For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேனை இப்படி சாப்பிட்டிருக்கீங்களா? சாப்பிடுங்க இத்தனை நோயும் பறந்துடுமாம்...

|

ராயல் ஜெல்லி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. புற்று நோயை தடுப்பதும், கீமோதெரபி சிகிச்சையில் உதவுவதும் ராயல் ஜெல்லியின் குறிப்பிடத்தகுந்த நன்மைகள் ஆகும். இரத்த அழுத்தத்தைக் குறைப்பது, கருவுறுதலில் உண்டாகும் பிரச்சனைகளைப் போக்குவது, கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுவது,

Royal Jelly

கல்லீரலைப் பாதுகாப்பது, அழற்சியைக் குறைப்பது, செரிமான கோளாறுகளைக் குணப்படுத்துவது, இளம் வயது முதிர்ச்சியைத் தடுப்பது, எடை குறைப்பில் உதவுவது, இரத்த ஓட்டத்தை அதிகரிப்பது போன்றவையும் ராயல் ஜெல்லியின் பயன்கள் ஆகும். அட! ரொம்ப குழம்பாதீங்க. நம்ம தேனுக்கு இன்னொரு பேரு தான் ராயல் ஜெல்லி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ராயல் ஜெல்லி

ராயல் ஜெல்லி

உடலுக்கு பல வித நன்மைகளை வாரி வழங்கும் தேன் தேனீக்களில் இருந்து கிடைக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் மற்றொரு ஊட்டச்சத்து மிகுந்த உணவு இதே பூச்சியிடம் இருந்து கிடைக்கும், அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அது ராயல் ஜெல்லி . தேன் பூச்சியின் தலையில் இருந்து எடுக்கப்படும் ஒரு சாறு இந்த ராயல் ஜெல்லி. இந்த ராயல் ஜெல்லி தேன் கூட்டில் சேகரிக்கப்படுகிறது.

MOST READ: சாப்பிட்டதும் வயிறு கம்முனு கெடக்கா? இத செஞ்சு பாருங்க சரியாயிடும்...

தேன் பூச்சிகள்

தேன் பூச்சிகள்

தேன் பூச்சிகள் பிறந்தவுடன் வேலைக்கார தேனீக்கள் இவற்றிற்கு ராயல் ஜெல்லியை உணவாகக் கொடுக்கின்றன. இதனால் புதிதாகப் பிறந்த தேன் பூச்சிகள் ஆரோக்கியமாக அதிக ஊட்டச்சத்துகளுடன் பிறந்த சில தினங்கள் உயிர் வாழ்கின்றன. இருப்பினும் பிறந்த 3-4 நாட்கள் ஆனவுடன் அவை ராயல் ஜெல்லியை சுவைப்பதில்லை. வலிமை மிகுந்த ராணி தேனீக்கு இந்த ராயல் ஜெல்லி மிகவும் முக்கியமாகும். உண்மையில் ராணி தேனீக்கள் புழுக்களாக இருக்கும் சமயத்தில் ராயல் ஜெல்லி அடங்கிய தேன் கூட்டில் மட்டுமே கிடத்தப்படுகின்றன. ராணி தேனீக்கான புறத்தோற்றவியல் வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கிய காரணமாக அமைகிறது.

ராயல் ஜெல்லி மாத்திரைகள்

ராயல் ஜெல்லி மாத்திரைகள்

ராயலக்டின் என்னும் ஒரு ஒற்றைப் புரதம் தோற்ற அமைப்பில் ராணி தேனீக்கான ஒரு முக்கிய மாற்றத்தைத் தருகிறது. இதன் காரணமாக அவற்றுள் சினைப்பை வளர்ச்சி பெற்று, மற்ற தேனீக்களை விட மிகப் பெரிய உருவத்தைப் பெறுகின்றன. மேலும், சாதாரண தேனீக்களை விட ராணி தேனீக்களுக்கு 20 மடங்கு அதிக ஆயுட்காலத்தைப் பெற்றுத் தருகின்றன. பொதுவாக தேனீக்கள் நல்ல தொழிலாளர்களாக இருப்பதால், ஒரு ஒற்றைக் காலனியில் 500 கிராம் அளவிற்கான ராயல் ஜெல்லியை ஐந்து முதல் ஆறு மாத காலம் வரை சேமித்து வைத்துக் கொள்கின்றன.

ஒரு ராணி தேனீ இவ்வளவு அதிக ராயல் ஜெல்லியை உட்கொள்ள முடியாது என்ற காரணத்தினால், இந்த ஜெல்லியை மாத்திரையாக தயாரிக்கும் முறை உருவாகி சந்தையில் விற்பனையாகிறது. உணவு அட்டவணையில் அல்லது ஆர்கானிக் உணவு கடைகளில் இந்த ராயல் ஜெல்லியை நாம் காண முடியும்.

எங்கு கிடைக்கும்?

எங்கு கிடைக்கும்?

உழவர் சந்தைகளில் கூட இந்த ராயல் ஜெல்லியை நம்மால் வாங்க முடியும். ராயல் ஜெல்லி துகள் மற்றும் தூள்களாக கிடைக்கப்பெற்று, சாலட், ஸ்மூதி, யோகர்ட் மற்றும் குளிர்ச்சியான பானங்களில் பயன்படுத்தப்படுகிறது. ராயல் ஜெல்லியை சூடு செய்து பயன்படுத்துவதால் அவற்றுள் உள்ள என்சைம் தன்மைகள் மற்றும் மனித உடலுக்கு நன்மை தரும் சில வகை புரதங்கள் ஆகியவை அழிக்கப்படுவதால் அதனை அப்படியே பயன்படுத்த வேண்டும். இந்த ராயல் ஜெல்லி பற்றி பரவலாக அறியப்படவில்லை என்றாலும், இதனைப் பற்றி அறிந்து இதனை தங்கள் உணவில் எடுத்துக் கொள்பவருக்கு சிறந்த நன்மைகளை வாரி வழங்குகிறது.

ஊட்டச்சத்து மதிப்பு

ஊட்டச்சத்து மதிப்பு

ராயல் ஜெல்லி பல்வேறு உயர் வகை ஊட்டச்சத்துகளைக் கொண்டது. கால்சியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ், சிலிகான், சல்பர், பொட்டாசியம் போன்ற கனிமங்கள் மற்றும் பி குடும்ப வைட்டமின்கள், பயோடின், இனோசிடல், போலேட், ந்யுக்லிக் அமிலம், காமா க்லோபுளின், மற்றும் மனித உடல் உற்பத்தி செய்ய முடியாத 8 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உட்பட 17 விதமான அமினோ அமிலங்கள் போன்றவை இந்த ராயல் ஜெல்லியில் இருந்து கிடைக்கின்றன.

MOST READ: மீன் முள் எடுக்கப்போய் தொண்டைக்குள் ஸ்பூன் மாட்டிக் கொண்ட விபரீதம் ...

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த

மனிதர்களின் இரத்த அழுத்த அளவில் நேரடி பாதிப்பை உண்டாக்கும் சில வகைப் புரதங்கள் ராயல் ஜெல்லியில் உள்ளதாக சில ஆராய்ச்சிகள் குறிப்பிட்டுள்ளன. ஹைட்ரோ லைசெட் என்னும் புரதம், இரத்த அழுத்தத்தில் நீண்ட கால தாக்கத்தை உண்டாக்குகிறது.

இதனோடு இந்த ஜெல்லியில் இருக்கும் பொட்டாசியம் இணையும்போது, குழல் விரிப்பியாக செயல்பட்டு, இரத்தக் குழாய் மற்றும் இதயத்தில் உள்ள அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதனால் இதய நிலையில் எந்த ஒரு பாதிப்பு உண்டாவதையும் தடுக்கும் தன்மை ராயல் ஜெல்லிக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.

கொலஸ்ட்ரால் சமநிலை

கொலஸ்ட்ரால் சமநிலை

ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ரால் என்றவுடன், இனிப்பு மற்றும் சுவை மிகுந்த உணவுகளே மக்களுக்கு நினைவிற்கு வரும். அந்த வகை உணவு அல்ல ராயல் ஜெல்லி. உண்மையில், ராயல் ஜெல்லியை உங்கள் தினசரி உணவு அட்டவணையில் இணைத்துக் கொள்வதால், உங்கள் உடலின் கெட்ட கொலஸ்ட்ரால் குறிப்பிடத்தகுந்த அளவு குறைவதாக சில ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. ராயல் ஜெல்லி தமனித்தடிப்பு மற்றும் மாரடைப்பு, வாதம் போன்ற இதய பாதிப்புகள் போன்றவற்றைத் தடுக்க உதவுகின்றன.

கருவுறுதல்

கருவுறுதல்

ராணித் தேனீக்கு கருவுறும் வாய்ப்பை உண்டாக்கு ராயலக்டின் புரதம் மனித இனப்பெருக்கத்திற்கும் உதவியாக இருக்கும் என்று சிலர் நம்புகின்றனர். ஆனால் இனப்பெருக்க செயல்பாடுகளில் ராயல் ஜெல்லியில் செயல்பாடு பற்றி முழுமையாகத் தெரியவில்லை. அதே சமயம், ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை ராயல் ஜெல்லியில் இருப்பதால், மனைவி கருவுறும் வாய்ப்பு அதிகரிப்பதாகவும் நம்பப்படுகிறது.

புற்றுநோயைத் தடுக்க

புற்றுநோயைத் தடுக்க

ராயல் ஜெல்லியில் அதிக அளவு அன்டி ஆக்சிடென்ட் இருப்பதாக 2007ம் ஆண்டு ஜப்பானில் நடத்திய ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அன்டி ஆக்சிடென்ட்கள் BPA வை தடுக்கும் திறனுடன் இருப்பதாகக் கூறபபடுகிறது. இந்த BPA சுற்றுபுறத்தில் காணப்படும் ஈஸ்ட்ரோஜென் ஆகும். இந்த ஈஸ்ட்ரோஜென் மார்பக புற்று நோய் அளவை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. எனவே, ராயல் ஜெல்லி குறிப்பிட்ட அளவு உங்கள் உணவில் இணைத்துக் கொள்வதால் இந்த வகை புற்று நோய் தடுக்கப்படுகிறது.

MOST READ: டேய் எங்கலாம் ரொமான்ஸ் பண்றதுனு வெவஸ்தையே இல்லயா? நீங்களே பாருங்க மக்களே!

கீமோதெரபி பாதிப்பு

கீமோதெரபி பாதிப்பு

கீமோதெரபி முகவர்கள், புற்று நோய் சிகிச்சையில் பெருமளவில் உதவி புரிவதை நம்மால் மறுக்க முடியாது, என்றாலும் இதனால் அழற்சி மற்றும் இதய செயலிழப்பு போன்ற பல்வேறு பக்க விளைவுகள் உண்டாகிறது. ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், சினைப்பை புற்று நோய், சிறுநீரகப் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், தோலின் கரும்புற்று நோய் மற்றும் பல வித கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பக்லிடக்செல் ஒரு உதாரணம் ஆகும். எதிர்மறை பக்க விளைவுகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கும் ஒரு பொருளாக உள்ளது ராயல் ஜெல்லி என்று 2016ம் ஆண்டு நடைபெற்ற ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.

அழற்சியைக் குறைக்க

அழற்சியைக் குறைக்க

சுறுசுறுப்பாக இயங்கும் என்சைம்கள் மற்றும் வியப்பு மிக்க வைட்டமின்கள் ஆகியவை சேர்ந்து, ராயல் ஜெல்லிக்கு ஒரு வலிமையான அன்டி ஆக்சிடென்ட் என்ற தகுதியைத் தருகிறது. ஆனால் இந்த ராயல் ஜெல்லியை அதிக வெப்பத்தில் வைக்கும்போது, இதன் என்சைம்கள் அதன் தகுதியை இழக்க நேரிடும் இதனால் அவற்றின் நன்மைகள் சிதைந்து விடும். இந்த விதத்தில், ராயல் ஜெல்லியை உங்கள் உடலில் மேல்புறமாக தடவும்போது, உடலில் ஏற்படும் அழற்சிகள் மற்றும் வீக்கங்கள் குறையலாம். வலியும் குறையலாம்.

வயது முதிர்வைத் தடுக்க

வயது முதிர்வைத் தடுக்க

ராயல் ஜெல்லி, ராணி தேனீயின் ஆயுட்காலத்தை அதிகரிக்க பயன்படுவது போல், மனித உடலிலும், வயது முதிர்ச்சியை உண்டாக்கும் தீங்கு விளைவிக்கும் கூறுகளை எதிர்த்து போராடி, இளமையான தோற்றத்தைத் தர ராயல் ஜெல்லி உதவுகிறது. ராயல் ஜெல்லியில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி, சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் பராமரிக்க உதவுகிறது, முடி உதிர்வைத் தடுக்கிறது, தசைகள் சேதமடைவதைத் தடுக்கிறது, மற்றும் நாட்பட்ட நோய்களைத் தடுத்து மனித ஆயுட்காலத்தை அதிகரிக்கிறது.

எடை இழப்பு

எடை இழப்பு

ராயல் ஜெல்லியில் உள்ள முக்கிய கூறான லெசித்தின், சிறந்த முறையில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது, கல்லீரல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது, ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. மேலே கூறிய அனைத்தும் எடை இழப்பிற்கு உதவுகிறது. ராயல் ஜெல்லியில் உள்ள புரதம் காரணமாக வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது, இவை எல்லாம் சேர்ந்து சீரான எடை இழப்பை ஊக்குவிக்கிறது.

வளர்சிதை மாற்றம்

வளர்சிதை மாற்றம்

மனித உடல் உற்பத்தி செய்ய முடியாத 8 அத்தியாவசிய அமினோ அமிலங்களைக் கொண்டிருக்கும் ராயல் ஜெல்லி, ஒரு முக்கிய உணவு ஆதாரமாக விளங்குவதில் எந்த ஒரு தவறும் இல்லை. இந்த எட்டு அமினோ அமிலங்கள் கிடைப்பதற்கு மிகவும் கடினமானவை ஆகும்.

ஆனால், புதிய புரதங்கள் உடலில் கலக்கவும், சீரான வளர்சிதை மாற்றத்திற்கும் இவை மிகவும் அவசியம் ஆகும். இதனால் அணுக்கள் புதுபித்தல், தசை வளர்ச்சி அதிகரிப்பு, எலும்பு வலிமை அதிகரிப்பு, உடல் செயல்பாடுகளில் ஹார்மோன் மற்றும் என்சைம் சீரமைப்பு போன்றவற்றிற்கு ராயல் ஜெல்லி உதவுவதால், ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறை சாத்தியமாகிறது.

MOST READ: பற்களுக்குள் சீழ்கட்டி இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது? என்ன செஞ்சா பல் தப்பிக்கும்?

கவனத்தில் கொள்ள வேண்டியது

கவனத்தில் கொள்ள வேண்டியது

பலர் தேன், மகரந்தம், மற்றும் ராயல் ஜெல்லி போன்றவற்றிற்கு ஒவ்வாமை கொண்டிருப்பார்கள். இந்த ஒவ்வாமை பாதிப்பு தீவிர நிலையை அடையும்போது, அயல்புரத ஒவ்வாமை போன்ற பாதிப்பு உண்டாகலாம். ஆகவே ராயல் ஜெல்லியை உங்கள் உணவில் இணைத்துக் கொள்வதற்கு முன்னர், மருத்துவர் அல்லது ஒவ்வாமை நிபுணர் ஆகியோருடன் கலந்தாலோசித்து பின்பு அதனை இணைத்துக் கொள்ளவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Potential Health Benefits Of Royal Jelly

The health benefits of royal jelly include its ability to prevent certain types of cancer as well as aid in chemotherapy, lower blood pressure, treat sexual infertility, lower cholesterol levels, protect the liver, reduce inflammation, heal digestive disorders, prevent premature aging, help in weight loss, and increase circulation.
Story first published: Thursday, May 2, 2019, 12:40 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more