Latest Updates
-
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
உயிர எடுக்கிற குழி முதல்தடவ ஒரு உயிரை காப்பாத்திருக்கு... என்ன நடந்தது தெரியுமா?
ரோட்டில் இருக்கும் குழிகளால் ஒருவர் உயிர் பிழைத்த அதிசயம் பற்றிய கதையைக் கேளுங்கள். அப்படி என்ன நடந்தது என்பது பற்றிய விவரத்தைத் தான் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
தினந்தோறும் சாலையில் வாகனங்களை ஓட்டிப் போகிறோம் வருகிறோம். ஒவ்வொரு நாளும் எதிர்பாராத விதமாக நிறைய விபத்துகளையும் கண்கூடாக பார்க்கத்தான் செய்கிறோம். அதிலும் நம் நாட்டில் நிறைய விபத்துகள் ஏற்பட சாலையின் மோசமான நிலையே காரணமாக அமைகிறது. ரோட்டில் இருக்கும் குழிகள், அதில் தேங்கி நிற்கும் மழைநீர் போன்ற பிரச்சினைகளே விபத்துகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

ரோட்டில் இருந்த குழியில் விட்டு வண்டி தடுமாறியதால் விபத்து என்று நிறைய செய்திகளை பக்கம் பக்கமாக படிக்கிறோம்,கேட்கிறோம். இப்படி ஏகப்பட்ட ரிப்போர்ட் இருந்தாலும் தற்போது ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்துள்ளது. ரோட்டில் இருந்த குழிகளால் ஒருவர் உயிர் பிழைத்து உள்ளார். இந்த அதிசயம் எப்படி நடந்தது, வாங்க பார்க்கலாம்.

5 9 வயது பெரியவர்
கிரேட்னா என்ற மலேசியாவை சேர்ந்த 5 9 வயது பெரியவர் வேகமான இதயத் துடிப்பு காரணமாக ஆம்புலன்ஸில் அவசர அவசரமாக மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அவரது இதயத் துடிப்பு 200 பீட்ஸ் /நிமிடங்கள் ஆக இருந்தது. ஆனால் என்ன ஆச்சரியம் போகும் வழியில் இருந்த சாலை குழிகளில் வண்டி வேகமாகச் ஏறிச் சென்றதால் அவரின் இதயத் துடிப்பு நார்மலாகி உள்ளது. இதனால் அவர் உயிரும் பிழைத்து உள்ளார்.

மருத்துவர்களின் கருத்து
சாலையில் உள்ள குழிகள் இதயத்திற்கு எலக்ட்ரிக்கல் ஷாக் மாதிரி செயல்படுகிறது. இதனால் அவரின் இதயத் துடிப்பு பழைய நிலைக்கு வந்துள்ளது. மருத்துவமனையில் கொடுக்கப்படும் எலக்ட்ரிக்கல் ஷாக்கை சாலை குழிகளே செய்துள்ளது என்று மருத்துவர்கள் ஆச்சர்யமாக கூறியுள்ளனர்.

அதிசயம் தான்!
இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க, ஏகப்பட்ட குழிகள் இருந்தும் நம்ம இந்தியாவில இன்னும் இந்த மாதிரி எதுவும் நடக்கலையே, ஒருவேள நம்ம மக்கள் குழி ரைடிங் பண்ணிருக்க மாட்டாங்களோ. ஓ! அதான் லவ்வர்ஸ் இதயத் துடிப்பு நார்மலா இருக்கோ!



Click it and Unblock the Notifications
