந்தையின் பிறப்புக் குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது. நரம்பு தொடர்பான பாதிப்புகளைத் தடுத்து, எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் குழந்தையை பிரசவிக்க உதவி செய்கிறது.

எப்படி தேர்வு செய்ய வேண்டும்?

எப்படி தேர்வு செய்ய வேண்டும்?

மஞ்சள்-ஆரஞ்சு கலந்த நிறத்தில் உள்ள பழத்தைத் தேர்வு செய்ய வேண்டும். கெட்டியாக, கனமாக, பழத்தின் மேல் பகுதியில் மிகக் குறைந்த அளவு திட்டுக்களுடன் காணப்படும் பழங்களைத் தேர்வு செய்ய வேண்டும். நிறைய திட்டுக்களுடன் சுத்தம் இல்லாமல் இருக்கும் பழத்தில் சல்மோனெல்லா கிருமிகளுக்கான அபாயம் அதிகரித்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆகவே சுகாதாரமாக கிடைக்கும் இடத்தில் பழங்களை வாங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் பழத்தை உட்கொள்ளும் முன்பு நன்றாகச் சுத்தம் செய்து பின்பு சாப்பிடலாம்.

சில தினங்கள் கழித்து உட்கொள்ளும் நிலை இருந்தால், காயாகவே வாங்கி சேகரித்து வைக்கலாம். முலாம் காய் பழத்தை விட கடினத் தன்மையுடன், லேசான பச்சை நிறத்தில் இருக்கும். அறை வெப்பநிலையில் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை வைத்துக் கொள்ளலாம். முலாம் பழம் பழுக்க பழுக்க அதன் சுவை அதிகரித்துக் காணப்படும். அதனால் பெருமளவில் மக்கள் அதன் தோல் பகுதி நன்கு பழுக்கும் வரை காத்திருந்து அதனை உட்கொள்வார்கள்.

சுவைப்பதற்கு சில குறிப்புகள்

சுவைப்பதற்கு சில குறிப்புகள்

. காலை உணவாக ஒரு சிறந்த தேர்வு முலாம் பழம். பசியுணர்வைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவு இது. பழ சாலட்டில் சேர்த்து இதனை எடுத்துக் கொள்ளலாம்.

. முலாம் பழம், தர்பூசணி, பப்பாளி, அன்னாசிப் பழம், மாம்பழம் போன்ற பழங்களை ஒன்றாகச் சேர்த்து, அதில் சிறிதளவு சாக்லேட் சிரப் சேர்த்து சாப்பிடுவதால் அதன் சுவை அதிகரிக்கும்.

. புத்துணர்ச்சி தரும் சுவையை உண்டாக்க, அன்னாசிப் பழத்துடன் முலாம் பழம் சேர்த்து அதில் க்ரீக் யோகர்ட் சேர்த்து சாப்பிடலாம்.

MOST READ: உயிர எடுக்கிற குழி முதல்தடவ ஒரு உயிரை காப்பாத்திருக்கு... என்ன நடந்தது தெரியுமா?

கவனிக்க வேண்டிய குறிப்பு

கவனிக்க வேண்டிய குறிப்பு

முலாம் பழம் சில நேரங்களில் ஒவ்வாமை பாதிப்பை உண்டாக்கும். ஆனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் உண்டாவதில்லை. இதய நோய்க்கான மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள், முலாம் பழம் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். காரணம், முலாம் பழம், மருந்துடன் தொடர்பு ஏற்படுத்தி, இரத்தத்தில் பொட்டாசியம் அளவை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Can Diabetic Patients Eat Muskmelon And Watermelon?

The humble cantaloupe may not get as much respect as other fruits. But it should. This tasty, although odd looking, melon is packed with nutrients. If you don’t think about nabbing a cantaloupe each time you hit the produce section of your grocery store, read on to learn why you may want to think agai
Story first published: Friday, May 3, 2019, 11:30 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more